கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- ஊர் = கன்னியாகுமரி மாவட்டம் தேரூர்
- பெற்றோர் = சிவதாணுபிள்ளை, ஆதிலட்சுமி அம்மையார்
- துணைவியார் = உமையம்மையார்
- ஆசிரியர் = சாந்தலிங்க தம்பிரான்
- காலம் = 27.08.1876-26.09.1954
கவிமணி சிறப்பு பெயர்கள்
- கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
- குழந்தை கவிஞர்
- தேவி
- நாஞ்சில் நாட்டு கவிஞர்
- தழுவல் கவிஞர்
கவிமணி நூல்கள்
- அழகம்மை ஆசிரிய விருத்தம்(இயற்றிய முதல் நூல்)
- காந்தளூர் சாலை
- மலரும் மாலையும்
- ஆசிய ஜோதி
- நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்(நகைச்சுவை நூல்)
- குழந்தைச் செல்வம்
- தேவியின் கீர்த்தனைகள்
- தீண்டாதார் விண்ணப்பம்
- கவிமணியின் உரைமணிகள்
கவிமணி குறிப்பு
- எட்வின் ஆர்னால்ட் என்பார் எழுதிய light of asia என்ற நூலை அழகிய தமிழில் ஆசிய ஜோதி என மொழிப்பெயர்த்துள்ளார்
- பாரசீக கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் ரூபாயத் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்
- மும்மொழிப் புலமை வாய்ந்தவர்
கவிமணி – சிறப்பு
- இனிய தமிழில் எவரும் விளங்கப் பாடல் இயற்றும் திறம் மிக்கவர்
- ரசிகமணி டி.கே.சி = தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம்; அறிய செல்வம், தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதும் தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கத் கூடிய வாடாத கற்பகப்பூச்செண்டு
- நாமக்கல் கவிஞர் = தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை – தினமும் கேட்பது என்செவிப் பெருமை
- டி.கே.சண்முகம் = கவிமணியின் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்குப் பண்டிதராக வேண்டியதில்லை; படிக்கத் தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்க எளியநடை
- மு.வரதராசனார் = போராட்டமும் பரபரப்பும் மிகுந்த காலத்தில் வாழ்ந்த போதிலும் அவருடைய உள்ளமும், கவிதைகளும் அமைதியும் இனிமையும் உடையனவாக விளங்கியது விந்தையே
- நாமக்கல் கவிஞர் = துரும்பென மெலிந்த தேகம், துலங்கிடும் குளிர்ந்த பார்வை, இரும்பினும் வலிய உள்ளம், இனியவே செய்யும் எண்ணம், பரம்பொருள் நினைவே காட்டும் பாரெல்லாம் பரந்த நோக்கம், கரும்பினும் இனிய சொற்கள், கவிமணி வடிவம் ஆகும்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கவிதைகள்
- தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி
அம்மா என்குது வெள்ளைப் பசு - ஓடும் உதிரத்தில் – வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடித் பார்த்தாலும் – சாதி
தெரிவதுண்டோ அப்பா? - உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை - மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா