TNPSC Daily Current Affairs July 24th

TNPSC Daily Current Affairs July 24th

TNPSC Daily Current Affairs July 24th will be updated here, which includes national, international and all important current affairs informations.

மாநிலத்தின் அணைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்த முதல் முதல்வர்

  • உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத், அம்மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களுக்கும் தந்து 16 மாத அட்சி காலத்திலேயே சென்று வந்து சாதனை படைத்துள்ளார்
  • குறுகிய காலத்தின் மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களுக்கும் சென்று வந்த முதல் முதல்வர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்சிப்

  • உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்சிப் போட்டிகள் தமிழகத்தின் சென்னை நகரில் நடைபெற உள்ளது
  • 28 நாடுகளை சேர்ந்த அணிகள் இதில் பங்கு கொள்கின்றன.

மிஸ் ஆசிய (காதுகேளாத) அழகி 2018

  • ஆசிய (காதுகேளாத) அழகி 2018, பட்டம் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 2௦ வயதுடைய “ஜேஷ்ணா ஜெயின்” என்பவர் வென்றார்
  • இவர் தைவான் நாட்டின் தைபெய் நகரில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான “சர்வதேச (காதுகேளாத) அழகிப்” போட்டியில் 3-ம் இடத்தை பிடித்தார்

ஊரக எல்லை சந்தை தொடர்பான முதல் இந்திய – வங்கதேச கூட்டுக் குழுக் கூட்டம்

  • ஊரக எல்லை சந்தை தொடர்பான முதல் இந்திய – வங்கதேச கூட்டுக் குழுவின் கூட்டம், திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரில் நடைபெற்றது
  • இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு தேவையான் பொருட்கள் சந்தைபடுத்த ஏதுவாக இந்த “ஊரக எல்லை சந்தை” திட்டம் கொண்டுவரப்பட்டது

பாகிஸ்தானின் முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி

  • பாகிஸ்தான் நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியாக “தாகிரா சப்தார்” என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்
  • இவர் பலுசிஸ்தான் மாகாணத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

இந்தியா, சிறந்த மருத்துவ சுற்றுலா நாடு

  • உலகளவில் சிறந்த மருத்துவ சுற்றுலா நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. பல வெளிநாடுகளில் இருந்து மருத்துவ தேவைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது
  • தற்போது உலக மருத்துவ சுற்றுலா பங்களிப்பில், இந்தியாவின் பங்கு 18% ஆக உள்ளதை, வருகின்ற 2௦2௦ம் ஆண்டிற்குள் 2௦% ஆக உயர்ந்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

காந்தி பற்றி ராமச்சந்திர குகாவின் புதிய புத்தகம்

  • புகழ் பெற்ற வரலாற்று நூலான, “காந்திக்கு பின் இந்தியா” நூலினை எழுதிய ராமச்சந்திர குகா அவர்கள், தற்போது காந்தியை பற்றி புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்
  • “Gandhi: the years that changed the world (1914-1948)” என்ற பெயரில் புதிய புத்தகத்தை எழுதி தற்போது வெளியிட்டுள்ளார்

ஓடிஸா மாநிலத்தின் முதல் பழங்குடியின நிலவரைபட ஏடு

  • ஓடிஸா மாநிலத்தின் சார்பில் “முதல் பழங்குடியின நிலவரைபட ஏடு” வெளியிடப்பட்டுள்ளது
  • அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் எண்ணிக்கை, கலாச்சார தகவல்கள் போன்றவை இதில் இடம்பெறும்
  • 2௦11ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் இந்தியாவின் 2-வது மாநிலம் ஓடிஸா ஆகும். முதல் இடத்தில மத்தியப் பிரதேசம் உள்ளது

வட்டார ரயில்வே பயிற்சிக் கழகம்

  • உத்திரப் பிரதேச மாநிலத்தின் “காசிப்பூர்” பகுதியில் வடகிழக்கு ரயில்வேயில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில், புதிய வட்டார ரயில்வே பயிற்சிக் கழகம், உருவாக்கப்பட்டுள்ளது
  • 21 கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது

எரும்புண்ணி

  • ஓடிஸா மாநிலத்தின் அதிகரித்துவரும் “எரும்புண்ணி” கடத்தலை தடுக்க அம்மாநில சிறப்பு படை போலீசார் மியான்மர் வழியிலான சாலையில் சோதனை மேற்கொள்வதை தொடங்கியுள்ளனர்
  • பாலூட்டி வகை உயிரினங்களிலே அதிக கடத்தலுக்கு உள்ளாகும் ஒரே இனம் இதுவாகும்

 

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.