சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு

புறநானூறு

நூல் குறிப்பு:

 • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
 • இதனை புறப்பாட்டு, புறம் எனவும் வழங்குவர்.
 • இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.
 • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.
 • இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

பரணர்:

 • இவர் வரலாற்றுக் குறிப்புகளை பாடல்களுள் பொதிந்து வைத்துப் பாடுவதில் வல்லவர்.
 • கபிலர் போல மிக்க புகழுடன் வாழ்ந்தவர்.
 • கபிலபரணர் என்னும் தொடரால் இது விளங்கும்.
 • இவர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றவர்.

பேகன்:

 • பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன்.
 • கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கியவன்.
 • மலைநாட்டை ஆண்டவன்.
 • இவனது ஊர் நல்லூர்.
 • இவனது குடி ஆவியர் குடி.

சொற்பொருள்:

 • அறுகுளம் – நீர் வற்றிய குளம்.
 • உகுத்தும் – பெய்தும்
 • உவர்நிலம் – களர்நிலம்
 • ஊட்டியும் – சாலப் பெய்தும்
 • கடாஅயானை – மதக்களிறு
 • மாரி – மழை

இலக்கணக்குறிப்பு:

 • அறுகுளம், அகல்வயல் – வினைத்தொகை
 • வரையா மரபு – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 • கடாஅ – இசைநிறை அளபெடை

Leave a Comment

Your email address will not be published.