TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 17TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 17TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 17TH WILL BE UPDATED HERE FOR THOSE WHO ARE PREPARING FOR TNPSC COMPETITIVE EXAMS, WHICH WILL BE MORE USEFUL TO ASPIRANTS

 

உலகிலேயே மலிவான விலையில் தூய குடிநீர்:

  • பிந்தேஸ்வர் பதக் அவர்களின் “சுலாப் இண்டர்நேசனல்” நிறுவனம் சார்பில், பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஹரிபோல் ஏரிப்பகுதியில் “சுலாப் சவுச்சல்யா” என்ற திட்டத்தின் மூலம் உலகிலேயே மிகவும் மலிவான முறையில் தூய குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது
  • ஒரு லிட்டர் 0.50, பைசா மட்டுமே.
  • “சுலாப் ஜல்” என்ற திட்டத்தின் மூலம் மாசடைந்த ஏரி அல்லது குளங்களை தூய்மையாக்கும் திட்டம் இதுவாகும்

“2018ம் ஆண்டின் சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்” விருது:

  • 2018ம் ஆண்டின் சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் விருது, பேர்பேக்ஸ் நிதிநிறுவன அதிபர், “பிரேம் வஸ்தா”, அவர்களுக்கு வழங்கப்பட்டது
  • மும்பையில் நடைபெற்ற விழாவில் இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது

“மீர்கட் ரேடியோ தொலைநோக்கி”:

  • உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அதிக சக்திவாய்ந்த தொலைநோக்கி “64-dish MeerKAT radio telescope” என்ற பெயரில் தென்னாப்ரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற 2030ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும்
  • 330 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இது உருவாக்கப்பட்டு வருகிறது.
  • சுமார் 3000 டிஷ் இங்கு பொருத்தப்பட உள்ளது

இஸ்ரோவின் “தொலை மருந்தக மையம்”:

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமான “இஸ்ரோ”, ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் சுகாதாரத் துறையுடன் இணைந்து, அம்மாநிலத்தில் “தொலை மருந்தக மையத்தை” துவக்க உள்ளது
  • 12700 அடி உயர அமர்நாத் புனித பயண இடத்தில இந்த தொலை மருந்தக மையம் அமைய உள்ளது

இந்த ஆண்டின் “பிரிட்டிஷ் இந்தியர்” விருது;

  • இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த இந்திய வம்சாவழி சிறுவன், “ஈஸ்வர் சர்மா”, “2018ம் ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் இந்தியர்” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • 8 வயது சிறுவனான ஈஸ்வர் சர்மா, யோகாவில் சிறப்பாக செயலாற்றி 11 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய யோகா சாம்பியன் பட்டதை வென்றுள்ளார்

இந்தியாவின் முதல் டர்பைன் – மின்சார உயர்மட்ட கார்:

  • இந்தியாவின் முதல் டர்பைன் – மின்சார உயர்மட்ட கார், “வசிராணி சூல்”, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டது
  • ஒவ்வொரு சக்கரத்திற்கும் தனித்தனி மின்சார மோட்டார்கள் உள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது

8-வது இந்திய – ஓமன் கூட்டுக் குழு கூட்டம்:

  • 8-வது இந்திய – ஓமன் கூட்டுக் குழுக் கூட்டம், மஸ்கட் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமை தாங்கினார்
  • “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “இந்தியாவில் முதலீடு” ஆகிய திட்டங்கள் மூலம் ஓமன் நாட்டு அரசை முதலீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது

ஆக்ஸ்போர்ட் விருதுகள்:

  • கரக்பூர் அகில இந்திய தொழில்நுட்பக் கழகம், வட மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளில், குறிப்பாக கங்கை – பிரம்மபுத்திர டெல்டா பகுதிகளில் நிலத்தடி ஆர்செனிக் பாதிப்புகளை களைய புதுமையான தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுத்தியதற்காக “ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புதுமை விருது” வழங்கப்பட்டது

உலகின் முதல் LEAP நுண்ணோக்கி:

  • சென்னை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் சார்பில் நாற்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில், “உலகின் முதல் அணு (LEAP) நுண்ணோக்கி” உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது
  • இது ரிமோட் மூலம் இயங்கும் திறன் கொண்டது

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இடைகால பயிற்சியாளர்:

  • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணி வீரர், “ரமேஸ் பவார்” நியமிக்கப்பட்டுள்ளார்
  • இதற்கு முன்னர் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த துஷார் அரோதே, ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார்

“மென்மை சக்தி 3௦” குறியீடு:

  • “பிரபல போர்ட்லாந்து நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் “மேன்மை சக்தி 3௦” குறியீடு வெளியிடப்பட்டுள்ளது
    1. முதல் இடம் = இங்கிலாந்து
    2. 2-வது இடம் = பிரான்ஸ்
    3. 3-வது இடம் = ஜெர்மனி
    4. இந்தியா இப்பட்டியலில் இடம் பெறவில்லை

7-வது உலக ஜூனியர் வூசு சாம்பியன்சிப்:

  • பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் நடைபெற்ற 7-வது உலக ஜூனியர் வூசு சாம்பியன்சிப் போட்டிகளில் 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றது
  • பதக்கப் பட்டியலில் இந்தியா 17-வது இடத்தை பிடித்தது
  • 26 பதக்கங்களுடன் ஈரான் முதல் முறையாக முதலிடத்தை பிடித்தது

இந்தியாவின் முதல் ராணுவ பாதுகாப்பு மையம்:

  • இந்தியாவின் முதல் ராணுவ பாதுகாப்பு மையம் (1st Defence Incubator), ஹைத்ராபாத் நகரில் அமைய உள்ளது
  • இங்கு இந்தியாவின் ராணுவ ஏவுகணை மேம்பாட்டு மையம் மற்றும் விமான ஆராய்ச்சி மையம் போன்றவை அமைய உள்ளது
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.