சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் அகநானூறு

அகநானூறு

நூல் குறிப்பு:

 • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
 • இந்நூலில் நானூறு பாடல்கள் உள்ளன.
 • நூலில் உள்ள 3 பிரிவுகள் = களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை
 • களிற்றியானைநிரையில் 120 பாடல்களும், மணிமிடைபவலத்தில் 180 பாடல்களும், நித்திலக்கோவையில் 100 பாடல்களும் உள்ளன.
 • நூலின் அடிஎல்லை = 13 – 31
 • இந்நூலினை “நெடுந்தொகை” என்றும் வழங்குவர்.
 • 1,3,5 என ஒற்றைப்படை எண்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
 • 2,8 என வருவன = குறிஞ்சித்திணை பாடல்கள்
 • 4,14 என வருவன = முல்லைதினைப் பாடல்கள்
 • 6,16 என வருவன = மருதத்திணை பாடல்கள்
 • 10,20 என வருவன = நெய்தல் திணை பாடல்கள்.
 • நூலை தொகுத்தவர் = மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருதிரசன்மனார்
 • நூலை தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

சொற்பொருள்:

 • ஓங்குமலை – உயர்ந்த மலை
 • சிலம்பு – மலைச்சாரல்
 • வேங்கை பிடவு – மலைநிலத்தே வளரும் மரங்கள்
 • உகிர் – நகம்
 • உழுவை – ஆண்புலி
 • கவலை – கிளைவழி
 • சாஅய் – மெலிவுற்று

இலக்கணக்குறிப்பு:

 • ஓங்குமலை – வினைத்தொகை
 • அவிழாக் கோட்டுகிர் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 • நிரம்பா நீளிடை – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 • நீளிடை – வினைத்தொகை
 • உண்ணா உயக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 • சாஅய் – இசைநிறைஅளபெடை
 • தொல்கவின் – பண்புத்தொகை
 • பிரிந்தோர் – வினையாலணையும் பெயர்

Leave a Comment

Your email address will not be published.