நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்(நகைச்சுவை நூல்)
குழந்தைச் செல்வம்
தேவியின் கீர்த்தனைகள்
தீண்டாதார் விண்ணப்பம்
கவிமணியின் உரைமணிகள்
கவிமணி குறிப்பு
எட்வின் ஆர்னால்ட் என்பார் எழுதிய light of asia என்ற நூலை அழகிய தமிழில் ஆசிய ஜோதி என மொழிப்பெயர்த்துள்ளார்
பாரசீக கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் ரூபாயத் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்
மும்மொழிப் புலமை வாய்ந்தவர்
கவிமணி – சிறப்பு
இனிய தமிழில் எவரும் விளங்கப் பாடல் இயற்றும் திறம் மிக்கவர்
ரசிகமணி டி.கே.சி = தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம்; அறிய செல்வம், தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதும் தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கத் கூடிய வாடாத கற்பகப்பூச்செண்டு
நாமக்கல் கவிஞர் = தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை – தினமும் கேட்பது என்செவிப் பெருமை
டி.கே.சண்முகம் = கவிமணியின் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்குப் பண்டிதராக வேண்டியதில்லை; படிக்கத் தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்க எளியநடை
மு.வரதராசனார் = போராட்டமும் பரபரப்பும் மிகுந்த காலத்தில் வாழ்ந்த போதிலும் அவருடைய உள்ளமும், கவிதைகளும் அமைதியும் இனிமையும் உடையனவாக விளங்கியது விந்தையே
நாமக்கல் கவிஞர் = துரும்பென மெலிந்த தேகம், துலங்கிடும் குளிர்ந்த பார்வை, இரும்பினும் வலிய உள்ளம், இனியவே செய்யும் எண்ணம், பரம்பொருள் நினைவே காட்டும் பாரெல்லாம் பரந்த நோக்கம், கரும்பினும் இனிய சொற்கள், கவிமணி வடிவம் ஆகும்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கவிதைகள்
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி அம்மா என்குது வெள்ளைப் பசு
ஓடும் உதிரத்தில் – வடிந்து ஒழுகும் கண்ணீரில் தேடித் பார்த்தாலும் – சாதி தெரிவதுண்டோ அப்பா?
உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை தெரிந்து ரைப்பது கவிதை
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா