சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் மொழி வாழ்த்து

மொழி வாழ்த்து

வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக்
கையி னாலுரை கால மிரிந்திடப்
பைய நாவைய சைத்த பழந்தமிழ்
ஐயை தாடலை கொண்டு பணிகுவாம்
– பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர்

குறிப்பு:

 • பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர் தஞ்சை மாவட்டம் பள்ளியகரத்தில் பிறந்தவர்.
 • பெற்றோர் = நீலமேகம் பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்.
 • இவர் ஒரு பன்மொழிப் புலவர்.
 • கரந்தைத் தமிழ் சங்கத்தில் பல ஆண்டுகள் அமைச்சராகத் விளங்கினார்.
 • தாமஸ்கிரே என்பார் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தமிழில் செய்யுள் வடிவில் “இரங்கற்பா” என்னும் தலைப்பில் மொழி பெயர்த்தார்.

சொற்பொருள்:

 • வையம் – உலகம்
 • இரிந்திட – விலகிட
 • பைய – மெல்ல
 • தாள் – திருவடி
 • ஐயை – தாய்

இலக்கணக்குறிப்பு:

 • தொன்மக்கள் – பண்புத்தொகை
 • உள்ளம் – ஆகுபெயர்
 • உரைகாலம் – வினைத்தொகை
 • ஐயைதாள் – ஆறாம் வேற்றுமைத் தொகை
 • தாள் தலை – இரண்டாம் வேற்றுமைத்தொகை

Leave a Comment

Your email address will not be published.