ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Table of Contents

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

  • கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் நோக்கத்திற்கு எங்கிருந்து முதல் எதிர்வினை தோன்றியது = திருநெல்வேலி பகுதியில் நெற்கட்டும்செவலில் ஆட்சி புரிந்து வந்த பூலித்தேவரிடம் இருந்து வந்தது.
  • கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்? = பூலித்தேவர்.
  • பாளையக்காரர் போர் என்பது = பூலித்தேவரை தொடர்ந்து வேலுநாச்சியார், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்றோர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டப் போர்கள்.
  • வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு = 1806.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

பாளையக்காரர்கள்

  • பாளையம் என்றால் என்ன = ஒரு பகுதியையோ, ஒரு இராணுவ முகாமையோ அல்லது ஒரு சிற்றரசையோ குறிக்கும்.
  • பாளையக்காரர்கள் என்றால் என்ன = இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில அரசு ஆகும்.
  • பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர் = போலிகார் (Poligar).
  • பாளையக்காரர்கள் முறையை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் = வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசன் பிரதாபபருத்ரன் ஆட்சிக்காலத்தில்.
  • மதுரை நாயக்கராக விஸ்வநாத நாயக்கர் பதவி ஏற்ற ஆண்டு = 1529.
  • தமிழகத்தின் பாளையக்காரர்கள் முறையை அறிமுகம் செய்தவர்கள் = நாயக்க மன்னர்கள்.
  • தமிழகத்தின் முதன் முதலில் பாளையக்காரர் முறையை அறிமுகம் செய்தவர் = மதுரை விஸ்வநாத நாயக்கர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • யாருடைய உதவியுடன் மதுரை விஸ்வநாத நாயக்கர் தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகம் செய்தார் = அமைச்சர் அரியநாதர்.
  • தமிழகத்தில் மொத்தம் பாளையக்காரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது = 72 பாளையக்காரர்கள்.
  • படிக்காவல் அல்லது அரசுக்காவல் என்றால் என்ன = பாளையக்கார மன்னர்களின் காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக்காவல் என்றும் அழைக்கப்பட்டது.
  • கிழக்கில் அமையப்பெற்ற முக்கிய பாளையங்கள் = சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி.
  • மேற்கில் அமையப்பெற்ற முக்கிய பாளையங்கள் = ஊத்துமலை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர்.
  • பாளையக்காரர்கள் புரட்சி நடைப்பெற்ற காலம் = 1755 – 1801.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

பூலித்தேவரின் புரட்சி

  • ஆற்காட்டு நவாப் = முகமது அலி.
  • ஆற்காட்டு நவாப்பின் சகோதரர் = மாபூஸ்கான்.
  • பூலித்தேவரை அடக்க யாரை அனுப்பினான் மாபூஸ்கான் = ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரான்.
  • ஆனால் கர்னல் ஹெரான் தனது திட்டத்தை கைவிட்டு மதுரைக்கு திரும்பினார்.
  • ஆங்கில கம்பனி கர்னல் ஹெரானை பதவி நீக்கம் செய்தது.
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட “பாளையக்காரர்கள் கூட்டமைப்பை” ஏற்படுத்தியவர் = பூலித்தேவர்.
  • கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்? = பூலித்தேவர்.
  • பாளையக்காரர் கூட்டமைப்பில் சேராத முக்கிய பாளையங்கள் = சிவகிரிப் பாளையம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி.
  • ஆங்கிலேயர்கள் எந்த மன்னர்களின் ஆதரவைப் பெற்றனர் = இராமநாதபுரம், புதுக்கோட்டை.
  • மாபூஸ்கான் தலைமையிலான நவாப்பின் படைகள், பூலித்தேவரை எதிர்த்து எங்கு போரிட்டது = களக்காடு.
  • பூலித்தேவர் மற்றும் மாபூஸ்கான் இடையே நடைபெற்ற போர் = களக்காடு போர்.
  • களக்காடு போரில் மாபூஸ்கான் தலைமையிலான படை தோல்வியை தழுவியது.
  • களக்காடு போரில் பூலித்தேவருக்கு பெரிதும் உதவியவர் = திருவிதாங்கூர் மன்னர்.
  • பூலித்தேவர் தலைமையிலான “திருநெல்வேலி பாளையக்காரர்கள்” தொடர்ந்து நவாபை எதிர்த்து வந்தனர்.

யூசுப்கான் (மருதநாயகம்)

  • பூலித்தேவரை தோற்கடிக்க ஆங்கிலேய கம்பெனி படை யாரை அனுப்பியது = யூசுப்கான்.
  • கான்சாகிப் என்று அழைக்கப்பட்டவர் = யூசுப்கான்.
  • கான்சாகிப் மதமாற்றத்திற்கு முன் எவ்வாறு அழைக்கப்பட்டார் = மருத நாயகம்.
  • யூசுப்கான் (மருத நாயகம்) நெற்கட்டும்சேவலை எப்பொழுது தாக்கினார் = செப்டம்பர் 1760.
  • பூலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகள் = நெற்கட்டும்செவல், வாசுதேவநல்லூர், பனையூர்.
  • பூலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகளை யூசுப்கான் கைப்பற்றிய தினம் = 16 மே 1761.
  • யூசுப்கான் (மருதநாயகம்) எந்த ஆண்டு தூக்கில் இடப்பட்டார் = 1764.
  • ஆங்கில கம்பெனியிடம் தகவல் தெரிவிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதால் ஆங்கிலேய கம்பெனி, யூசப்கானை தூக்கில் இட்டது.

பூலித்தேவரின் வீழ்ச்சி

  • கான்சாகிப் (மருதநாயகம்) மறைவை தொடர்ந்து பூலித்தேவர் நெற்கட்டும்செவலை மீண்டு கைப்பற்றிய ஆண்டு = 1764.
  • நெற்கட்டும் சேவலை இறுதியாக கைப்பற்றிய ஆங்கிலேய படைத்தளபதி = கேப்டன் கேம்ப்பெல்.
  • எந்த ஆண்டு கேப்டன் கேம்ப்பெல் தலைமையிலான ஆங்கிலேய படை பூலித்தேவரை தோற்கடித்தது = 1767.

ஒண்டிவீரன் யார்?

  • பூலித்தேவரின் படைத் தளபதிகளில் ஒருவர் = ஒண்டிவீரன்.
  • பூலித்தேவரோடு இணைந்து ஆங்கிலேயரை கடுமையாக எதிர்த்தார்.
  • போரில் ஒண்டிவீரனின் ஒரு கை துண்டானது.
  • எதிரியின் கோட்டையில் நுழைந்து எதிர் வீரர்களை கொன்றதற்கான தமக்கு கிடைத்த பரிசு இது என்று கூறியவர் = ஒண்டிவீரன்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

வேலுநாச்சியார்

  • வேலுநாச்சியாரின் காலம் = 1730 – 1796.
  • வேலுநாச்சியாரின் தந்தை = இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி.
  • அரசரின் ஒரே வாரிசு = வேலுநாச்சியார்.
  • வேலுநாச்சியார் யாரை மணந்தார் = சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர்.
  • வேலுநாச்சியாருக்கு பிறந்த மகள் = வெள்ளச்சி நாச்சியார்.
  • சிவகங்கை மனனர் முத்துவடுகநாதரின் காளையார்கோவில் அரண்மனையை தாக்கியவர்கள் = ஆற்காடு நவாப், ஆங்கிலேய தளபதி லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர்.
  • “காளையார்கோவில் போர்” நடைபெற்ற ஆண்டு = 1772.
  • காளையார்கோவில் போரில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார்.
  • வேலுநாச்சியாரும், வெள்ளச்சி நாச்சியாரும் திண்டுக்கல்லை ஆண்ட கோபால நாயக்கரின் பாதுகாப்பில் “விருப்பாட்சி” என்னும் இடத்தில எட்டு ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தனர்.
  • இக்காலக்கட்டத்தில் வேலு நாச்சியார், ஹைதர் அலி மற்றும் கோபால நாயக்கரோடு சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு புதிய படையை உருவாக்கினார்.
  • வேலுநாச்சியாரின் “தளவாய்” (இராணுவத் தலைவர்) = தாண்டவராயனார்.
  • “தளவாய்” என்பதன் பொருள் = இராணுவத் தலைவர்.
  • வேலுநாச்சியாரின் சார்பில் ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதியவர் = வேலுநாச்சியாரின் தளவாய் தாண்டவராயனார்.
  • வேலுநாச்சியார் சார்பில் ஹைதர் அலிக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு படைகள் உதவிக்கு கோரப்பட்டது = ஐயாயிரம் குதிரைப்படை வீரர்கள் மற்றும் ஐயாயிரம் காலாட்படை வீரர்கள்.
  • ஹைதர் அலியின் திண்டுக்கல் கோட்டை படைத்தளபதி = சையது.
  • ஹைதர் அலி மற்றும் கோபால நாயக்கரின் உதவியோடு ஆங்கிலேயரை தோற்கடித்து சிவகங்கையை வென்றார்.
  • மருது சகோதரர்கள் உதவியுடன் சிவகங்கையின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார்.
  • இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் அல்லது முதல் பெண் அரசி (the first female ruler or queen to resist the British colonial power in India) = வேலுநாச்சியார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

விருப்பாட்சியின் பாளையக்காரர் கோபால நாயக்கர்

  • சிவகங்கை அரசி வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்தவர் = திண்டுக்கல்லின் கோபால நாயக்கர்.
  • கோபால நாயக்கரின் ஆட்சிப் பகுதி = விருப்பாட்சி.
  • ஆங்கிலேயரை எதிர்த்த திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் = கோபால நாயக்கர்.
  • திப்பு சுல்தானுடன் நட்பு பாராட்டினார்.
  • கட்டபொம்மனின் சகோதரரான ஊமைத்துரையுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்தார்.
  • எந்த பகுதியில் நடைபெற்ற போரில் உள்ளூர் விவசாயிகளின் ஆதரவுடன் ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போரிட்டார் கோபால நாயக்கர் = ஆனைமலை.

வேலுநாச்சியாரின் தோழி குயிலி

  • வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழி = குயிலி.
  • வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் = உடையாள்.
  • உடையாள் என்பது = ஆங்கிலேயரிடம் குயிலி பற்றி தகவல் கூற மறுத்து உயிர் விட்ட மேய்ச்சல் தொழில் புரிந்த பெண்மணி.
  • குயிலி தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் நுழைந்து ஆயுதக் குவியல்களை அழித்து தனது உயிரை விட்டார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

வீரபாண்டிய கட்டபொம்மன்

  • வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை = ஜெகவீரபாண்டியன்.
  • பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக கட்டபொம்மன் எந்த வயதில் பதவி ஏற்றார் = 30வது வயதில்.
  • எந்த ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியிடம் இருந்து வரி வசூலிக்கும் உரிமை ஆங்கிலேய கம்பெனிக்கு சென்றது = 1781.
  • 1798ல் கட்டபொம்மன் ஆங்கிலேய கம்பெனிக்கு வழங்க வேண்டிய நிலுவை வரி எவ்வளவு = 3310 பகோடாக்கள்.
  • 1798 ஆகஸ்ட் 18ஆம் தேதி தன்னை இராமநாதபுரத்தில் வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கடிதம் அனுப்பிய ஆங்கிலேய ஆட்சியர் = ஜாக்சன்.
  • கட்டபொம்மன், ஆங்கிலேய ஆட்சியர் ஜாக்சனை சந்தித்த தினம் = 1798 செப்டம்பர் 19.
  • கட்டபொம்மன் ஜாக்சன் முன்பு மூன்று மணிநேரம் நிற்கவைக்கப்பட்டார்.
  • கட்டபொம்மனின் அமைச்சர் = சிவசுப்ரமணியன்.
  • கட்டபொம்மனும், சிவசுப்ரமணிமும் இராமநாதபுரம் கோட்டையில் இருந்து தப்பிக்க உதவியவர் = கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை.
  • இராமநாதபுரம் கோட்டையில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட ஆங்கிலேயர் = லெப்டினன்ட் கிளார்க்.
  • பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய கட்டபொம்மன் ஆட்சியர் ஜாக்சன் தன்னை நடத்திய விதம் குறித்து மெட்ராஸ் ஆட்சிக் குழுவிற்கு கடிதமாக எழுதினார்.
  • இதனால் கலெக்டர் ஜாக்சனை பதவி நேக்கம் செய்து உத்தரவிட்டது மெட்ராஸ் ஆட்சிக் குழு.
  • கலெக்டர் ஜாக்சனை பனி நீக்கம் செய்தவர் = மெட்ராஸ் ஆளுநர் எட்வார்ட் கிளைவ்.
  • ஜாக்சனுக்கு பதிலாக யாரை இராமநாதபுரம் ஆட்சியராக நியமித்தது மெட்ராஸ் ஆங்கில கம்பெனி = எஸ்.ஆர்.லூஷிங்டன்.
  • கட்டபொம்மன் ஆங்கில கம்பெனிக்கு நிலுவையாக வைத்திருந்த தொகை = 1080 பகோடாக்கள்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

பாளையக்காரர்கள் கூட்டமைப்பு

  • பாளையக்காரர்களை உள்ளடக்கிய “தென்னிந்திய கூட்டமைப்பை” உருவாக்கியவர் = சிவகங்கையின் மருது பாண்டியர்.
  • மருது பாண்டியரின் “தென்னிந்திய கூட்டமைப்பின்” சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை = திருச்சிராப்பள்ளி அறிக்கை.
  • தென்னிந்திய கூட்டமைப்பில் சிவகிரி பாளையத்தை சேர்க்க கட்டபொம்மன் முயற்சி செய்தார். ஆனால் சிவகிரி பாளையம் உடன்படவில்லை.
  • இதனால் கட்டபொம்மன் சிவகிரி பாளையக்காரர் மீது படை எடுத்தார்.
  • சிவகிரி பாளையகாரர்களை காக்க ஆங்கிலேய கம்பெனி, தனது படைகளை திருநெல்வேலி நோக்கி அனுப்பியது.
  • கட்டபொம்மன் மீது படையெடுக்க, படைகளை திருநெல்வேலி நோக்கி அனுப்பிய மெட்ராஸ் ஆளுநர் = வெல்லஸ்லி பிரபு.
  • எந்த ஆண்டு வெல்லஸ்லி பிரபு, ஆங்கிலேய படைகளை கட்டபொம்மன் மீது படையெடுக்க ஏதுவாக திருநெல்வேலிக்கு அனுப்பினார் = மே 1799.
  • கட்டபொம்மனுக்கு எதிராக படையெடுப்பு நடத்திய ஆங்கிலேய படைத்தளபதி = மேஜர் பானெர்மென்.
  • சரணடைய சொல்லி கட்டபொம்மனுக்கு கடிதம் வழங்கப்பட்ட தினம் = 1 செப்டம்பர் 1799.
  • மேஜர் பானெர்மென் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தாக்கிய தினம் = 5 செப்டம்பர் 1799.
  • மேஜர் பானெர்மென், கட்டபொம்மனை சரணடைய சொல்லி யாரை தூதாக அனுப்பினார் = இராமலிங்கர்.
  • எங்கு நடைபெற்ற போரில், கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணி கைது செய்யப்பட்டார் = கோலார்பட்டி.

கட்டபொம்மன் தூக்கிலிடப்படல்

  • பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து கட்டபொம்மன் எங்கு தப்பிச் சென்றார் = புதுக்கோட்டை.
  • கட்டபொம்மனுக்கு துரோகம் இழைத்து, ஆங்கிலேயர்களிடம் தகவல் தெரிவித்தவர்கள் = எட்டயபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்கள்.
  • கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணியம் எங்கு தூக்கிலிடப்பட்டார் = நாகலாபுரம்.
  • கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணியம் எப்பொழுது தூக்கிலிடப்பட்டார் = 13 செப்டம்பர் 1799.
  • கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் = 16 அக்டோபர் 1799.
  • கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் = திருநெல்வேலி அருகே “கயத்தாறு” என்னுமிடத்தில் உள்ள பழையகோட்டைக்கு முன்பாக இருந்த புளிய மரத்தில்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

மருது சகோதரர்கள்

  • பெரிய மருது என்பவர் = வெள்ள மருது.
  • சிவகங்கை அரசர் = முத்துவடுகநாதர்.
  • முத்துவடுகநாதரின் படைத்தளபதிகள் = பெரியமருது (வெள்ள மருது) மற்றும் சின்ன மருது.
  • எந்தப் போரில் முத்துவடுகநாதர் இறந்தார் = காளையார்கோவில் போர்.
  • கட்டபொம்மனின் இறப்பிற்கு பிறகு மருது சகோதரர்கள், ஊமைத்துரையுடன் சேர்ந்து பணியாற்றினர்.
  • மருது சகோதரர்கள் நவாபுக்கு சொந்தமான களஞ்சியங்களைக் கொள்ளையடித்தனர்.
  • இரண்டாவது பாளையக்காரர் போர் என்பது = சிவகங்கையின் மருது பாண்டியர்கள், திண்டுக்கல் கோபால நாயக்கர், மலபாரின் கேரள வர்மா, மைசூரின் துண்டாஜி மற்றும் கிருஷ்ணப்பா ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பு, ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட போர் ஆகும்.
  • கட்டபொம்மனின் சகோதரர்கள் ஊமைத்துரையும், செவத்தையாவும் எங்கிருந்து தப்பினர் = பாளையங்கோட்டை சிறை.
  • ஊமைத்துரை மற்றும் செவத்தையா ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்து எங்கு பதுங்கி இருந்தனர் = கமுதி.
  • மருது பாண்டியர்களின் தலைமையகம் = சிறுவயல்.
  • பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகை இட்ட ஆங்கிலேய தளபதி = காலின் மெக்கலே.
  • பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் இருந்து ஊமைத்துரை மற்றும் செவத்தையா ஆகியோர் எங்கு அடைக்கலம் சென்றனர் = சிவகங்கை (மருது பாண்டியர்களிடம்).
  • மருது சகோதரர்களின் சிவகங்கை மீது படையெடுத்த ஆங்கிலேய தளபதி = கர்னல் அக்னியூ மற்றும் கர்னல் இன்னஸ்.
  • நாட்டின் விடுதலையை முன்னிட்டு மருது சகோதரர்கள் வெளியிட்ட அறிக்கை = திருச்சிராப்பள்ளி பேரறிக்கை.
  • திருச்சிராப்பள்ளி பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு = ஜூன் 1801.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

திருச்சிராப்பள்ளி பேரறிக்கை 1801

  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்றிணைக்க முதன் முதலில் வெளியிடப்பட்ட பிரகடனம் = திருச்சிராப்பள்ளி பிரகடனம் (The Proclamation of 1801 was an early call to the Indians to unite against the British).
  • திருச்சிராப்பள்ளி பேரறிக்கை எங்கு ஓட்டப்பட்டன = திருச்சி நவாப் கோட்டையின் சுவர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலின் சுவர்களில்,
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக சின்ன மருது சுமார் 20000 வீரர்களை ஒன்று திரட்டினார்.
  • ஆங்கிலேயர்கள் இப்போரில் வெற்றி பெற்றனர்.
  • மருது சகோதரர்கள் எங்கு தூக்கில் இடப்பட்டனர் = இராமநாதபுரம் அருகே உள்ள திருப்பத்தூர் கோட்டை.
  • மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட தினம் = 24 அக்டோபர் 1801.
  • கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும், செவத்தையாவும் எங்கு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர் = பாஞ்சாலங்குறிச்சி.
  • கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும், செவத்தையாவும் கொல்லப்பட்ட தினம் = 16 நவம்பர் 1801.
  • இரண்டாவது பாளையக்காரர் போரில், எத்தனை வீரர்கள் மலேயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டனர் = 73 பேர்.
  • மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = தென்னிந்திய புரட்சி (South Indian Rebellion).

கர்நாடக உடன்படிக்கை 1801

  • தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறையை முடிவிற்கு கொண்டு வந்த உடன்படிக்கை = கர்நாடக உடன்படிக்கை 1801.
  • கர்நாடக உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட தினம் = 31 ஜூலை 1801.
  • எந்த உடன்படிக்கையின் படி, ஆங்கிலேயர்கள் தங்களின் நேரடி கட்டுபாட்டை தமிழ்நாட்டில் பெற்றனர் = கர்நாடக உடன்படிக்கை 1801.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தீரன் சின்னமலை

  • தீரன் சின்னமலையின் இயற்பெயர் = தீர்த்தகிரி.
  • தீரன் சின்னமலை, யாரிடம் இருந்து வரி வசூல் பணத்தை கொள்ளையடித்தார் = திப்பு சுல்தானின் திவான் முகமது அலி.
  • திவான் முகமது அலிக்கும், தீரன் சின்னமலைக்கும் இடையே எங்கு போர் நடைபெற்றது = நொய்யல் ஆற்றங்கரை.
  • இப்போரில் தீரன் சின்னமலை வெற்றி பெற்றார்.
  • தீரன் சின்னமல எங்கு கோட்டையை கட்டி ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார் = ஓடாநிலை.
  • கொரில்லா போர் முறையை கையாண்ட தமிழர் = தீரன் சின்னமலை.
  • ஆங்கிலேயர்கள், தீரன் சின்னமலையை கைது செய்து எங்கு அடைத்து வைத்தனர் = சங்ககிரி கோட்டை.
  • தீரன் சின்னமலை எங்கு தூக்கிலிடப்பட்டார் = சங்ககிரி கோட்டை.
  • தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட தினம் = 31 ஜூலை 1805.

வேலூர் புரட்சி 1806

  • கட்டபொம்மன் எதிர்ப்பு அடக்கப்பட்ட ஆண்டு = 1799.
  • மருது சகோதரர்கள் எதிர்ப்பு அடக்கப்பட்ட ஆண்டு = 1801.
  • திப்பு சுல்தானின் குடும்பம் எங்கு சிறை வைக்கப்பட்டிருந்தது = வேலூர் கோட்டை.
  • வேலூர் புரட்சி ஏற்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் = ஆங்கிலேய தலைமைத் தளபதி சர் ஜான் கிரடாக்.
  • ஆங்கிலேய தலைமைத் தளபதி சர் ஜான் கிரடாக் கொண்டு வந்த புதிய ராணுவ விதிகளே, புரட்சி வெடிப்பதற்கு காரணமாக இருந்தது.
  • வேலூர் புரட்சி துவங்கிய தினம் = 10 ஜூலை 1806.
  • வேலூர் புரட்சியில், எந்த படைப்பிரிவினர் முதன் முதலில் புரட்சியை துவக்கினர் = முதல் மற்றும் 23ம் படைப்பிரிவினர்.
  • வேலூர் புரட்சியின் பொழுது பலியான முதல் ஆங்கிலேயர் = கர்னல் பேன்கோர்ட்.
  • வேலூர் புரட்சியின் பொழுது இரண்டாவதாக கொல்லப்பட்ட ஆங்கிலேய அதிகாரி = கர்னல் மீக்காரஸ்.
  • வேலூர் புரட்சியின் பொழுது ஆற்காட்டு குதிரைப்படைக்கு தளபதியாக இருந்த ஆங்கிலேய அதிகாரி = கர்னல் ஜில்லஸ்பி.
  • கர்னல் ஜில்லஸ்பி தகவல் கொடுத்தவர் = மேஜர் கூட்ஸ்.
  • யார் தலைமையிலான குதிரைப் படை வீரர்களுடன் கர்னல் ஜில்லஸ்பி வேலூர் கோட்டைக்கு வந்தடைந்தார் = கேப்டன் யங்.
  • இந்திய வீரர்கள் யாரை புதிய மன்னராக பிரகடனம் செய்தனர் = திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர்.
  • கர்னல் ஜில்லஸ்பி தலைமையிலான ஆங்கிலேய படை, கோட்டையில் பல இந்திய வீரர்களை கொன்று புரட்சியை அடக்கியது.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

வேலூர் புரட்சியால் ஏற்பட்ட விளைவுகள்

  • திப்புவின் மகன்கள் எங்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் = கல்கத்தா.
  • புரட்சியை அடக்கிய கர்னல் ஜில்லஸ்பிக்கு எவ்வளவு வெகுமதி வழங்கப்பட்டது = 7000 பகோடாக்கள்.
  • வேலூர் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர்கள் என யாரை ஆங்கிலேய அரசு கருதியது = தலைமைத் தளபதி ஜான் கிரடாக், உதவித் தளபதி அக்னியூ, சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் பெண்டிங்.
  • வேலூர் புரட்சி ஏற்பட காரணமாக இருந்ததாக கருதி தலைமைத் தளபதி ஜான் கிரடாக், உதவித் தளபதி அக்னியூ, சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் பெண்டிங் ஆகிய மூவரையும் ஆங்கில ராசு பதவி நீக்கம் செய்து, இங்கிலாந்திற்கு திருப்பி அழைத்துக் கொண்டது.
  • வேலூர் புரட்சி தோல்வியில் முடிந்ததற்கான காரணம் = வெளியில் இருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.

புத்தக வினாக்கள்

  1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்? = பூலித்தேவர்.
  2. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்? = பூலித்தேவர்.
  3. சிவசுப்பிரமணியர் எங்கு தூக்கிலிடப்பட்டார்? = நாகலாபுரம்.
  4. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்? = மருது சகோதரர்கள்.
  5. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது? = 1806 ஜூலை 10.
  6. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகள் அறிமுகப்படுத்தக் காரணமாக இருந்த தலைமை தளபதி யார்? = சர் ஜான் கிரடாக்.
  7. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்? = கல்கத்தா.
  8. பாளையக்காரர் முறை தமிழகத்தில் _______________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது? = மதுரை விஸ்வநாத நாயக்கர் மற்றும் அவரின் அமைச்சர் அரியநாதர்.
  9. வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக ____________ பாதுகாப்பில் இருந்தனர்? = திண்டுக்கல்லின் கோபால நாயக்கர்.
  10. கட்டபொம்மனை சரணடைய கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் _________ என்பவரை அனுப்பிவைத்தார்? = இராமலிங்கர்.
  11. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் ___________ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது? = இரண்டாவது பாளையக்காரர் போர்.
  12. ____________ என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்? = பதே ஹைதர்.

 

Leave a Reply