நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் வாழ்க்கை வரலாறு

  • இயற் பெயர் = இராமலிங்கம் பிள்ளை
  • பெற்றோர் = வேங்கடராம பிள்ளை, அம்மணி அம்மாள்
  • ஊர் = நாமக்கல்
  • காலம் = 19.10.1888-24.08.1972

நாமக்கல் கவிஞர் சிறப்பு பெயர்கள்

  • நாமக்கல் கவிஞர்
  • காந்தியக் கவிஞர்
  • ஆஸ்தானக் கவிஞர்
  • காங்கிரஸ் புலவர்
  • புலவர்(விஜயராகவ  ஆச்சாரியார்)

படைப்புகள்

  • இசை நாவல்கள் – 3
  • கட்டுரைகள் – 12
  • தன் வரலாறு – 3
  • புதினங்கள் – 5
  • இலக்கிய திறனாய்வுகள் – 7
  • கவிதை தொகுப்புகள் – 10
  • சிறுகாப்பியங்கள் – 5
  • மொழிபெயர்ப்புகள் – 4

நாமக்கல் கவிஞர் நூல்கள்

  • அவனும் அவளும்(காப்பியம்)
  • இலக்கிய இன்பம்
  • தமிழன் இதயம்(கவிதை தொகுப்பு)
  • என் கதை(சுய வரலாறு)
  • சங்கொலி(கவிதை தொகுப்பு)
  • கவிதாஞ்சலி
  • தாயார் கொடுத்த தனம்
  • தேமதுரத் தமிழோசை
  • பிரார்த்தனை
  • இசைத்தமிழ்
  • தமிழ்த் தேர்
  • தாமரைக்கண்ணி
  • கற்பகவல்லி
  • காதல் திருமணம்

நாவல்

  • மலைக்கள்ளன்

உரைநடை நூல்கள்

  • கம்பரும் வான்மீகியும்

நாடகம்

  • மாமன் மகள்
  • சரவண சுந்தரம்

மொழிப்பெயர்ப்பு நூல்

  • காந்திய அரசியல்

இதழ்

  • லோகமித்திரன்

நாமக்கல் கவிஞர் குறிப்பு

  • இவர் செயலால் காந்தியடிகளையும், பாட்டால் பாரதியையும் தம் குருவாக ஏற்றுக்கொண்டவர்
  • முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்
  • இவர் மூன்று மாதம் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார்
  • சிறு வயது முதல் ஒரு முஸ்லிம் தாயால்(பதுலா பீவி) வளர்க்கப்பட்டவர்
  • இவர் சிறந்த ஓவியர்
  • இவர் முதன் முதலாக வரைந்த படம் இராமகிருஷ்ண பரமஹம்சர்
  • அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுக்குப் பாரத மாத முடிசூட்டுவது போல் படம் வரைந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
  • இவரின் பாடல்களைக் தொகுத்து வெளியிட்டவர் = தணிகை உலகநாதன்

நாமக்கல் கவிஞர் சிறப்பு

  • இவர் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் ஆவார்
  • இராசாசி = திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது; காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது
  • இராசாசி = இந்தச் சமயத்தில் பாரதி இல்லையே என்று ஏங்கினேன் அந்தக் குறையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்
  • பாரதி = பலே பாண்டியா, நீர் ஒரு புலவர், ஐயமில்லை
  • “நாட்டுக்கும்மி” என்ற தலைப்பில் நூறு தேச பக்திப் பாடல்களை எழுதி, சேலம் எஸ்.விஜயராகவ ஆச்சாரியார் முன்பு பாடி அரங்கேற்றம் செய்தார். ஆச்சாரியார் அவருக்கு “புலவர்” என்ற பட்டம் வழங்கினார்
  • ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • தமிழக சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்ய பெற்றார்
  • இவர் “பத்மபூஷன்” விருது பெற்றுள்ளார்

நாமக்கல் கவிஞர் பாடல் வரிகள்

  • கத்தி இன்றி ரத்தமன்றி யுத்தமொன்று வருகுது
  • தமிழன் என்றோர் இனமுண்டு
    தனியே அவர்க்கொரு குணமுண்டு
  • தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
  • இந்திய நாடு என்னுடைய நாடு
    என்று தினம்தினம் நீயதைப் பாடு
  • பாட்டாளி மக்கள் பசிதீர வேண்டும்
    பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்
  • கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
  • கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
  • ’கத்தி யின்றி ரத்த மின்றி
    யுத்த மொன்று வருகுது
    சத்தி யத்தின் நித்தி யத்தை
    நம்பும் யாரும் சேருவீர்’

 

 

 

Leave a Reply