நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
அரசியல் அமைப்பு சட்டத்தை அதன் தன்மையைப் பொருது நெகிழும் தன்மை உடையது, நெகிழா தன்மை உடையது என்று பிரிப்பர். நெகிழ்வுத் தன்மையுடைய அரசியல் அமைப்புச் சட்டத்தை சாதாரன சட்டங்களின் மூலம் திருத்துவதை போல எளிதாக திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
நெகிழ்வுத் தன்மையுடைய அரசியல் சட்டத்திற்கு எடுத்துக்காட்டு, பிரிட்டன் சட்டங்கள். ஆனால் நெகிழ்வுத் தன்மையற்ற அரசியல் அமைப்புச் சட்டங்களை திருத்துவதற்கு பிரத்தியோகமான திருத்த முறையை பின்பற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக அமெரிக்க அரசியல் சட்டங்கள்.
ஆனால் இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் இந்த இரண்டு கூறுகளையும் ஒருங்கே கொண்டது ஆகும். அதாவது “நெகிழும் மற்றும் நெகிழா தன்மை இரண்டையையும் ஒருங்கேபெற்றுள்ளது” (Combination of both Rigid and Flexible). இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 3 வகைகளில் திருத்தங்களை (Amendments) மேற்கொள்ளலாம்.
- சில அரசமைப்புச் சட்டங்கள் திருத்துவதற்கு சாதாரன பெரும்பான்மையே (Ordinary Majority) போதுமானது ஆகும். எடுத்துக்காட்டாக புதிய மாநிலங்களை உருவாக்குதல், மாநில மேலவையை நீக்குதல் போன்றவை
- குறிப்பு = சாதாரண திருத்த மசோதாக்களுக்கு விதி 368 பயன்படுத்தப்படுவதில்லை
- சில அரசியல் அமைப்பு திருத்த சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் (Special majority) அவைக்கு வருகை தந்து வாக்களிக்க வேண்டும். அனால் இதில் இரு அவையிலும் பெரும்பான்மையானை உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும்
- சில அரசியல் அமைப்பு திருத்த சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவைக்கு வருகை தந்து வாக்களிக்க வேண்டும். மேலும் பெரும்பான்மையான மாநிலங்களின் பின்னேற்பு (Special Majority and Ratification) ஆதரவும் வேண்டும்
இவ்வாறு விதவிதமான வழிமுறைகள், அரசமைப்புச் சட்டத் திருத்தும் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன. எளிமையான நெகிழ்வு நடைமுறைகளும் கடினமான இறுக்கமான நடைமுறைகளும் கொண்ட கலைவையாக இந்தியச் சட்டம் அமைந்துள்ளது.
இதுகுறித்து நேரு கூறியதாவது, “குறிப்பிட்ட அளவில் நெகிழ்வுறு தன்மை இருத்தல் வேண்டும். எல்லாவற்றையும் இறுக்கமானதாகவும், நிரந்தரமாகவும் ஆக்கி விட்டால், நீங்கள் நாட்டின் வளர்ச்சியை, வளரும் மக்களின் வளர்ச்சியையும் சேர்த்து நிறுத்தி விடுவீர்” என்றார்.