அகரமுதலி வரலாறு

அகரமுதலி வரலாறு

அகரமுதலி வரலாறு

அகராதி

  • அகரம் + ஆதி =அகராதி
  • ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொர்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.
  • அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

நிகண்டுகள்

  • தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
  • நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
  • நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.

அகரமுதலி வரலாறு

  • திருமூலரின் திருமந்திரத்தில் “அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.

அகராதி நிகண்டு

  • நிகண்டுகளில் ஒன்றான “அகராதி நிகண்டில்” அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.
  • இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
  • இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.

அகரமுதலி வரலாறு

அகரமுதலி வரலாறு – சதுரகராதி

  • வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
  • இது கி.பி.1732ஆம் ஆண்டு வெளிவந்தது.
  • சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.
  • பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாக பொருள் விளக்கம் இருந்தது.
  • வீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.

சங்க அகராதி

  • “தமிழ்-தமிழ் அகராதி” ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
  • யாழ்பாணம் கதிரைவேலனாரால் “தமிழ்ச்சொல் அகராதி” வெளியிடப்பட்டது. இதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்.
  • இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.

பிற அகரமுதலிகள்

  • குப்புசாமி என்பவர் “தமிழ்ப் பேரகராதி” வெளியிட்டார்.
  • இராமநாதன் என்பவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி” எனும் பெயருடன் வந்தது.
  • வின்சுலோ என்பவர் “தமிழ்-ஆங்கிலப் பேரகராதி” வெளியிட்டார்.

அகரமுதலி வரலாறு

பவானந்தர்

  • பவானந்தர் என்பார் 1925ஆம் ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்”, 1937ஆம் ஆண்டு “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார்.

தமிழ்-தமிழ் அகரமுதலி

  • மு.சண்முகம் என்பவரால் “தமிழ்-தமிழ் அகரமுதலி” 1985ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது

தமிழ் லெக்சிகன் – அகரமுதலி வரலாறு

  • இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி “சென்னைப் பல்கலைக்கழக அகராதி”.
  • இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.
  • இவ்வகரமுதலி “தமிழ் லெக்சிகன்” என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி

  • 1985ஆம் ஆண்டு “தேவநேயபாவாணர்”யின் “செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி”யின் முதல் தொகுதி வெளிவந்தது.
  • இரண்டாவது தொகுதி 1993ஆம் ஆண்டு வெளியானது.
  • ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.
  • படங்களுடன் வேலி வந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.

கணினி உதவியுடன் அகரமுதலி

  • முழுமையாக கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி “கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி”.
  • விளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.

கலைக்களஞ்சியம்

  • தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி = அபிதான கோசம்.
  • இது 1902ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.
  • இது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.

அபிதான சிந்தாமணி

  • 1934ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறைப் போருகளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது = அபிதான சிந்தாமணி.
  • இதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சி கழகம்

  • தமிழ் வளர்ச்சி கழகம் முறையான “முதல் கலைக்களஞ்சியத்தை” தொகுத்து வெளியிட்டது.
  • இது பத்து தொகுதிகளை உடையது.
  • இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.

கலைச்சொல் அகரமுதலி

  • காலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கக்ப்பட்டன.
  • மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
  • அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

 

 

 

தமிழ்ப்பணி

Leave a Reply