TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 18TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 18TH

TNPSC DAILY CURRENT AFFAIRS JULY 18TH WILL BE UPDATED HERE FOR THOSE WHO ARE PREPARING FOR TNPSC EXAMS, WHICH IS MORE USEFUL TO THEM.

 

அணில் ஸ்வரூப் குழு:

  • மத்திய அரசு, “தேசிய மாணவர் படை” (NCC – NATIONAL CADET CORPS) மற்றும் “நாட்டு நலப்பனித் திட்டம்” (NSS – NATIONAL SOCIAL SERVICE) ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து வலிமையாக்கும் முறையினை ஆராய்ந்து அறிக்கை தர, முன்னாள் மத்திய கல்வித்துறை செயலாளர் “அணில் ஸ்வரூப்” தலைமையில் குழு ஒன்றினை அமைத்துள்ளது
  • இக்குழு, இந்த 2 அமைப்புகளையும் விரிவுபடுத்தல், வலிமையாக்குதல், பயிற்சி மைய உட்கட்டமைப்பு, மனித ஆற்றலை குறைத்தல் போன்ற பல்வேறு விவரங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க உள்ளது

“ஆயுஸ்” கல்விக் கழக தலைமை அலுவலர்கள் பங்கேற்ற கருத்தரங்கம்:

  • மத்திய “ஆயுஸ்” (AYUSH) அமைச்சகத்தின் கீழுள்ள “அகில இந்திய ஆயுஷ் கல்விக் கழகம்” (AIIA – All India Institute Of Ayurveda) சார்பில் புது தில்லியில் “ஆயுஸ் கல்விக் கழக தலைமை அலுவலர்களுக்கான கருத்தரங்கம்” (CONFERENCE OF HEADS OF AYUSH NATIONAL INSTITUTES) நடைபெற்றது
  • நாடு முழுவதும் உள்ள ஆயுஸ் கல்விக் கழகங்களில் கல்வியின் தரத்தை உயர்த்துதல், ஆராய்ச்சி, மருத்துவமனை வசதியை அதிகரித்தல் தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது

இந்தியாவின் முதல் பசுமைக்கள திறன் பயிற்சி மையம்:

  • இந்தியாவின் முதல் பசுமைக்கல திறன் பயிற்சி மையம் (India’s first greenfield skill training centre), ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள பராங்கா பகுதியில் அமைக்கப்பட உள்ளது
  • இதற்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அடிக்கல் நாட்டினார். தேசிய திறன் பயிற்சி மையம் சார்பில், பல்வேறு குறுகிய கால அம்ற்றும் நடுத்தர கால பயிற்சிகள் இங்கு வழங்கப்படும்

முடி வளர்வதற்கான புதிய தொழில்நுட்ப முறை:

  • டெல்லி அகில இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், முடி உதிர்தலை தடுத்து முடி புதிதாக வளர்வதற்கு புதிய வகை “ஜெல்” (நீர்மக்கட்டி கூழ்) உருவாக்கி உள்ளனர்
  • இது பட்டு முட்டையில் இருந்து அதன் புரதத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. “பட்டு புரதம் மற்றும் ஜெலட்டின்” ஆகிய இரண்டையும் சேர்த்து இதனை உருவாக்கி உள்ளனர்

உலகில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள்:

  • பிரபல போர்ப்ஸ் இதழ், உலகில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது
    1. முதல் இடம் = அமெரிக்க குத்துச்சண்டை சண்டை வீரர் பிளாயிட் மேவெதர்
    2. 2-வது இடம் = ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனே
    3. 5-வது இடம் = ஹாலிவுட் நடிகர் ராக் எனப்படும் டிவைன் ஜான்சன்
    4. 8-வது இடம் = லியோனல் மெச்சி
    5. 1௦-வது இடம் = கிறிஸ்டியானோ ரொனால்டோ
    6. 76-வது இடம் = இந்தி நடிகர் அக்சை குமார்
    7. 82-வது இடம் = இந்தி நடிகர் சல்மான் கான்

ஆயுத உரிமம் முறைக்கான தேசிய தகவல் தளம்:

  • நாடு முழுவதும் ஆயுதங்கள் கையாள உரிமம் பெற்றுள்ளவர்கள் விவரம், வருகின்ற ஏப்ரல் 2௦19ம் ஆண்டிற்குள் “தேசிய தகவல் தளம்” ஒன்று உருவாக்கப்பட்டு அதில் பதிவேற்றம் செய்யப்படும் (NATIONAL DATABASE OF ARMS LICENSE SYSTEMS)
  • இவர்களுக்கு என்ற தனி பிரத்யோக அடையாள எண் ஒன்றும் வழங்கப்படும்

ஹரியானா அரசின் “பவுதகிரி இயக்கம்”:

  • ஹரியானா மாநில அரசு, அம்மாநிலத்தில் பசுமைவெளியை அதிகரிக்க ஏதுவாக மரக்கன்று நடும் திட்டத்தை, “பவுதகிரி இயக்கம்” என்ற பெயரில் துவக்கி உள்ளது
  • “மகிழம்பூ” செடியை நட்டு அம்மாநில முதல்வர் இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார்
  • இந்த இயக்கத்தின் கீழ் அம்மனியால்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 22 லட்சம் மாணவர்கள் மூன்று மாதத்திற்குள் பல்வேறு வகையான் மரக் கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது
  • ஒவ்வொரு மாணவருக்கும் 6 மாதத்திற்கு பிறகு ஊக்கத் தொகையாக ரூ. 5௦ வழங்கப்படும்

அகில இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புதிய தலைவர்;

  • மத்திய காபினெட் நியமனக் குழு, “அகில இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின்” தலைவராக அணில் சஹாஸ்ரபுதே அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை வழங்கியுள்ளது
  • அகில இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், நவம்பர் 1945ம் ஆண்டு துவங்கப்பட்டது

எல்பின்ஸ்டோன் ரயில் நிலையம் பெயர் மாற்றம்:

  • மும்பை நகரின் பிரபல எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தின் பெயரை, “பிரபாதேவி ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்துள்ளது மேற்கு ரயில்வே நிர்வாகம்
  • பம்பாய் ஆளுநராக 1853ல் இருந்து 1860 வரை எல்பின்ஸ்டோன் பிரபுவின் நினைவாக அவரின் பெயர் இந்த ரயில் நிலையத்திற்கு வைக்கப்பட்டது.
  • 3௦௦ ஆண்டுகள் பழமைவாய்ந்த “பிரபாதேவி” ஆலையத்தின் சிறப்பை பிரதிபலிக்கும் வகையில், இந்த ரயில் நிலையத்திற்கு பிரபாதேவி ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது

எத்தோப்பியா மற்றும் எரித்திரியா இடையே 2௦ ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை:

  • 2௦ ஆண்டுகளுக்கு பிறகு எத்தோப்பியாவின் அட்டிஸ்அப்பா நகரில் இருந்து அண்டை நாடான எரித்திரியா நாட்டிற்கு பயணிகள் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது
  • எரித்திரியா நாட்டின் அஸ்மார நகருக்கு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. எத்தோப்பியாவின் ஒரு பகுதியாக இருந்த எரித்திரியா, 1993ம் ஆண்டு தனிநாடாக சூத்திரம் பெற்றது.

4ஜி மொபைல் வேகக் குறியீடு:

  • உலக அளவில் மொபைல் போன் வேக ஆய்வில், இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது தெரியவந்துள்ளது
  • ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 124 நாடுகளில், இந்தியா 1௦9-வது இடத்தை பிடித்துள்ளது
  • இந்தியாவில் சராசரி 4ஜி தொழில்நுட்ப வேகம் = 9.12 எம்.பி.பி.எஸ் ஆகும்
  • முதல் இடத்தில் உள்ள கத்தார் நாட்டின் 4ஜி தொழில்நுட்ப வேகம் = 63.22 எம்.பி.பி.எஸ் வேகமாகும்
  • இந்தியா அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை நாடுகளை விட பின்தங்கி உள்ளது
  • அதேநேரம் பிராட்பேன்ட் தொலைபேசி வேகத்தில் இந்தியா 67-வது இடத்தை பிடித்துள்ளது

வியாழன் கோளின் புதிய 12 நிலவுகள்:

  • அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள், வியாழன் கோளினை சுற்றும் புதிய 12 நிலவுகளை கண்டுபிடித்துள்ளனர்
  • இதன் மூலம் வியாழன் கோளின் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது
  • இந்த நிலவிற்கு Valetudo எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ரோமானியக் கடவுளான ஜூபிட்டரின் பேத்தியின் பெயராகும்.

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்:

  • ஜூலை 18ம் தேதி, நெல்சன் மண்டேலா சர்வதேச தினம், உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த ஆண்டு அவரின் 1௦௦-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2௦௦9ம் ஆண்டு அஈகிய நாடுகள் அவை, “நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தை” அறிவித்தது
  • 27 ஆண்டுகள் கருப்பு இன மக்களுக்காக சிறையில் இருந்தவர்.

 

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.