சமசீர் கல்வி 12 ஆம் வகுப்பு பாட புத்தகம் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்

நூல் குறிப்பு:

 • இக்காப்பியம், “முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம்” என்று பல்வேறு சிறப்புப் பெயர்களால் பாராட்டப்படுகிறது.
 • கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக வளர்ந்த கதையாதலினால் சிலப்பதிகாரம் எனப் பெயர்பெற்றது.
 • இதுவே தமிழின் முதல் காப்பியம்.
 • புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும், மங்கள வாழ்த்துப் பாடல் முதலாக வரந்தருகாதை ஈறாக முப்பது காதைகளையும் உடையது.
 • நூல் கூறும் மூன்று உண்மை = அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்.

ஆசிரியர் குறிப்பு:

 • இந்நூலை இயற்றியவர் இளங்கோவடிகள்
 • பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை
 • தமையன் = சேரன் செங்குட்டுவன்
 • காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
 • இந்நூலுக்கு உரையெழுதிய பழைய உரையாசிரியர்கள் இருவர். ஒருவர் அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதிய அரும்பத உரைகாரர். மற்றொருவர் விளக்கமாக உரை எழுதிய அடியார்க்கு நல்லார்(இவர் உரை முழுவதுமாக கிடைக்கவில்லை)
 • இக்காலத்தே வாழ்ந்த ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை நூல் முழுமைக்கும் உள்ளது.

நூல் சிறப்பு:

 • பாரதியார் இந்நூலின் அருமை பெருமைகளை உணர்ந்து, “நெஞ்சையள்ளும் சிலம்பு” எனப் புகழ்ந்துள்ளார்.
 • கவிமணி இந்நூலை, “தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தோறும் சிலப்பதிகாரம்” எனப் பாராட்டியுள்ளார்.

சொற்பொருள்:

 • வெய்யோன் – கதிரவன்
 • ஈர்வளை – அறுத்து செய்யப்பட்ட வளையல்
 • இலங்கு – ஒளிருகின்ற
 • தோளி – கண்ணகி
 • முறை – நீதி
 • நிறை – கற்பு
 • படுகாலை – மாலைக்காலம்
 • மாதர் – காதல்
 • மல்லல் – வளம்
 • கொற்றம் – அரசியல்
 • வைவாள் – கூரியவாள்
 • பழுது – உடல்

இலக்கணக்குறிப்பு:

 • ஈர்வளை – வினைத்தொகை
 • கையேந்தி – ஏழாம் வேற்றுமைத்தொகை
 • காற்சிலம்பு – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
 • நல்லுரை – பண்புத்தொகை
 • தண்குடை – பண்புத்தொகை
 • பொற்சிலம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
 • மாமதுரை – உரிச்சொற்றொடர்
 • வைவாள் – உரிச்சொற்றொடர்
 • வளைக்கை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

Leave a Comment

Your email address will not be published.