பொது தமிழ் பகுதி ஆ பன்னிருதிருமுறைகள்

பன்னிருதிருமுறைகள்

பொருளடக்கம்

பன்னிருதிருமுறைகள்:

 • தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் தனிநாயகம் அடிகளார்.
 • சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இயக்கக் காலம் = பல்லவர் காலம்
 • சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும்.
 • திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
 • நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே
 • நம்பியாண்டார் நம்பிக்குப்பின் சேர்த்தது பெரியபுராணம்
 • திருமுறைகளைத் தொகுத்தவன் முதலாம் இராசராசன் ஆவார். இவர் “திருமுறை கண்ட சோழன்” என அழைக்கப்படுகிறான்
 • முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது.
 • தேவாரப் பாக்கள் “பழம் மரபிசைக் களஞ்சியம்” எனப்படுகிறது.
 • தேவாரம் என்பதை “தே+வாரம்” எனப் பிரித்து கடவுளுக்கு உரிய பாடல்கள் என்றும், “தே+ஆரம்” எனப் பிரித்து கடவுளுக்கு சூட்டப்படும் பா மாலை என்றும் பொருள் கொள்வர்.
 • முதல் ஏழு திருமுறைகளுக்கு “மூவர் தமிழ்” என்ற பெயரும் உண்டு.
 • மூவர் முதலிகள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
 • சைவசமய குரவர்கள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
 • சைவ சமய குரவர்கள் நால்வர் பாடியதை “சைவ நான்மறைகள்” என்று புகழப்படும்.
 • திருமுறைகளைப் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்
 • “இவ்வளவு பழமையான இசைச் செல்வம் உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்கு கிடைக்கவில்லை” என்பார் மு.வரதராசனார்

பன்னிருதிருமுறை அட்டவணை:

திருமுறை ஆசிரியர் நூல்கள் பாடல்கள்
1,2,3 திருஞானசம்பந்தர் தேவாரம்(385 பதிகம்) 1213
4,5,6 திருநாவுக்கரசர் தேவாரம்(32 பதிகம்) 3066
7 சுந்தரர் தேவாரம்(100 பதிகம்) 1026
8 மாணிக்கவாசகர் திருவாசகம், திருக்கோவையார் 1056
9 திருமாளிகைத்தேவர் சிதம்பர மகேந்திர மாலை பற்றி மூன்று பதிகம், புறச் சமயங்கள் பற்றி ஒரு பதிகம் 45
கருவூத் தேவர் 10 பதிகங்கள் 105
சேந்தனார் 2 பதிகங்கள் 47
பூந்துருத்தி காடவா நம்பி 1 பதிகங்கள் 12
கண்டராதித்தர் 1 பதிகங்கள் 10
வேணாத்டடிகள் 1 பதிகங்கள் 10
திருவாலியமுதனார் 4 பதிகங்கள் 42
புருடோத்தமா நம்பி 2 பதிகங்கள் 22
சேதிராயர் 1 பதிகங்கள் 10
10 திருமூலர் திருமந்திரம் 3000
11 1.திருவாலவுடையார் திருமுகப்பாசுரம்
2.காரைக்கால் அம்மையார் 1.திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 11
2.அற்புதத் திருவந்தாதி 10
3.திருவிரட்டை மணிமாலை 20
3.ஐயடிகள் காடவர்கோன் ஷேத்திரத் திருவெண்பா 24
4.சேரமான் பெருமாள் நாயனார் 1.பொன்வண்ணத் தந்தாதி 100
2.திருவாரூர் மும்மணிக்கோவை 30
3.திருக்கயிலாய ஞானவுலா 1
5.நக்கீரத் தேவர் 1.கயிலைபாதி காளத்திபாதி 100
2.திருஈங்கோய் மாலை 55
3.திருவலஞ்ச்சுழி மும்மணிக்கோவை 15
4.திருவெழு கூற்றிருக்கை 1
5.பெருந்தேவபாணி 1
6.கோபப் பிரசாதம் 1
7.காரெட்டு 8
8.போற்றித் திருக்கலி வெண்பா
9.திருமுருகாற்றுப்படை 1
10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 1
6.கல்லாட தேவர் திருக்கண்ணப்ப தேவர் மறம் 1
7.கபிலதேவர் 1.மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை 20
2.சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை 37
3.சிவபெருமான் திருவந்தாதி 100
8.பரணதேவர் சிவபெருமான் திருவந்தாதி 100
9.இளம் பெருமான் அடிகள் சிவபெருமான் திருமும் மணிக்கோவை 30
1௦0.அதிரா அடிகள் மூத்தபிள்ளையார் திருமும் மணிக்கோவை 20
11.பட்டினத்து அடிகள் 1.கோவில் நான்மணிமாலை 42
2.திருக்கழுமல மும்மணிக்கோவை 13
3.திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 30
4.திருவேகம்புடையார் திருவந்தாதி 100
5.திருவெற்றியூர் ஒருபா ஒருபது 10
12.நம்பியாண்டார் நம்பி 1.திருநாகையூர் விநாயகர் மாலை 20
2.கோயில் திருபண்ணியர் விருத்தம் 70
3.திருத்தொண்டர் திருவந்தாதி 89
4.ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 100
5.ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 11
6.ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை 30
7.ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை 1
8.ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் 49
9.ஆளுடைய பிள்ளையார் திருதொழுகை 1
10.திருநாவுக்கரசு தேவர் திருவேகதச மாலை 11
12 சேக்கிழார் பெரியபுராணம் 4250

திருஞானசம்பந்தர்

வாழ்க்கை குறிப்பு:

 • இயற்பெயர் = ஆளுடையபிள்ளை
 • பெற்றோர் = சிவபாத இருதயார், பகவதி அம்மையார்
 • ஊர் = சீர்காழி(தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம்)
 • மனைவி = சொக்கியார்
 • வாழ்ந்த காலம் = 16 ஆண்டுகள்
 • மார்க்கம் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்
 • நெறி = மகன்மை நெறி
 • ஆட்கொள்ளட்பாட இடம் = சீர்காழி
 • இறைவனடி சேர்ந்த இடம் = பெருமண நல்லூர்
 • இவரின் தமிழ் = கொஞ்சு தமிழ்

படைப்புகள்:

 • 1,2,3 ஆம் திருமுறைகள்
 • முதல் மூன்று திருமுறைகள் =”திருகடைகாப்பு” எனப் போற்றுவர்

வேறு பெயர்கள்:

 • ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
 • திருஞானம் பெற்ற பிள்ளை
 • காழிநாடுடைய பிள்ளை
 • ஆணைநமதென்ற பெருமான்
 • பரசமயகோளரி
 • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
 • திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)
 • இன்தமிழ் ஏசுநாதர்
 • சத்புத்திரன்
 • காழி வள்ளல்
 • முருகனின் அவதாரம்
 • கவுணியர்
 • சந்தத்தின் தந்தை
 • காழியர்கோன்
 • ஞானத்தின் திருவுரு
 • நான் மறையின் தனித்துணை
 • கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)

நிகழ்த்திய அற்புதங்கள்:

 • திருமறைக்காடு = மூடிய கோயில் கதவுகளை பாடித் திறக்க செய்தார்.
 • திருப்பாச்சிலாச்சிரமம் = மழவன் மகளின் முயலகன் நோய் நீக்கினார்
 • திருமருகல் = பாம்பு தீண்டிய வணிகனின் விடம் நீக்கினார்
 • திருவோத்தூர் = ஆண்பனையை பெண்பனை ஆக்கினார்
 • மதுரை = தான் தங்கியிருந்த மடத்திற்குக் கூன்பாண்டியன் வைத்த நெருப்பை அவனுக்கே வெப்பு நோயாகப் பற்றச் செய்தார். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட, நீறு பூசி அவனின் வெப்பு நோய் நீக்கி, அவனின் கூன் நீக்கச் செய்து அவனை “நின்றசீர் நெடுமாறன்” ஆகினார்.
 • மதுரை = வாதத்துக்கு அழைத்த புத்தநந்தியின் தலை துண்டாகுமாறு செய்தார்.
 • மயிலாப்பூர் = குடத்தில் சாம்பலாக இருந்த பூம்பாவை என்னும் பெண்ணை உயிருடன் வரச் செய்தார்.
 • திருஏடகம் = வைகையாற்றில் இட்ட ஏடு கரை ஏறியது.
 • திருப்பூந்துருத்தி = நாவுக்கரசர் இவரை சுமந்த இடம்.

இறைவனிடமிருந்து பெற்றவை:

 • திருகோலக்காவில் = பொற்றாளம்
 • திருவாடுதுறை = பொற்கிழி
 • திருவீழிமிழலை = படிகாசு
 • திருவாயிலறத்துறை = முத்துச்சிவிகை
 • பட்டீஸ்வரம் = முத்துப்பந்தல்

குறிப்பு:

 • மூன்று வயதில் இவருக்கு உமையம்மையே நேரில் வந்து இவருக்கு “ஞானப்பால்” ஊட்டினார். அன்று முதல் இவர் “ஞானசம்பந்தன்” எனப் பெயர் பெற்றார்.
 • இவர் தந்தையாரின் தோளில் அமர்ந்தவாறே சிவத்தலங்கள் சென்று பாடினார்.
 • இவரின் அனைத்துப் பதிகங்களிலும் எட்டாவது பாடல் “இராவணன்” பற்றியும், ஒன்பதாவது பாடல் “மாலும் அயனும்” காண இயலாத சிவபெருமானின் பெருமையும், பத்தாவது பாடல் “சமண பௌத்த சமயங்கள்” துன்பம் தரும் தீங்கினை உடையன என்றும் பாடும் பாங்கினை கொண்டுள்ளன.
 • 16 ஆண்டுகள் மட்டுமே இவர் உயிருடன் வாழ்ந்தார்.
 • அந்தணரான சம்பந்தர் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாணர் குளத்தை சேர்ந்த திருநீலகண்ட யாழ்பாணரை அழைத்து செல்வார்.
 • இவர் தன்னை தானே “தமிழ் ஞானசம்பந்தன்” என அழைத்துக்கொள்வார்
 • மதுரையில் அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களை தோற்கடித்தார். தோல்வி தாங்காமல் 8000 சமண முனிவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
 • இவரின் தோழர் = சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதியார்
 • ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடியதாக நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு கிடைத்தது 384 பதிகங்கள் மட்டுமே.
 • கிடைக்கும் மொத்தப்பாடல்கள் = 4181
 • 220 திருத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.
 • சம்பந்தரும் நாவுக்கரசரும் சந்தித்த இடம் = திருப்புகலூர்

சிறப்பு:

 • தந்தை இல்லாமல் சென்ற இடங்களில் சிறுவனான இவரை, திருநாவுக்கரசர் தம் தோளில் சுமந்து சென்றுளார்.(இடம் = திருப்பூந்துருத்தி)
 • திருநாவுக்கரசரை “அப்பர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.
 • இவரின் நெறி = மகன்மை நெறி
 • இவரின் மார்க்கம் = சத்புத்திர மார்க்கம்
 • சேக்கிழார் தமது பெரியபுராணத்தில், “வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க இவர் தோன்றினார்” எனப் பாராட்டினார்.
 • தம் பாடல்களில் 23 பண் அமைத்துப் பாடியுள்ளார்.
 • ஏறத்தாழ 110 சந்தங்களை தன் பாடல்களில் அமைத்துப் பாடியுள்ளார். எனவே இவரை, “சந்தத்தின் தந்தை” என்று கூறுவர்.
 • யமகம், மடக்கு முதலிய சொல்லணிகட்கும், சித்திர கவிக்கும் முதன் முதலில் தொடங்கி வைத்தவர் சம்பந்தரே ஆவார்.
 • சேக்கிழார் பெரியபுராணத்தில் ஏறக்குறைய பாதிக்கு பாதி சம்பந்தர் வரலாறு இடம் பெறுவதால் “பிள்ளை பாதி புராணம் பாதி” எனப் போற்றப்படுகிறது.
 • இவர் “முருகனின் அவதாரமாகவே” கருதப்பட்டார்.
 • யாழ முறி இவருக்கு மட்டுமே உரியது.

மேற்கோள்:

 • காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
  ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
  வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
  நாதனாம நமச்சிவாயமே
 • சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடுபால்
 • ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
  சனி பாம்பி ரண்டு முடனே
  ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
  அடியார வர்க்கு மிகவே

திருநாவுக்கரசர்

வாழ்க்கை குறிப்பு:

 • இயற்பெயர் = மருள்நீக்கியார்
 • பெற்றோர் = புகழனார், மாதினியார்
 • ஊர் = தென்னாற்காடு மாவட்டம் திருவாமூர்
 • சகோதரி = திலகவதி
 • வாழ்ந்த காலம் = 81 ஆண்டுகள்
 • மார்க்கம் = சரியை என்னும் தாச மார்க்கம்
 • நெறி  = தொண்டு நெறி
 • ஆட்கொள்ளட்பாட இடம் = திருவதிகை
 • இறைவனடி சேர்ந்த இடம் = திருப்புகலூர்
 • இவரின் தமிழ் = கெஞ்சு தமிழ்

படைப்புகள்:

 • இவர் அளித்தது 4,5,6 ஆம் திருமுறை
 • 4ஆம் திருமுறை = திருநேரிசை
 • 5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை
 • 6ஆம் திருமுறை = திருந்தான்டகம்

வேறு பெயர்கள்:

 • மருள்நீக்கியார்(இயற் பெயர்)
 • தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
 • அப்பர்(ஞானசம்பந்தர்)
 • வாகீசர்
 • தாண்டகவேந்தர்
 • ஆளுடைய அரசு
 • திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
 • சைவ உலகின் செஞ்ஞாயிறு

செய்த அற்புதங்கள்:

 • “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்.
 • “மகேந்திரவர்மப் பல்லவனை” சைவராக்கினார்
 • திருமறைக்காட்டில் பாடியே கதவை திறக்கச் செய்தார்.
 • பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச் செய்தார்.
 • திருவையாற்றில் மூழ்கி எழுந்து, கயிலாயக் காட்சியை கண்டார்.
 • மகேந்திரவர்மப் பல்லவன் இவரை கல்லில் கட்டி கடலில் வீசிய போதும், “கடலில் பாய்ச்சினும் நல்துணை ஆவது நமச்சி வாயவே” எனப் பாடி கடலில் கல்லுடன் மிதந்து கரை சேர்ந்தார்.

சிறப்பு:

 • சிவபெருமானே இவரை “நாவுக்கரசர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.
 • “உழவாரப்படை” கொண்டு கோயில் தோறும் உழவாரப்பணி(புல் செதுக்கி சுத்தம் செய்தல்) மேற்கொண்டார்.
 • திருஞானசம்பந்தரை தன் தோலில் சுமந்து பல தலங்கள் சென்றுள்ளார்.
 • “என் கடன் பணி செய்து கிடபதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்
 • இறைவனை கணவனாகவும், ஆன்மாவை மனைவியாகவும் உருவகித்து பாடியவர்.

குறிப்பு:

 • இவர் சமண சமயத்தில் இருந்து தன் சகோதரியின் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார்.
 • இவர் சமண சமயத்தில் இருந்த பொது இவரின் பெயர் = தருமசேனர்
 • இவர் 4900 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.
 • ஆனால் இன்று கிடைப்பதோ 313 பதிகங்கள் மட்டுமே
 • சங்கம் என்னும் வார்த்தை முதன் முதலில் இவரது திருப்பத்தூர்த் தேவாரத்தில், “நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக் கருளினோன் காண்” என்ற பாடலில் வருகிறது.

மேற்கோள்:

 • மாசில் வீணையும் மாலை மதியமும்
  வீசு தென்றலும் வீங்குஇள வேனிலும்
 • கல்துனைப் பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும்
  நல்துணை ஆவது நமச்சி வாயவே
 • நமார்ர்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
  நரகத்தில் இடர்ப்போம் நடலை இல்லோம்
  ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
  இன்பமே எந்நாளும் துன்பமில்லை
  குனித புருவமும் கொவ்வைச் செவ்
  வாயிற்குமிண் சிரிப்பும்
  பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
  சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
  கோத்திரமும் குளமும் கொண்டு என் செய்வீர்?
  முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
 • என் கடன் பணி செய்து கிடப்பதே

சுந்தரர்

வாழ்க்கை குறிப்பு:

 • இயற்பெயர் = நம்பி ஆரூரர்
 • பெற்றோர் = சடையனார், இசைஞானியார்
 • ஊர் = திருமுனைப்பாடி நாடு திருநாவலூர்
 • மனைவி = பரவையார், சங்கிலியார்
 • வாழ்ந்த காலம் = 18 ஆண்டுகள்
 • மார்க்கம் = யோகம் என்னும் சக மார்க்கம்
 • நெறி = யோகம் அல்லது தோழமை நெறி
 • ஆட்கொள்ளட்பாட இடம் = திருவெண்ணெய் நல்லூர்
 • இறைவனடி சேர்ந்த இடம் = கைலாயம்
 • இவரின் தமிழ் = மிஞ்சு தமிழ்

படைப்புகள்:

 • 7ஆம் திருமுறை. இதனை “திருப்பாட்டு’ என்பர்.
 • திருதொண்டத்தொகை

வேறு பெயர்:
நிகழ்த்திய அற்புதங்கள்:

 • 12000 பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு கமலாலயத்தில் எடுத்தார்.
 • இவர் பொருட்டு காவிரி ஆறு இரண்டு கூறாகப் பிளந்து நின்றது.
 • செங்கல்லை தங்கக் கல்லாக மாற்றினார்.
 • வாழ்நாள் முழுவதும் மணக்கோலத்துடன் வாழ்ந்தவர்.
 • பரவையார் மீது இவர் கொண்ட காதலுக்கு சிவபெருமான் உதவி புரிந்தார்.
 • இரு கண்ணையும் இழந்தவர், காஞ்சியில் ஒரு கண்ணையும் திருவாரூரில் ஒரு கண்ணையும் பெற வைத்தார்.
 • முதலை உண்ட பாலகனை உயிரோடு மீட்டார்.

சிறப்பு:

 • இவரின் திருமணத்தன்று இறைவனே நேரில் வந்து அடிமை ஓலை காட்டி, சுந்தரர் தனது அடிமை என நிறுவினார்.
 • தன்னை அடிமை என்று கூறிய இறைவனைப் “பித்தா” எனக் கோபித்துப் பேசினார். இறைவன் சுந்தரரை ஆட்கொண்டப்பின் “பித்தாபிறை சூடி” என்ற பாடலை பாடினார்.
 • சேரமான் பெருமாள் நாயனாரோடு “வெள்ளையானை மீது” அமர்ந்து கயிலை சென்றார்.
 • மனைவியின் ஊடலை தவிர்க்க இறைவனையே தூதாக அனுப்பினார்

குறிப்பு:

 • இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர்.
 • இவர் 38000 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.
 • ஆனால் கிடைத்தவை 100 மட்டுமே.
 • “வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார்.

மேற்கோள்:

 • பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
 • பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
 • தம்மானை அறியாத சாதியாரும் உளரோ

மாணிக்கவாசகர்

வாழ்க்கை குறிப்பு:

 • இயற்பெயர் = தெரியவில்லை
 • பெற்றோர்  = சம்பு பாதசாரியார், சிவஞானவதியார்
 • ஊர் = பாண்டி நாட்டு திருவாதவூர்
 • வாழ்ந்த காலம் = 32 ஆண்டுகள்
 • மார்க்கம் = ஞானம் என்னும் சன் மார்க்கம்
 • நெறி = ஞானம் நெறி
 • ஆட்கொள்ளட்பாட இடம் = திருப்பெருந்துறை
 • இறைவனடி சேர்ந்த இடம் = சிதம்பரம்

படைப்புகள்:

 • 8ஆம் திருமுறை = திருவாசகம், திருக்கோவையார்
 • திருவெம்பாவை
 • போற்றித் திருவகவல்

திருவாசகம்:

 • தமிழ் வேதம்
 • சைவ வேதம்

திருக்கோவையார்;

 • திருசிற்றம்பலக்கோவை
 • ஆரணம்
 • ஏரணம்
 • காமநூல்
 • எழுத்து

வேறு பெயர்கள்:

 • திருவாதவூரார்
 • தென்னவன் பிரம்மராயன்
 • அழுது அடியடைந்த அன்பர்
 • வாதவூர் அடிகள்
 • பெருந்துறைப் பிள்ளை
 • அருள் வாசகர்
 • மணிவாசகர்

சிறப்பு:

 • மன்னனக்காக குதிரை வாங்க சென்ற பொது திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
 • இவருக்காக இறைவன் நரியை பரியக்கினார்.(பரி=குதிரை)
 • பாண்டியன் மாணிக்கவாசகரை “கல்லைக்கட்டி வைகையில்” இட்ட பொது, கோபமுற்று வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான்.
 • திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.
 • இராமலிங்க அடிகள், திருவாசகத்தின் இனிமையை போற்றுகிறார்.
தேன்கலந்து பால்கலந்து செழுங்கணித் தீஞ்சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
 • இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.
 • பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார்.
 • புத்தர்களை ஊமையாக்கியது, புத்த அரசனின் ஊமை மகளைப் பேசவைத்தது போன்ற அற்புதங்களை செய்துள்ளார்.
 • “திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்” – நால்வர் நான்மணிமாலை

திருவாசகம்;

 • திருவாசகத்தில், “தும்பி ஊதுதல், பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டுதல், திருத்தோள் நோக்கம், பூவல்லி காதல், அம்மானை ஆடல்” முதலான நாட்டுப்புற விளையாட்டுகள் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
 • “திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி உண்டாயிற்று.
 • 51 தலைப்புகளில் 659 பாடல்கள் உள்ளன.
 • திருவாசகத்திற்கு பேராசிரியர் உரை அளித்துள்ளார்.

திருக்கோவையார்:

 • “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் கேட்க மாணிக்கவாசகர் திருக்கோவையாரை பாடினார்.
 • திருக்கோவையாரை, “திருசிற்றம்பலக்கோவை” எனவும் அழைப்பர்
 • இந்நூலின் வேறு பெயர்கள் = ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து
 • இந்நூல் கட்டளை கலித்துறையால் பாடப்பட்டது.
 • 400 பாடல்களைக் கொண்டது.
 • கோவை நூல்களுள் காலத்தால் முற்பட்டது
 • திருக்கோவையாருக்கு பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் உரை வகுத்துள்ளார்.

குறிப்புகள்:

 • அரிமர்த்த பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர்.
 • மன்னனிடம் “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டம் பெற்றார்.
 • மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு 20 பாடல்களில் திருவெம்பாவை பாடினார்.

மேற்கோள்:

 • நமச்சிவாயம் வாழ்க நாதம் தாள்வாழ்க
 • ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
 • தென்னாடுடைய சிவனே போற்றி
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
 • வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
 • உற்றாரை யார்வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
 • அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
 • புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
  பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி

சைவ சமய குறவர் நால்வர்

பிறந்த இடம்:

திருஞானசம்பந்தர் சீர்காழி(தோணிபுரம், பிரமபுரம்,வேணுபுரம்)
திருநாவுக்கரசர் தென்னாற்காடு மாவட்டம் திருவாமூர்
சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டு திருநாவலூர்
மாணிக்கவாசகர் பாண்டி நாட்டு திருவாதவூர்

 

பெற்றோர்:

திருஞானசம்பந்தர் சிவபாத இருதயார், பகவதி அம்மையார்
திருநாவுக்கரசர் புகழனார், மாதினியார்
சுந்தரர் சடையனார், இசை ஞானியார்
மாணிக்கவாசகர் சம்பு பாதசாரியார், சிவஞனவதியார்

 

படைப்புகள்:

திருஞானசம்பந்தர் 1,2,3ஆம் திருமுறை = திருக்கடைக்காப்பு
திருநாவுக்கரசர் 4ஆம் திருமுறை = திருநேரிசை
5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை
6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
சுந்தரர் 7ஆம் திருமுறை = திருப்பாட்டு
திருத்தொண்டத்தொகை
மாணிக்கவாசகர் திருவாசகம்
திருக்கோவையார்

 

வாழ்ந்த காலங்கள்:

திருஞானசம்பந்தர் 16 ஆன்டுகள்
திருநாவுக்கரசர் 81 ஆண்டுகள்
சுந்தரர் 18 ஆண்டுகள்
மாணிக்கவாசகர் 32 ஆண்டுகள்

 

மார்க்கம்:

திருஞானசம்பந்தர் கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்
திருநாவுக்கரசர் சரியை என்னும் தாச மார்க்கம்
சுந்தரர் யோகம் என்னும் சக மார்க்கம்
மாணிக்கவாசகர் ஞானம் என்னும் சன்மார்க்கம்

 

மறைந்த இடம்:

திருஞானசம்பந்தர் பெருமண நல்லூர்
திருநாவுக்கரசர் திருப்புகலூர்
சுந்தரர் கைலாயம்
மாணிக்கவாசகர் சிதம்பரம்

 

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம்:

திருஞானசம்பந்தர் சீர்காழி
திருநாவுக்கரசர் திருவதிகை
சுந்தரர் திருவெண்ணெய் நல்லூர்
மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை

 

இவர்களின் தமிழ்:

திருஞானசம்பந்தர் கெஞ்சு தமிழ்
திருநாவுக்கரசர் கொஞ்சு தமிழ்
சுந்தரர் மிஞ்சு தமிழ்

 

உறவு முறைகள்:

திருஞானசம்பந்தர் ஆளுடைய பிள்ளை
திருநாவுக்கரசர் ஆளுடைய அரசு
சுந்தரர் ஆளுடைய நம்பி
மாணிக்கவாசகர் ஆளுடைய அடிகள்

 

ஒன்பதாம் திருமுறை

 • ஒன்பதாம் திருமுறையை பாடியவர்கள் ஒன்பது பேர்
 • ஒன்பதாம் திருமுறை, “திருவிசைப்பா”, “திருப்பல்லாண்டு”, “தில்லைத் திருமுறை” எனப்படும்
 • இறைவனுக்கு பல்லாண்டு பாடியவர் சேந்தனார்
 • இதில் உள்ள மொத்த பதிகங்கள் = 29
 • தேவாரத்தில் காணப்படாத “சாளரபாணி” என்ற பண் இதில் உள்ளது.

திருமூலர்

 • இவரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும்.
 • திருமூலர் ஒரு சித்தர்.
 • இவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடம் சாத்தனூர்
 • இவர் யோகத்தில் ஆழ்ந்த இடம் திருவாவடுதுறை
 • திருவாவடுதுறைக்கு “நவகோடி சித்தபுரம்” என்ற பெயரும் உண்டு.
 • திருமந்திரத்திற்கு ஆசிரியர் இட்ட பெயர் = திருமந்திர மாலை
 • திருமந்திரத்திற்கு “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரும் உண்டு.
 • இந்நூலில் 9 தந்திரங்களும், 232 அதிகாரங்களும் உள்ளது.
 • முதல் சித்த நூல் திருமந்திரம்
 • யோகநெறி கூறும் தமிழின் ஒரே நூல்
 • “சைவ சித்தாந்தம்” என்னும் தொடர் முதலில் திருமந்திரத்தில் தான் உள்ளது.
 • இவர் நந்தி தேவரின் அருள் பெற்றவர்.
 • சைவசமயத்தின் முதல் நூல் இதுவே.
 • நாயன்மார்களில் மூத்தவர் இவரே.
 • திருமூலரின் பழைய பெயர் = சுந்தரன்
 • நந்திதேவர் வழங்கிய பெயர் = நாதன்

மேற்கோள்:

 • ஒன்றே குலம் ஒருவனே தேவன்
 • நான்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
 • அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
 • மரத்தை மறைத்தது மாமத யானை
 • அன்பே சிவம்
 • உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
 • உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
 • படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

பதினோராம் திருமுறை

 • 12 பேர் பாடியுள்ளனர்.
 • மொத்தம் 40 நூல்கள் உள்ளன.
 • 1400 பாடல்கள் உள்ளன.
 • இதனை “பிரபந்தமாலை” என்றும் அழைப்பர்.

காரைக்கால் அம்மையார்

 • இவரின் இயற்பெயர் = புனிதவதி
 • பிறந்த ஊர்  = காரைக்கால்
 • கணவன் = வணிகன் பரமதத்தன்
 • திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிப்பட்டவர்.
 • இவர் பாடல்கள் மட்டுமே “மூத்த திருப்பதிகம்” என்று சிறப்பிக்கப்படுகிறது
 • கட்டளைக் கலித்துறை என்ற புதுவகை யாப்பைப் படைத்தவர்
 • ஒரு பொருளைப் பல பாடலில் பாடும் பதிக மரபை முதன் முதலாக தொடங்கி வைத்தவர்.
 • அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.
 • இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பட்டவர்.
 • கோயிலில் நாயன்மார்கள் எல்லாம் நின்ற கோலத்தில் இருக்க இவர் மட்டும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் சிறப்பு பெற்றவர்.
 • இவர் தலையால் நடந்த திருவாலங்காட்டில் கால்பதிக்க அஞ்சி சம்பந்தர் ஊர் வெளியில் தங்கினார்.
 • இவர் பாடியவை = திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருஇரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி
 • இறைவனிடம் “பேய்” உருவம் வேண்டி கேட்டவர்.
 • இவரின் பாடல்கள் சமய மறுமலர்ச்சிக்கு முன்னோடியாகும்

சேரமான் பெருமாள் நாயனார்

 • இவர் பாடியவை = பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருகைலாய ஞான உலா
 • இவரின் இயற் பெயர் = பெருமாக்கோதையார்
 • இவர் சுந்தரரின் நண்பர்
 • இவரை “கழறிற்றறிவார்” என அழைக்கப்படுவார்
 • இவரின் “திருகைலாய ஞான உலா” தமிழின் முதல் உலா நூல். இதனை ”தெய்வீக உலா” அல்லது “ஆதி உலா” என அழைப்பர்
 • இவர் சேர மரபினர்

நம்பியாண்டார் நம்பி

 • இவர் பாடிய நூல்கள் ஒன்பது
 • “தமிழ் வியாசர்” எனப்படுபவர் இவர்.
 • இவரே திருமுறைகளைத் தொகுத்தவர்.
 • இவரின் ஊர் = திருநாரையூர்

பெரியபுராணம்

ஆசிரியர் குறிப்பு:

 • இயற் பெயர் = அருண்மொழித்தேவர்
 • பிறந்த ஊர் = குன்றத்தூர்

நூல் குறிப்பு;

 • சேக்கிழார் தம் நூலிற்கு இட்ட பெயர் = திருத்தொண்டர் புராணம்
 • இதனை “திருத்தொண்டர் மாக்கதை” என்றும் அழைக்கப்படுகிறது
 • “சைவ சமயத்தின் சொத்து” எனப் போற்றப்படும் நூல் இது.
 • “சைவ உலகின் விளக்கு” எனப் போற்றப்படுகிறது
 • “எடுக்கும் மாக்கதை” என நூல் ஆசிரியரே குறிப்பிடுகிறார்.

வேறு பெயர்கள்:

 • உத்தம சோழப் பல்லவன்
 • தொண்டர் சீர் பரவுவார்
 • தெய்வப்புலவர்
 • இராமதேவர்
 • மாதேவடிகள்

குறிப்பு:

 • இவர் அநபாய சோழனிடம் அமைச்சராக இருந்தவர்.
சுந்தரரின் திருத்தொண்டத்தொகை முதல் நூல்
நம்பியாடார் நம்பியின் திருத்தொண்டத் திருவந்தாதி வழி நூல்
சேக்கிழாரின் பெரியபுராணம் சார்பு நூல்
 • பெரியபுராணத்தில் 2 காண்டம் 13 சருக்கம் உள்ளது.
 • முதல் சருக்கம் = திருமலைச்சருக்கம்
 • இறுதி சருக்கம் = வெள்ளையானைச் சருக்கம்
 • நூலில் 63 நாயன்மார்களையும் 9 தொகை அடியார்களையும் கூறியுள்ளார்.
 • பெரியபுராணத்தின் தலைவன் = சுந்தரர்
 • நூலில் பெரும் பகுதி திருஞானசம்பதர் பற்றிய குறிப்பு உள்ளது.
 • சோழனின் மனதை சீவக சிந்தாமணி நூலில் இருந்து சைவத்தின் பக்கம் திருப்ப சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்.

சிறப்பு:

 • “இறைவனே சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி எடுத்து கொடுக்க பாடினார்.
 • தமிழின் முதல் களஆய்வு நூல் பெரியபுராணம்
 • தமிழின் இரண்டாவது தேசியக் காப்பியம்
 • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை படைத்த “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” நூலில் “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனச் சிறப்பிக்கிறார்.
 • “சேக்கிழார் புராணம்” பாடியவர் = உமாபதி சிவம்
 • சிவஞான முனிகள், “எங்கள் பாக்கியப் பயனாகிய குன்றை வாழ் சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்” என கூறுகிறார்.
 • பெரியபுராணத்தை உலக பொது நூல் என்கிராட் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

 

Leave a Comment

Your email address will not be published.