10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து
10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம்

பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும்

கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே

–           மாணிக்கவாசகர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சொற்பொருள்

  • மெய் = உடல்
  • விதிவிதிர்த்து = உடல் சிலிர்த்து
  • விரை = மணம்
  • நெகிழ = தளர
  • ததும்பி = பெருகி
  • கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
  • சயசய வெல்க வெல்க

இலக்கணக்குறிப்பு

  • விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  • கழல் = ஆகுபெயர்

மாணிக்கவாசகர் ஆசிரியர் குறிப்பு

  • சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவர்.
  • திருவாதவூரில் பிறந்தவர்.
  • இவ்வூர் மதுரைக்கு அருகில் உள்ளது.
  • இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணிப் புரிந்தார்.
  • பாண்டிய மன்னனுக்காக குதிரை வாங்க சென்ற பொழுது, திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
  • இறைவனை மெய்யுருக பாடி கண்ணீர் மல்க அழுது தொழுதவர்.
  • இவரை “அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.
  • மாணிக்கவாசகர் எழுதியவை = திருவாசகமும் திருகோவையாரும்.
  • இவர் எழுப்பிய கோவில், தற்போது “ஆவுடையார் கோவில்” என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுகோட்டை மாவட்டம்) உள்ளது.
  • இவரது காலம் = கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு

திருவாசகம் நூல் குறிப்பு

  • சைவத் திருமுறைகள் மொத்தம் பனிரெண்டு.
  • அவற்றில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும் திருகோவையாரும் ஆகும்.
  • திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன.
  • திருவாசகத்தை சிறப்பிக்க, “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்னும் தொடர் வழங்கலாயிற்று.
  • திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

மாணிக்கவாசகர் பற்றி ஜி.யு.போப்

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

  • உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை” என்கிறார் ஜி.யு.போப்.

 

பன்னிருதிருமுறைகள்

 

 

 

Leave a Reply