சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாட்டு வாழ்த்து

நாட்டு வாழ்த்து

திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை
தீது தீர்ந்தனை நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை
எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்
– பாரதியார்

குறிப்புகள்:

 • வங்கமொழியில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர்  எழுதிய “வந்தே மாதரம்” என்னும் பாடலின் மொழிப்பெயர்பே இப்பாடல்.
 • தேசியக்கவி எனப் போற்றப்படும் பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
 • பாரதியார் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர்ச் சென்னையில் இருந்து வெளிவந்த “சுதேசமித்திரன்” இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
 • மேலும் “சக்கரவர்த்தினி” என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும், “இந்தியா” என்ற வாரப்பத்திரிகைக்கு ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
 • இவர் கீதையை மொழிபெயர்த்தார்.
 • 11.09.1921 அன்று மறைந்தார்.

சொற்பொருள்:

 • திரு – செல்வம்
 • மருவு – பொருந்திய
 • செய் – வயல்
 • மல்குதல் – நிறைதல்
 • இருநிலம் – பெரிய பூவுலகு

இலக்கணக்குறிப்பு:

 • மருவு செய் – வினைத்தொகை
 • பெருகும் இன்பம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
 • நற்பயன் – பண்புத்தொகை

Leave a Comment

Your email address will not be published.