சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள்

நூல்குறிப்பு:

  • “தமிழ் மாதின் இனிய உயிர்நிலை” என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் திருக்குறள்.
  • திருக்குறள் “தமிழர் திருமறை” ஆகும்.
  • திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகு பெயர்.
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டது.
  • அறத்துப்பால் முப்பத்தி எட்டு அதிகாரங்களை உடையது. அது பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களை கொண்டுள்ளது.
  • பொருட்பால் எழுபது அதிகாரங்களையும், அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களையும் கொண்டுள்ளது.
  • காமத்துப்பால் 25 அதிகாரங்களையும், களவியல், கற்பியல் என்ற இரன்டு இயல்களையும் உடையது.

 

சொற்பொருள்:

அமரருள் – தேவர் உலகம் உய்க்கும் – செலுத்தும்
ஆரிருள் – நரகம் காக்க – கடைப்பிடித்து ஒழுகுக
செறிவு – அடக்கம் சீர்மை – விழுப்பம், சிறப்பு
தோற்றம் – உயர்வு மாண – மிகவும்
பணிதல் – அடங்குதல் ஒருமை – ஒருபிறப்பு
எழுமை – ஏழு பிறப்பு ஏமாப்பு – பாதுகாப்பு
சோகாப்பர் – துன்புறுவர் வடு – தழும்பு
கதம் – சினம் செவ்வி – தகுந்த காலம்
தாளாற்றி – மிக்க முயற்சி செய்து தந்த – ஈட்டிய
வேளாண்மை – உதவி புத்தேள் உலகம் – தேவர் உலகம்
திரு – செல்வம் அற்று – போலும்
இடம் – செல்வம் ஒல்கார் – தளரார்
கடன் – முறைமை கேடு – பொருள்கேடு
கூகை – கோட்டான் இகல் – பகை
தகர் – ஆட்டுக்கிடாய் பொள்ளென – உடனடியாக
செறுநர் – பகைவர் சுமக்க – பணிக
மாற்றான் – பகைவர் பீலி – மயில்தோகை
சாகாடு – வண்டி இறும் – முரியும்

இலக்கணக்குறிப்பு:

அடங்காமை – எதிர்மறைத்தொழிற்பெயர் ஆரிருள் – பண்புத்தொகை
காக்க – வியங்கோள் வினைமுற்று அதனினூஉங்கு – இன்னிசை அளபெடை
அடங்கியான் – வினையாலணையும் பெயர் மலையினும் – உயர்வு சிறப்பும்மை
எல்லார்க்கும் – முற்றும்மை பணிதல் – தொழிற்பெயர்
உடைத்து – குறிப்பு வினைமுற்று எழுமை, ஐந்து – ஆகுபெயர்
காவாக்கால் – எதிர்மறை வினையெச்சம் நன்று – பண்புப்பெயர்
அடங்கல் – தொழிற்பெயர் ஆற்றுவான் – வினையாலணையும் பெயர்
உலகு – இடவாகுபெயர் தந்தபொருள் – பெயரெச்சம்
பொருட்டு – குறிப்பு வினைமுற்று பெறல் – தொழிற்பெயர்
அறிவான் – வினையாலணையும் பெயர் வாழ்வான் – வினையாலணையும் பெயர்
மற்றையான் – குறிப்பு வினையாலணையும் பெயர் பேரறிவு – பண்புத்தொகை
தப்பாமரம் – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் பெருந்தகை – பண்புத்தொகை
கடனறிகாட்சி – வினைத்தொகை ஒல்கார் – வினையாலணையும் பெயர்
இல்பருவம் – பண்புத்தொகை ஆதல் – தொழிற்பெயர்
கேடு, கோள் – முதனிலை திரிந்த தொழிற்பெயர் பகல்வெல்லும் – ஏழாம் வேற்றுமைத்தொகை
இகல்வெல்லும் – இரண்டாம் வேற்றுமைத்தொகை ஒழுகல் – தொழிற்பெயர்
அருவினை – பண்புத்தொகை செயின் – வினையெச்சம்
கருதுபவர் – வினையாலணையும் பெயர் ஒடுக்கம் – தொழிற்பெயர்
பொருதகர் – வினைத்தொகை ஒள்ளியவர் – வினையாலணையும் பெயர்
சுமக்க – வியங்கோள் வினைமுற்று ஒக்க – வியங்கோள் வினைமுற்று
வினைவலி – ஆறாம் வேற்றுமைத்தொகை செயல் – வியங்கோள் வினைமுற்று
செல்வார் – வினையாலணையும் பெயர் அறியார் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒழுகான் – முற்றெச்சம் பெய்சாகாடு – வினைத்தொகை
சாலமிகுந்து – உரிச்சொற்றொடர் கொம்பர் – ஈற்றுப்போலி
ஈக – வியங்கோள் வினைமுற்று ஆகாறு – வினைத்தொகை
கேடு – முதனிலை திரிந்த தொழிற்பெயர் வாழ்க்கை – தொழிற்பெயர்

Leave a Comment

Your email address will not be published.