சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் பெத்தலகேம் குறவஞ்சி

பெத்தலகேம் குறவஞ்சி

குறவஞ்சி:

 • குறவஞ்சி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
 • தொல்காப்பியர் கூறும் வனப்பு என்பதுள் குறவஞ்சி அடங்கும்.
 • உலாப் போகும் மன்னனையோ தெய்வத்தையோ கண்டு தலைவி காதல் கொண்டு, அதனால் மனம் நலிவதும், வீதியிலே குறத்தி வருகையும், தலைவி அவளை அழைத்து குறி கேட்பதும், குறத்தி தலைவியின் கையைப் பார்த்து கைக்குறி, முகக்குறி, பல்லிசொல் போன்றவற்றை கூறுவது போல் அமையப்பெறும்.
 • குறவஞ்சி நாடக வடிவில் அமையப்பெறும்.

நூல் குறிப்பு:

 • பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னர் இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
 • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.

ஆசிரியர் குறிப்பு:

 • இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
 • பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
 • ஊர் = திருநெல்வேலி
 • தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
 • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
 • நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.

சொற்பொருள்:

 • ஏகன் – இறைவன்
 • தற்பரன் – இறைவன்

இலக்கணக்குறிப்பு:

 • அருந்தவம் – பண்புத்தொகை
 • தானதர்மம் – உம்மைத்தொகை
 • பேய்க்கணங்கள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
 • அமைந்த, கொடுத்த – பெயரெச்சம்

Leave a Comment

Your email address will not be published.