சமசீர் கல்வி 12 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேம்பாவணி

தேம்பாவணி

நூல் குறிப்பு;

 • வீரமாமுனிவர் இயற்றியது தேம்பாவணி.
 • இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.
 • தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.
 • தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.
 • நூலின் தலைவன் = இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர்.
 • இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்பர்.

வீரமாமுனிவர்:

 • இயற் பெயர் = கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி
 • கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள்.
 • இவர் தம் பெயரை “தைரியநாதசாமி” என மாற்றிக்கொண்டார்.
 • தமிழ்ச் சான்றோர் இவரை “வீரமாமுனிவர்” என அழைத்தனர்.
 • 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில இயற்கை எய்தினார்.
 • படைப்புகள் = திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
 • திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

வளன் செனித்த படலம்:

 • காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர் தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றை கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும்.
 • யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 • வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது.
 • அதன் நேரிய மொழி பெயர்பே தமிழில் வளன் ஆகும்.

கதை சுருக்கம்:

 • யூதேயா நாட்டு மன்னன் சவுல்.
 • பிலித்தையர் என்பார் திருமறையை பழித்தும் கடுவுளை இகழ்ந்தும் வந்தனர்.
 • அரக்கன் கோலியாத் இச்ரேயால் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான்.
 • தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனை கொன்றான்.

சொற்பொருள்:

மாலி – சூரியன் ஆலி – மலை நீர்
கரிந்து – கருகி புடை – இடையின் ஒருபக்கம்
வியன்வட்டம் – அகன்ற கேடயம் கீண்டு – கிழித்து
கிளர்ப – நிறைய தொழும்பர் – அடிமைகள்
ஓகையால் – களிப்பினால் வெருவி – அஞ்சி
கதத்த – சினமிக்க கல்நெடுங்குவடு – மலைச்சிகரம்
நிரூபன் – அரசன் விளி – சாவு
கைவயம் – தோள்வலிமை மெய்வயம் – உடல் வலிமை
ஐஞ்சிலை – ஐந்து கற்கள் ஓதை – ஓசை
மருகி – சுழன்று மிடல் – வலிமை
செல் – மேகம் நுதல் – நெற்றி
உருமு – இடி மருங்கு – இடுப்பு
சிரம் – தலை அசனி – இடி

இலக்கணக்குறிப்பு:

கதுவிடா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அகல்முகில் – வினைத்தொகை
கருமுகில் – பண்புத்தொகை கூடினர் – வினையாலணையும் பெயர்
கதத்த – குறிப்பு பெயரெச்சம் கேட்டனர் – வினையாலணையும் பெயர்
தொடர்ந்தனன் நகைப்பான் – முற்றெச்சம் அஞ்சினர் – வினையாலணையும் பெயர்
கேட்ட வாசகம் – பெயரெச்சம் கைவயம் – ஆறாம் வேற்றுமைத் தொகை
அறிய ஆண்மை – குறிப்புப் பெயரெச்சம் இருந்த பாலன் – பெயரெச்சம்
கருமுகில் – பண்புத்தொகை வைவேல் – உரிச்சொற்றொடர்
காண்கிலர் – எதிர்மறை வினைமுற்று நாமவேல் – உரிச்சொற்றொடர்

Leave a Comment

Your email address will not be published.