10 ஆம் வகுப்பு ஏலாதி

10 ஆம் வகுப்பு ஏலாதி

10 ஆம் வகுப்பு ஏலாதி
10 ஆம் வகுப்பு ஏலாதி

10 ஆம் வகுப்பு ஏலாதி

  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
  • நான்கு அடிகளில் ஆறு அருங்கருத்துக்களை இந்நூல் கூறுகிறது.
  • ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துக்கு ஏலாதி எனப் பெயர்.
  • இம்மருந்துகள் உன்னுபவரின் உடல் நோயினைப் போக்கும்.
  • அதுபோல் இந்நூல் கற்போரின் அறியாமையை அகற்றும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தமிழுக்கு அருமருந்து போன்ற நூல்

  • “தமிழுக்கு அருமருந்து” போன்ற நூல் = ஏலாதி.
  • மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரண்டு நூல்கள் = ஏலாதி, திரிகடுகம்.

கணிமேதாவியார் ஆசிரியர் குறிப்பு

  • ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
  • இவரை “கணிமேதையார்” என்றும் அழைப்பர்.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு.
  • இவர் இயற்றிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது.

சொற்பொருள்

  • வணங்கி = பணிந்து
  • மாண்டார் = மாண்புடைய சான்றோர்
  • நுணங்கிய நூல் = நுண்ணறிவு நூல்கள்
  • நோக்கி = ஆராய்ந்து

இலக்கணக்குறிப்பு

  • நூல்நோக்கி = இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • பலியில்லா மன்னன் = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பிரித்தறிதல்

  • வழியொழுகி = வழி + ஒழுகி

10 ஆம் வகுப்பு ஏலாதி

எட்டுத்தொகை நூல்களை குறிப்பிடும் பழம்பாடல்

நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூ(ற),

ஒத்த பதிற்றுப்பத்து,) ஓங்கு பரிபாடல்,

கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு), அகம்,புறம்என்(று)

இத்திறத்த எட்டுத் தொகை.

பத்துப்பாட்டு நூல்களை கூறும் பழம்பாடல்

முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை,

பெருகு வளமதுரைக் காஞ்சி, – மருவினிய

கோலநெடு நல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்

பாலை, கடாத்தொடும் பத்து.

 

Leave a Reply