காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Table of Contents

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

  • பிளாசிப் போர் எப்பொழுது நடைபெற்றது = 23 ஜூன் 1757.
  • பிளாசிப் போரின் பொழுது வங்காள நவாப்பாக இருந்தவர் = சிராஜ் உத் தௌலா.
  • பிளாசிப் போரின் பொழுது ஆங்கிலேய படையின் தலைமைத் தளபதி = ராபர்ட் கிளைவ்.
  • பிளாசிப் போரில் வங்காள நவாப் படையின் தளபதி = சிராஜ் உத் தௌலாவின் சித்தப்பா மீர் ஜாபர்.
  • பிளாசிப் போரில் ராபர்ட் கிளைவ் யாரின் ஆதரவை பெற்றிருந்தார் = மீர் ஜாபர் மற்றும் ஜகத் சேத்துகள் (வங்காளத்தில் வட்டிக்கு பணம் கொடுப்போர்).
  • பிளாசிப் போரின் முடிவிற்கு பிறகு வங்காளத்தின் புதிய நவாப்பாக பதவி ஏற்றவர் = மீர் ஜாபர்.
  • இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட செல்வங்களை கொண்டு ஆங்கிலேயர்கள், இங்கிலாந்தின் தொழில் புரட்சிக்கு செலவு செய்தனர்.
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

ஃபராசி இயக்கம்

  • ஃபராசி இயக்கத்தை துவக்கியவர் = ஹாஜி ஷரியத்துல்லா.
  • ஃபராசி இயக்கம் துவக்கப்பட்ட ஆண்டு = 1818.
  • ஹாஜி ஷரியத்துல்லா மறைவிற்கு பிறகு ஃபராசி இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர் = ஹாஜியின் மகன் டுடு மியான்.
  • “நிலம் கடவுளுக்கு சொந்தமானது” (Land belongs to God) என்று கூறியவர் = டுடு மியான்.
  • டுடு மியானின் மறைவிற்கு பிறகு ஃபராசி இயக்கத்தை நடத்தியவர் = நோவா மியான்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

வஹாபி கிளர்ச்சி

  • வஹாபி கிளர்ச்சி எதற்கு எதிராக துவங்கப்பட்டது = ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக.
  • வஹாபி கிளர்ச்சி எங்கு நடைபெற்றது = வங்காளத்தின் பிரசத் என்னுமிடத்தில்.
  • வஹாபி கிளர்ச்சி எப்பொழுது நடைபெற்றது = 1827.
  • வஹாபி கிளர்சிக்கு தலைமை தாங்கியவர் = டிடு மீர் (இஸ்லாமிய மதபோதகர்).
  • ஜமீன்தாரி முறையால் ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய விவசாயிகளுக்கு ஆதரவாக துவக்கப்பட்ட கிளர்ச்சி = வஹாபி கிளர்ச்சி.

முக்கிய பழங்குடியினர் கிளர்ச்சி

  • கோல் கிளர்ச்சி
  • சாந்தலர்களின் கிளர்ச்சி
  • முண்டா கிளர்ச்சி

கோல் கிளர்ச்சி

  • கோல் கிளர்ச்சி எங்கு நடைபெற்றது = ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் உள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் பகுதியில்.
  • கோல் கிளர்ச்சி எப்பொழுது நடைபெற்றது = 1831-32.
  • கோல் கிளர்ச்சி = ஓர் பழங்குடியினர் கிளர்ச்சி.
  • கோல் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் = பிந்த்ராய் மற்றும் சிங்ராய்.
  • பழங்குடியின மக்களுக்கும் வட்டிக்கு பணம் கொடுப்போருக்கும் இடையே ஏற்பட்ட சிக்கலே கோல் கிளர்ச்சி ஏற்பட காரணம் ஆகும்.
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

சாந்தலர்களின் கிளர்ச்சி

  • சாந்தலர்களின் கிளர்ச்சி நடைபெற்ற பகுதி = ராஜ்மஹால் மலைப் பகுதி, பாகல்பூர்.
  • தங்களின் பூர்வீக இடத்தை விட்டு சாந்தலர்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக சாந்தலர்களின் கிளர்ச்சி துவங்கியது.
  • சாந்தலர்களின் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக யாரின் தலைமையின் கீழ் சமூக கொள்ளை நிகழ்வுகள் நடைபெற்றன = பீர் சிங்.
  • சாந்தலர்களின் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் = சித்து மற்றும் கணு (சாந்தலர் சகோதரர்கள்).
  • சாந்தலர்களின் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு = 1855.

முண்டா கிளர்ச்சி

  • முண்டா கிளர்ச்சி நடைபெற்ற பகுதி = ராஞ்சி.
  • பழங்குடியினர் கிளர்ச்சிகளில் மிக முக்கியமான கிளர்ச்சியாக கருதப்படுவது = முண்டா கிளர்ச்சி.
  • “உலுகுலன் கிளர்ச்சி” என அழைக்கப்படும் கிளர்ச்சி = முண்டா கிளர்ச்சி.
  • “குண்டக்கட்டி” (கூட்டுச்சொத்து) முறையில் விவசாயம் செய்வதில் பெயர் பெற்றவர்கள் = முண்டா மக்கள்.
  • முண்டா கிளர்சிக்கு தலைமை தாங்கியவர் = பிர்சா முண்டா.
  • தம்மை கடவுளின் தூதராக அறிவித்துக்கொண்ட பழங்குடியின தலைவர் = பிர்சா முண்டா.
  • எந்த ஆண்டு முண்டா கிளர்ச்சி நடைபெற்றது = 1889.
  • “சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம்” (Chotanagpur Tenancy Act (1908) நிறைவேற்றப்பட்ட ஆண்டு = 1908.

1857ம் ஆண்டு பெருங்கிளர்ச்சி

  • முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைக்கப்படும் கிளர்ச்சி = 1857ம் ஆண்டு பெருங்கிளர்ச்சி.
  • இந்திய இராணுவ வீரர்களுடன், ஆயுதம் ஏந்திய மக்களும் இணைந்து நடத்திய முதல் புரட்சி (the first major revolt of armed forces accompanied by civilian rebellion) = 1857ம் ஆண்டு பெருங்கிளர்ச்சி.

ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை

  • ஆங்கிலேயர்கள் இரண்டு முக்கிய கொள்கைகள் மூலம் இந்தியாவின் நிலப் பகுதிகளை இணைத்தனர். அவை,
    1. மேலாதிக்க கொள்கை (The Doctrine of Paramountcy)
    2. வாரிசு இழப்புக்கொள்கை (The Doctrine of Lapse)
  • வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்ட இந்தியப் பகுதிகள் = சதாரா, சம்பல்பூர், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர்.

1857ம் ஆண்டு பெருங்கிளர்ச்சிக்கான காரணங்கள்

  • வீரர்களுக்கு பசு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் வழங்கப்பட்டதே 1857ம் ஆண்டு பெருங்கிளர்ச்சிக்கான உடனடி காரணம் ஆகும்.
  • இந்துக்கள் பசுவை புனிதமாகவும், இஸ்லாமியர்கள் பன்றியை வெறுப்பதாலும் இந்திய வீரர்கள் இந்த என்பீல்ட் ரக துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த மறுத்தனர்.
  • மங்கள் பாண்டே ஆங்கிலேய அதிகாரிகளை கொன்ற நாள் = 29 மார்ச் 1857.
  • எப்பொழுது மீரட்டில் இருந்து தில்லி செங்கோட்டை நோக்கி சிப்பாய்கள் அணி வகுத்து சென்றனர் = 11 மே 1857.
  • 1857ம் ஆண்டு பெருங்கிளர்ச்சியின் பொழுது இந்தியாவின் மாமன்னராக தேர்வு செய்யப்பட்டவர் = இரண்டாம் பகதூர் ஷா.
  • முதன் முதலில் உள்நாட்டு கிளர்ச்சி (The first civil rebellion தோன்றிய இடம் = வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அயோத்தி (Oudh) பகுதிகளில்.

1857ம் ஆண்டு பெருங்கிளர்ச்சியில் பங்கேற்றிய முக்கிய தலைவர்கள்

  • கான்பூர் பகுதியில் நடைப்பெற்ற கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் = மராத்தியத்தின் கடைசி பேஷ்வா மன்னரான இரண்டாம் பாஜிராவின் தத்துப்பிள்ளை “நானா சாகிப்”.
  • லக்னோ பகுதியில் நடைப்பெற்ற கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் = பேகம் ஹஸ்ரத் மகால்.
  • பரெய்லி பகுதியில் நடைப்பெற்ற கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் = கான் பகதூர்.
  • ஜான்சி பகுதியில் நடைப்பெற்ற கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் = ஜான்சி ராணி லட்சுமிபாய்.

1857ம் ஆண்டு பெருங்கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததற்கான காரணங்கள்

  • திட்டமிடப்பட்ட புரட்சி அல்ல.
  • பெரும்பான்மையான பிற இந்திய மாநிலங்களில் இருந்து ஆதரவு இல்லை.
  • கிளர்ச்சியாளர்களுக்கு குறைந்த அளவே ஆயுதங்கள் கிடைத்தன.
  • முறையான தலைமை இல்லாததே தோல்வியில் முடிந்ததற்கான முக்கிய காரணம் ஆகும்.
  • இந்தியாவின் அரசராக அறிவிக்கப்பட்ட இரண்டாம் பகதூர் ஷா, பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

ஆங்கிலேய அரசின் காலனி நாடாக மாறிய இந்தியா

  • எப்பொழுது, 1858 இந்திய அரசுச் சட்டம், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது = நவம்பர் 1858.
  • இங்கிலாந்து அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா ஒரு காலனி நாடாக மாறியது.
  • ராணுவத்தில், இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற விவசாயக் கிளர்ச்சிகள்

  • கருநீலச்சாய (இண்டிகோ) கிளர்ச்சி 1859 – 1860
  • தக்காண கலவரங்கள் 1875
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

கருநீலச்சாய (இண்டிகோ) கிளர்ச்சி 1859 – 1860

  • ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளை “இண்டிகோ பயிரிட” நிர்பந்தம் செய்தனர்.
  • உணவு தானிய பயிர்களுக்கு பதிலாக இண்டிகோ செடியை பயிரிட வலியுறுத்தினர்.
  • இந்திய விவசாயிகளுக்கு இண்டிகோ பயிருக்கு மிகக் குறைந்த விலையையே விலையாக கொடுத்தனர் ஆங்கிலேயர்கள்.
  • இண்டிகோ கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு = 1859.
  • இந்தியாவில் வேலை நிறுத்த வடிவில் நடைபெற்ற கிளர்ச்சி = இண்டிகோ கிளர்ச்சி.
  • இண்டிகோ கிளர்ச்சி முதலில் எங்கு துவங்கியது = வங்காளத்தின் நடியா மாவட்டத்தில்.
  • குடங்கள் மற்றும் உலோகத்தட்டுகளை ஆயுதங்களாக ஏற்று நடைபெற்ற கிளர்ச்சி = இண்டிகோ கிளர்ச்சி.
  • இண்டிகோ கிளர்ச்சி தொடர்பாக நாடகத்தை எழுதியவர் = தீனபந்து மித்ரா.
  • “நீல் தர்பன்” (இன்டிகோவின் கண்ணாடி) எனும் நாடகத்தை எழுதியவர் = தீனபந்து மித்ரா.

தக்காண கலவரங்கள் 1875

  • தக்காணத்தில் வட்டிக்கு பணம் கொடுப்போருக்கு எதிராக எங்கு முதல் முதலில் கலவரம் நடீப்ற்றது = தக்காணத்தின் பூனா அருகே உள்ள சூபா என்னும் கிராமத்தில்.
  • தக்காண கலவரம் எப்பொழுது நடைபெற்றது = மே 1875.
  • ஆங்கிலேயர அதிகாரிகளில் இக்கலவரங்கள் ஒடுக்கப்பட்டன.

இந்திய தேசியத்தின் எழுச்சி

  • எந்த ஆண்டு “மெட்ராஸ்வாசிகள் சங்கம்” (Madras Native Association) ஆரம்பிக்கப்பட்டது =1852.
  • எந்த ஆண்டு “கிழக்கிந்திய அமைப்பு” (East India Association ஆரம்பிக்கப்பட்டது = 1866.
  • எந்த ஆண்டு “சென்னை மகாஜன சபை” (Madras Mahajana Sabha நிறுவப்பட்டது? = 1884.
  • எந்த ஆண்டு “பூனா சர்வஜனிக் சபை” (Poona Sarvajanik Sabha) நிறுவப்பட்டது? = 1870.
  • எந்த ஆண்டு “பம்பாய் மாகாண சங்கம்” (Bombay Presidency Association) துவங்கப்பட்டது? = 1885.
  • இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பொருளாதார சுரண்டல்கள் பற்றி விமர்சனம் செய்தவர்களில் முக்கியமானவர்கள் = தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே, ரொமேஷ் சந்திர தத்.

இந்திய தேசிய காங்கிரஸ்

  • இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு = 1885.
  • இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்கியவர் = ஏ.ஒ.ஹியூம்.
  • இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக இருந்தவர் = உமேஷ் சந்திர பானர்ஜி.
  • எப்பொழுது இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு (கூட்டம்) நடைபெற்றது = 28 டிசம்பர் 1885.

வங்கப் பிரிவினை 1905

  • எந்த ஆண்டு வங்கப் பிரிவினை நடைபெற்றது = 1905.
  • வங்கப் பிரிவினையின் நோக்கம் = வங்காளத்தில் இந்து, முஸ்லிம் இடையே பிளவை ஏற்படுத்துதல்.
  • வங்கப் பிரிவினைக்கு காரணமான ஆங்கிலேய ஆளுநர் = கர்சன் பிரபு.
  • வங்கப் பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது = 16 அக்டோபர் 1905.
  • வங்கப் பிரிவினையின் காரணமாக எந்த தினம், துக்கநாளாக கடைபிடிக்கப்பட்டது = 16 அக்டோபர் 1905.
  • வங்கப் பிரிவினையின் காரணமாக சுதேசி இயக்கம் இந்தியாவில் வலுப்பெறத் துவங்கியது.
  • “சவக்காரம்” என்பதன் பொருள் = சோப்புகள்.
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

தீவிர தேசியவாதிகள்

  • லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று மூக்கிய தீவிர தேசியவாதிகள் = பஞ்சாப்பின் லாலா லஜபதி ராய், மகாராஸ்டிராவின் பாலகங்காதர் திலகர், வங்காளத்தின் பிபின் சந்திர பால்.
  • தென்னிந்தியாவில் வ.உ.சிதம்பரனார் “சுதேசி கப்பல் நிறுவனத்தை” துவக்கினார்.
  • தீவிர தேசியவாதிகளின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று = சுயராஜ்யம் அல்லது அரசியல் சுதந்திரம்.

தன்னாட்சி இயக்கம் (1916-18)

  • தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தை துவக்கியவர்கள் = பாலகங்காதர் திலகர் மற்றும் அன்னிபெசன்ட்.
  • முதல் உலகப் போரில் இந்தியா பங்கேற்றதைன் விளைவே தன்னாட்சி இயக்கம் துவங்கப்பட்டதன் பின்னணி ஆகும்.
  • முதல் உலகப் போரின் முடிவில் இந்தியர்கள் எதிர்பார்த்த தன்னாட்சி அந்தஸ்தை பிரிட்டிஷ் அரசு வழங்கவில்லை.

லக்னோ ஒப்பந்தம் 1916

  • மித தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகள் மறு இணைப்பு காரணமாக முஸ்லிம்களுடன் புதிய பேச்சுக்களுக்கான சாத்தியக்கூறு எப்பொழுது ஏற்பட்டது = லக்னோ ஓப்பந்தம் படி.
  • லக்னோ ஒப்பந்தத்தின் படி, முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் வழங்க காங்கிரஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டது.

மாண்டேகு – செமஸ்போர்டு சீர்திருத்தம் 1919

  • மாண்டேகு – செமஸ்போர்டு சீர்திருத்தம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது = 1919.
  • ஆனால் ஆங்கில பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கவில்லை.

புத்தக வினாக்கள்

  1. 1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்? = ஃபராசி இயக்கம்.
  2. “நிலம் கடவுளுக்குச் சொந்தம்” என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்? = டுடு மியான்.
  3. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்? = சாந்தலர்கள்.
  4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்? = பிபின் சந்திர பால்.
  5. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது? = 16 அக்டோபர் 1905.
  6. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது? = முண்டா கிளர்ச்சி.
  7. 1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்? = திலகர்.
  8. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்? = தீன பந்து மித்ரா.
  9. மன்னராட்சிக்கும் நிலசுவான்தார்களுக்கும் எதிரான ___________ இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது? = வஹாபி இயக்கம்.
  10. சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ____________ ? = கோல் கிளர்ச்சி.
  11. சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ________ ? = 1908.
  12. உமேஷ் சந்திர பானர்ஜி இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு _________ ? = 1885.

 

 

Leave a Reply