10 ஆம் வகுப்பு திருக்குறள்

10 ஆம் வகுப்பு திருக்குறள்

10 ஆம் வகுப்பு திருக்குறள்
10 ஆம் வகுப்பு திருக்குறள்

10 ஆம் வகுப்பு திருக்குறள்

  • திரு + குறள் = திருக்குறள்.
  • மேன்மையான கருத்துக்களைக் குறள் வெண்பாக்களால் கூறும் நூலாதலால், திருக்குறள் எனப்பெயர் பெற்றது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

திருக்குறள் நூல் குறிப்பு

  • நாடு, மொழி, இனம், மதம், காலம் ஆகியவற்றை கடந்து நிற்கும் நூல் திருக்குறள்.
  • உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாகவும், ஒன்பது இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.
  • திருக்குறளின் பெருமையை பேசும் நூல் = திருவள்ளுவமாலை.
  • “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகம்” என்று கூறியவர் = பாரதிதாசன்.
  • “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” என்று கூறியவர் = பாவேந்தர் பாரதிதாசன்.
  • “வெல்லாத தில்லை திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள்” என்று கூறியவர் = பாவேந்தர் பாரதிதாசன்.

10 ஆம் வகுப்பு திருக்குறள்

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்

  • மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.

10 ஆம் வகுப்பு திருக்குறள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறிப்பிடும் பாடல்

நாலடி  நான்மணி  நானாற்பது ஐந்திணை முப்

பால் கடுகம் கோவை பழமொழி – மாமூலம்

இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே

கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.

திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு

  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  • தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர் முதலிய பெயர்களால் போற்றுகின்றது.
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொது நெறி காட்டியவர்.
  • இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்பர்.
  • தமிழக அரசு தைத் திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடுகிறது.

சொற்பொருள்

  • விழுப்பம் = சிறப்பு
  • ஓம்பப்படும் = காத்தல் வேண்டும்
  • பரிந்து = விரும்பி
  • தேரினும் = ஆராய்ந்து பார்த்தாலும்
  • குடிமை = உயர்குடி
  • இழுக்கம் = ஒழுக்கம் இல்லாதவர்
  • அழுக்காறு = பொறாமை
  • ஆக்கம் = செல்வம்
  • ஒல்கார் = விலகமாட்டார்
  • உரவோர் = மனவலிமை உடையோர்
  • ஏதம் = குற்றம்
  • எய்துவர் = அடைவர்
  • இடும்பை = துன்பம்
  • வித்து = விதை
  • ஒல்லாவே = இயலாவே
  • உலகம் = உயர்ந்தோர்
  • ஓட்ட = பொருந்த
  • ஒழுகல் = நடத்தல், வாழ்தல்
  • கூகை = கோட்டான்
  • இகல் = பகை
  • திரு = செல்வம்
  • தீராமை = நீங்காமை
  • பொருதகர் = ஆட்டுக்கடா
  • ஒள்ளியவர் = அறிவுடையவர்
  • செறுநர் = பகைவர்
  • சுமக்க = பணிக
  • கிழக்காந்தலை = தலைகீழ் (மாற்றம்)
  • எய்தற்கு = கிடைத்தற்கு
  • கூம்பும் = வாய்ப்பற்ற

இலக்கணக்குறிப்பு

  • ஒழுக்கம் = தொழிற்பெயர்
  • படும் = செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று
  • காக்க = வியங்கோள் வினைமுற்று
  • பரிந்து, தெரிந்து = வினையெச்சங்கள்
  • இழிந்த பிறப்பு = பெயரெச்சம்
  • கொளல் = அல் ஈற்றுத் தொழிற்பெயர்
  • உடையான் = வினையாலணையும் பெயர்
  • உரவோர் = வினையாலணையும் பெயர்
  • எய்தாப் பழி = ஈறு கேட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • எய்துவர் = பலர்பால் வினைமுற்று
  • நல்லொழுக்கம் = பண்புத்தொகை
  • சொலல் = தொழிற்பெயர்
  • அருவினை = பண்புத்தொகை
  • அறிந்து = வினையெச்சம்
  • கலங்காது = எதிர்மறை வினையெச்சம்

பிரித்து எழுதுதல்

  • பரிந்தோம்பி = பரிந்து + ஓம்பி
  • தெரிந்தோம்பி = தெரிந்து + ஓம்பி

Leave a Reply