சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள்

சொற்பொருள்:

மூத்த – முதிர்ந்த கேண்மை – நட்பு
தேர்ந்து – ஆராய்ந்து நோய் – துன்பம்
உறாஅமை – துன்பம் வராமல் பேணி – போற்றி
தமர் – உறவினர் வன்மை – வலிமை
தலை – சிறப்பு சூழ்வார் – அறிவுடையார்
செற்றார் – பகைவர் இல் – இல்லை
தகைமை – தன்மை ஏமரா – பாதுகாவல் இல்லாத
மதலை – துணை எள்ளுவர் – இகழ்வர்
பொய்யா விளக்கம் – அணையா விளக்கு இருள் – பகை
ஈனும் – தரும் தீதின்றி – தீங்கின்றி
புல்லார் – பற்றார் உறுபொருள் – அரசு உரிமையால் வரும்பொருள்
உல்குபொருள் – வரியாக வரும்பொருள் தெரு – பகை
குழவி – குழந்தை செவிலி – வளர்ப்புத்தாய்
குன்று – மலை செருக்கு – இறுமாப்பு

இலக்கணக்குறிப்பு:

அறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை திறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
தேர்ந்து கொளல் – வினையெச்சம் கொளல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
உற்றநோய் – பெயரெச்சம் உறாஅமை – செய்யுளிசை அளபெடை
பெற்றியார் – வினையாலணையும் பெயர் கொளல் – தொழிற்பெயர்
வன்மை – பண்புப்பெயர் ஒழுகுதல் – தொழிற்பெயர்
சூழ்வார் – வினையாலணையும் பெயர் தக்கார் – வினையாலணையும் பெயர்
துணையார் – வினையாலணையும் பெயர் இல்லை – குறிப்பு வினைமுற்று
பகைகொளல் – இரண்டாம் வேற்றுமைத்தொகை பொய்யா விளக்கம் – ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம்
அறனீனும் – இரண்டாம் வேற்றுமைத்தொகை வந்த பொருள் – பெயரெச்சம்
திறன் – கடைப்போலி வாராப் பொருளாக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தன்ஒன்னார் – ஆறாம் வேற்றுமைத்தொகை வேந்தன் பொருள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
ஈன்குழவி – வினைத்தொகை செல்வச்செவிலி – உருவகம்
குன்றேறி – ஏழாம் வேற்றுமைத்தொகை செய்க – வியங்கோள் வினைமுற்று
செறுநர் செருக்கு – ஆறாம் வேற்றுமைத்தொகை ஒண்பொருள் – பண்புத்தொகை

Leave a Comment

Your email address will not be published.