முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
- முதல் உலகப் போர் துவங்கிய ஆண்டு = 1914.
- பத்தொன்பதாம் நூற்றாண்டை வரலாற்று ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கின்றனர் = நீண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு.
- உலகின் முதல் தொழிற்சாலைகள் சார்ந்த போர் (First Industrial War) எனப்படுவது = முதலாம் உலகப் போர் (1914).
- முதல் உலகப்போரின் மிகப்பெரிய விளைவு = ரஷ்ய புரட்சி.
- புரட்சிகளில் முதலாவது என அழைக்கப்படும் புரட்சி = ரஷ்ய புரட்சி.
காலனிகளுக்கான போட்டி
- முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமே ஏகாதிபத்தியம் (imperialism is the highest stage of capitalism) என்று கூறியவர் = லெனின்.
- சீன-ஜப்பான் போர் நடைபெற்ற ஆண்டு = 1894-1895.
- சீன – ஜப்பான் போரில், வலிமை மிக்க சீனாவை ஜப்பான் தோற்கடித்தது.
- எந்த செயல் மூலம் கிழக்காசியாவில் ஜப்பான் வலிமை மிக்க அரசாக தன்னை நிருபித்தது = லியோடாங் துறைமுகத்தை, தனது ஆர்தர் துறைமுகத்துடன் இணைத்தது.
- ரஷ்ய-ஜப்பானிய போர் நடைபெற்ற ஆண்டு = 1904.
- ரஷ்ய-ஜப்பானிய போரில், ஜப்பான் வென்றது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஜப்பான்
- ஜப்பான் கொரியாவை இணைத்துக்கொண்ட ஆண்டு = 1910.
- சீனாவில் மஞ்சு வம்சம் வீழ்ச்சியடைந்த ஆண்டு = 1912.
- ஜப்பான் பின்னர் தைவானையும் இணைத்துக் கொண்டது.
ஆப்ரிக்கா
- அல்ஜீரியாவையும், செனகலையும் கைப்பற்ற பிரான்ஸ் ஒரு நீண்ட போரை நடத்தியது.
- ஆப்ரிக்காவின் ஜூலுக்களால் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு = 1879.
- ஆப்ரிக்காவின் சூடான் படைகளால் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு = 1884.
- “அடோவா போர்” நடைபெற்ற ஆண்டு = 1896.
- அடோவா போர் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது = இத்தாலி மற்றும் எத்தோப்பியா.
முதல் உலகப் போருக்கான காரணங்கள்
- மைய நாடுகள் எனப்பட்டவை = ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி மற்றும் இத்தாலி.
- யாருடைய வழிகாட்டுதலின் படி “மூவர் கூட்டணியை” மைய நாடுகள் அமைத்தன = பிஸ்மார்க்.
- “மூவர் உடன்படிக்கை” ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1882.
- பிரான்ஸ் மற்றும் ரஷ்யா இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு = 1894.
- சீனாவில் தங்களுக்குள் “செல்வாக்கு மண்டலங்களை’ உருவாக்கிய நாடுகள் = இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா.
- இந்தோ-சீனா பகுதியை கைப்பற்றிய ஐரோப்பிய நாடு = பிரான்ஸ்.
- “நட்புறவு ஒப்பந்தம்” ஏற்பட்ட ஆண்டு = 1904.
- “நட்புறவு ஒப்பந்தம்” (Entente Cordiale) எந்த இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டது = இங்கிலாந்து, ஜப்பான்.
- “ஜிங்கோயிசம்” (jingoism) என்றால் என்ன = இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று ஜிங்கோயிசம் எனப்படுகிறது.
- “சாவவ்நிசம்” (chauvinism) என்றால் என்ன = பிரான்சின் அதி தீவிர நாட்டுப்பற்று
“சாவவ்நிசம்” எனப்படுகிறது. - “குல்தூர்” (kultur) என்றால் என்ன = ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று “குல்தூர்” எனப்படுகிறது.
ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு
- “ஜெர்மனியே உலகத்தின் தலைவன்” என்று பிரகடனம் செய்தவர் = ஜெர்மன் அரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம்.
- “டிரபால்கர் போர்” நடைபெற்ற ஆண்டு = 1805.
- எந்த போரில் நெப்போலியன் தோல்வி உற்றார் = டிரபால்கர் போர் (1805).
பால்கன் போர்கள்
- “இளம் துருக்கியர் புரட்சி” நடைபெற்ற ஆண்டு = 1908.
- “பால்கன் கழகம்” என்ற அமைப்பு உருவாக்கபப்ட்ட ஆண்டு = 1912.
- ‘பால்கன் கழகம்” என்ற அமைப்பை உருவாக்கிய நாடுகள் = கிரீஸ், செர்பியா, பல்கேரியா, மாண்டி நீக்ரோ.
- முதல் பால்கன் போர் நடைபெற்ற ஆண்டு = 1912 – 1913.
- முதல் பால்கன் போரில் தோல்வியுற்ற நாடு = துருக்கி.
- “லண்டன் உடன்படிக்கை” கையெழுத்தான ஆண்டு = மே 1913.
- எந்த உடன்படிக்கையின் படி “அல்பேனியா” என்ற புதிய நாடு உருவாகியது = இலண்டன் உடன்படிக்கை (1913).
- இரண்டாவது பால்கன் போர் நடைபெற்ற ஆண்டு = 1913.
- எந்த உடன்படிக்கையின் படி, இரண்டாம் பால்கன் போர் முடிவிற்கு வந்தது = புகாரெஸ்ட் உடன்படிக்கை (1913).
முதல் உலகப்போருக்கான உடனடிக் காரணம்
- முதல் உலகப்போருக்கான உடனடிக் காரணம் = ஆஸ்திரிய இளவரசர் “பிரான்ஸ் பெர்டினாண்டு” படுகொலை செய்யப்பட்டது.
- ஆஸ்திரிய இளவரசர் “பிரான்ஸ் பெர்டினாண்டு” படுகொலை செய்யப்பட தினம் = 28 ஜூலை 1914.
- ஆஸ்திரிய இளவரசர் “பிரான்ஸ் பெர்டினாண்டு” படுகொலை செய்யப்பட்ட இடம் = பாஸ்னியாவின் சொராஜிவோ.
- ஆஸ்திரிய இளவரசர் “பிரான்ஸ் பெர்டினாண்டு” படுகொலை செய்தவன் = பிரின்செப் எனப்படும் பாஸ்னிய செர்பியன்.
- இதனால் ஆஸ்திரியா, செர்பியாவை தாக்கியது.
- செர்பியாவிற்கு ஆதரவாக ரஷ்யா வரும் என்பதால், ஆஸ்த்ரியாவிற்கு ஆதரவாக ஜெர்மனி போரில் இறங்கி, ரஷ்யாவை தாக்கியது.
- மைய நாடுகள் அணி = ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா.
- நேச நாடுகள் அணி = ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, அமேரிக்கா, பெல்ஜியம், ருமேனியா, செர்பியா, கிரீஸ்.
முதல் உலகப் போர்
- எந்த போரில் ஜெர்மனி படைகள், ரஷ்ய படைகளை தோற்கடித்தன = டானென்பர்க் போர்.
- பிரெஞ்சுப் படைகள், எந்தப் போரில் ஜெர்மனியை வெற்றி கொண்டனர் = மார்ன் போரில் (1914).
- ஜெர்மனியிடம் இருந்து பாரிஸ் நகரை மீட்ட போர் = மார்ன் போரில் (1914).
- “பதுங்குக் குழி” (trench warfare) போரின் தொடக்கம் எனப்படுவது = மார்ன் போர் (1914).
- ஜெர்மானியர்கள், பிரான்சின் எந்த முக்கிய கோட்டையை தாக்கினர் = வெர்டன் கோட்டை.
- வெர்டன் போ நடைபெற்ற ஆண்டு = 1916.
- ஆங்கிலேயர்கள், ஜெர்மை படையை எந்த நதிக்கரையில் எதிர்த்து போரிட்டனர் = சோம்மி நதி.
- “சோம்மி போரில்” இங்கிலாந்து, ஜெர்மனியை வீழ்த்தியது.
- “ரஷ்யப் புரட்சி” நடைபெற்ற ஆண்டு = அக்டோபர் 1917.
- ரஷ்யப் புரட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது = அக்டோபர் புரட்சி.
- முதல் உலகப் போரில், ரஷ்யா, ஜெர்மனியோடு செய்துக் கொண்ட ஒப்பந்தம் = பிரெஸ்ட் – லிடோவஸ்க் ஒப்பந்தம் (Treaty of Brest-Litovsk).
முதல் உலகப்போரில் அமேரிக்கா
- “ஜூட்லேண்டு கடற் போர்” நடைபெற்ற ஆண்டு = 1916.
- ஜூட்லேண்டு கடல் போரில், இங்கிலாந்து, ஜெர்மனியை தோற்கடித்தது.
- முதல் உலகப் போரில் சென்னை மீது குண்டுகளை வீசிய ஜெர்மானிய கப்பல் = எம்டன் கப்பல்.
- ஜெர்மனியால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கப்பல் = லூசிடானியா.
- ஜெர்மனிக்கு எதிராக போரை அறிவித்த அமெரிக்க அதிபர் = உட்ரோ வில்சன்.
- எப்பொழுது ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்க போரை துவக்கியது = ஏப்ரல் 1917.
முதல் உலகப்போரின் முடிவு
- முதலாம் உலகப் போரில் ஜெர்மனி சரணடைந்த ஆண்டு = நவம்பர் 1918.
- முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்த நாள் = 11 நவம்பர் 1918.
- முதல் உலகப் போரில் பொழுது ஜெர்மனியின் அரசராக இருந்தவர் = கெய்சர் இரண்டாம் வில்லியம்.
பாரிஸ் அமைதி மாநாடு
- பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்ற ஆண்டு = ஜனவரி 1919.
- பாரிஸ் அமைதி மாநாட்டில் பங்கு வகித மூன்று முக்கிய நாடுகள் = அமேரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ்.
- முதலாம் உலகப் போரில் முடிவில் ஜெர்மனி கையெழுத்திட்ட உடன்படிக்கை = வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை.
- வெர்செய்ல்ஸ் அமைதி உடன்படிக்கை கையெழுத்தான தினம் = 28 ஜூன் 1919.
வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகள்
- வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் படி, “போலந்து” நாடு மீண்டும் உருவாக்கப்பட்டது.
- ஆஸ்திரியா, ஜெர்மனி ஒருங்கிணைப்பு தடை செய்யப்பட்டது.
- ஜெர்மனி, ரஷ்யாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
துருக்கி
- முதல் உலகப் போரின் முடிவில் துருக்கி செய்துக்கொண்ட உடன்படிக்கை = செவ்ரஸ் உடன்படிக்கை.
- துருக்கி சுல்தான் ஏற்றுக்கொண்டாலும், இந்த உடன்படிக்கையை “முஸ்தபா கமால் பாட்சா” ஏற்க மறுத்ததால் இந்த உடன்படிக்கை தோற்றுப் போனது.
- முஸ்தபா கமால் பாட்சா, துருக்கியை ஒரு புதிய சுதந்திர நாடாக மீட்டு எடுத்தார்.
முதல் உலகப்போரின் விளைவுகள்
- முதல் உலகப் போரில் எட்டு மில்லியன் மக்கள் மாண்டனர்..
- 1918ல் “இன்ப்ளுயன்சா” நோயினால் மில்லியன் கணக்கான மக்கள் இறந்தனர்.
- முதல் உலகப் போரில் ஏற்பட்ட மிக முக்கிய நிகழ்வு = ரஷ்யாவின் எழுச்சியும், ஒருங்கிணைப்பும்.
இந்தியாவின் மீதான தாக்கம்
- போர் செலவிற்காக இந்தியா சார்பில் 230 மில்லியன் பவுண்டுகள் ரொக்கமாகவும், 125 மில்லியன் பவுண்டுகள் கடனாகவும் வழங்கப்பட்டது.
- 250 மயிலியன் பவுண்டுகள் மதிப்பிலான போர்முனைக்கு தேவையான பொருள்களை இந்தியா வழங்கியது.
- முதல் உலகப் போரின் முடிவில் இந்தியாவில் உதயமான இயக்கம் = தன்னாட்சி இயக்கம்.
ரஷ்யப் புரட்சி
- முதல் உலகப் போரில் ஏற்பட்ட மிக முக்கிய நிகழ்வு = ரஷ்யப் புரட்சி.
- முதல் உலகப் போரின் முடிவில் “சார் மன்னர்” பதவி விலகினார்.
- அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் = பூர்ஷ்வாக்கள்.
- இவர்கள் போரை தொடர் விரும்பினர். ஆனால் மக்கள் அதனை ஏற்கவில்லை.
- லெனின் தலைமையில் ரஷ்யாவில் மாபெரும் புரட்சி உருவானது.
- இறுதியில் லெனின், ரஷ்யாவில் கம்யூனிச அரசை உருவாக்கினார்.
ரஷ்யப் புரட்சிக்கான காரணங்கள்
- ரஷ்யாவில் பண்ணை அடிமை முறையை ஒழித்தவர் = மன்னர் சார் இரண்டாம் அலெக்சாண்டர்.
- ரஷ்ய மன்னருக்கு எதிராக பேரணியை நடத்தியவர் = கபான் என்னும் பாதிரியார்.
- பேரணியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
- இந்நிகழ்வு “குருதி ஞாயிறு” (Bloody Sunday) என அழைக்கப்படுகிறது.
- இடதுசாரிகள் உருவாக்கிய “சோவியத்” குழுவின் தலைவராக பதவி ஏற்றவர் = டிராட்ஸ்கி.
- ரஷ்யாவின் நாடாளுமன்றம் = டூமா.
- ரஷ்யப் பேரரசின் தலைநகரம் = பெட்ரோகிரேட்.
- பெண் உழைப்பாளிகள் “உழைப்போருக்கு ரொட்டி” என்ற கோஷத்துடன் தலைநகரில் பேரணி நடத்தினர்.
- மன்னர் சார் இரண்டாம் நிக்கோலஸ் பதவி விலகிய தினம் = 15 மார்ச் 1917.
- ரஷ்யாவில் புரட்சி வெடித்த பொழுது லெனின் இருந்த நாடு = சுவிட்சர்லாந்து.
- “அணைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே” என்று முழங்கியவர் = லெனின்.
லெனின்
- ரஷ்யாவில் கம்யூனிச அரசு பதவி ஏற்ற தினம் = 8 நவம்பர் 1917.
- முதல் உலகப் போரில் இருந்து விலக ரஷ்யா ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை = பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை (1918).
- சோவியத் ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ நாளேடு = பிரவ்தா.
- பிரவ்தா என்பது = ரஷ்ய மொழிச் சொல். இதன் பொருள் “உண்மை”.
பன்னாட்டு சங்கம்
- உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு = பன்னாட்டு சங்கம்.
- பன்னாட்டு சங்கம் (League of Nations) உருவாக காரணமாக இருந்தவர் = அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன்.
- பன்னாட்டு சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு = 1920.
- பன்னாட்டு சங்கத்தில் இருந்த உறுப்புகள் மொத்தம் = ஐந்து.
-
- பொதுச்சபை
- செயற்குழு
- செயலகம்
- பன்னாட்டு நீதிமன்றம்
- பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
-
- பன்னாட்டு சங்கத்தின் தொடக்கத்தில் நிரந்திர உறுப்பினர்களாக இருந்த நாடுகள் = பிரிட்டன், இத்தாலி, ஜப்பான், அமேரிக்கா, பிரான்ஸ்.
- பன்னாட்டு சங்கத்தின் தலைமையகம் அமைந்த இடம் = ஜெனிவா.
- பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் = பிரிட்டனின் சர் எரிக் டிரம்மாண்ட்.
- பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம் = தி ஹேக் நகரம்.
- பன்னாட்டு சங்கத்தில் ஜெர்மனி இணைந்த ஆண்டு = 1926.
- பன்னாட்டு சங்கத்தில் இருந்து ஜெர்மனி விலகிய ஆண்டு = 1933.
- பன்னாட்டு சங்கத்தில் ரஷ்யா இணைந்த ஆண்டு = 1934.
- பன்னாட்டு சங்கத்தில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்ட ஆண்டு = 1939.
பன்னாட்டு சங்கத்தின் கட்டுப்பாடுகள் மீறல்
- பன்னாட்டு சங்கம் சார்பில் ஆயுதம் குறைப்பு தொடர்பான மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1932.
- ஜெர்மனி பன்னாட்டு சங்கத்தில் இருந்து வெளியேறிய ஆண்டு = 1933.
- பின்லாந்தை தாக்கியதற்காக ரஷ்யா 1939ல் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- பன்னாட்டு சங்கம் கலைக்கப்பட்ட ஆண்டு = 1946.
புத்தக வினாக்கள்
- முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை? = ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்.
- பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்த் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது? = ஜப்பான்.
- “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்று கூறியவர்? = லெனின்.
- மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது? = பதுங்குக் குழிப்போர் முறை.
- பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டை சேர்ந்தவர்? = பிரிட்டன்.
- பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது? = ரஷ்யா.
- _____________ ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாக போரிட்டது? = 1894.
- 1913 ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட _______________ உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது? = இலண்டன்.
- _____________ ஆண்டில் ஜப்பான், இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்துக் கொண்டது? = 1904.
- பால்கனில் ________________ நாடு பல்வகை இன மக்களை கொண்டிருந்தது? = மாசிடோனியா.
- டானென்பர்க் போரில் _____________ பேரிழப்புகளுக்கு உள்ளானது? = ரஷ்யா.
- பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரநிதியாகப் பங்கேற்ற பிரான்சின் பிரதமர் ___________ ஆவார்? = கிளமென்சோ.
- ______________ ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது? = 1925.
முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
- 9 ஆம் வகுப்பு வரலாறு
- 9TH ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
- முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
- முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
- முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
- முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
- 2024 ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்
- IMPORTANT DAYS IN AUGUST 2024
- 9TH தொழிற்புரட்சி
- 9TH புரட்சிகளின் காலம்
- 9TH நவீன யுகத்தின் தொடக்கம்