11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

  • ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று.
  • சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள்.
  • குன்றுதலில்லாத அழகு தமிழ்நடை பெற்றிருப்பதாலும் தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்துப் போற்றுவதாலும் இந்நூல் சிந்தாமணி என்னல் தகுதியுடையதாயிற்று.
  • இந்நூலுக்கு “மண நூல்” என்ற பெயரும் உண்டு
  • இது நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாகப் 13 இலம்பகம் கொண்டுள்ளது.
  • இந்நூல் விருத்தம் என்ற பாவினால் அமைந்த முதல் நூல்.
  • இந்நூலிற்கு உரை கண்டவர் = உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
  • சீவகன் பிறந்த பொழுது அவன் தாய் விசயை ‘சிந்தாமணியே’ என்று அவனை அழைத்தார்.
  • அக்குழந்தை தும்மிய பொழுது ‘சீவ’ என்ற வாழ்த்தொலி கேட்டது.
  • அதனால் அவன் சீவகன் என்று அழைக்கப்பட்டான்.
  • சீவகன் வரலாற்றைக் கூறும் காப்பியமாதலின் அந்நூல் சீவகசிந்தாமணி என வழங்கலாயிற்று.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

திருத்தக்கத்தேவர் ஆசிரியர் குறிப்பு

  • சீவகசிந்தாமணி காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்கதேவர்.
  • இவர் சோழ நாடினர்.
  • சமணத் துறவி.
  • இவர் நரி விருத்தம் என்ற நூலையும் .

காந்தருவதத்தையார் இலம்பகம்

  • வெள்ளி மலையில் உள்ள வித்தியாதரர் வேந்தன் கலுழவேகன்.
  • அவன் மகள் காந்தருவதத்தை.
  • காந்தருவதத்தையின் தோழி வீணாபதி
  • யாழ்போர் நடந்த இடம் இராசமாபுரம்
  • காந்தருவதத்தை சீதத்தன் என்னும் வணிகனிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
  • சீவகனின் நண்பன் நிபுலன்
  • போட்டியில் சீவகன் காந்தருவதத்தையை வென்று அவளை மணம் முடித்தான்.

சொற்பொருள்

  • சிலை = வில்
  • சிலைத் தொழில் = (தொழில் சிலை) போரில் நாண் ஏற்றிய வில்
  • சிறுநுதல் = சிறிய நெற்றியுடைய காந்தருவ தத்தை
  • தெய்வப் பாவை = தெய்வத்தாற் செய்த கொல்லிப் பாவை
  • கலை = இசைக்கலை
  • எழீஇ = யாழை வாசித்து
  • பொழில் = சோலை
  • குரங்கின = வளைந்தன
  • பறவை = கின்னரமிதுனம் என்னும் பறவைகள்
  • கலைத்தொழில் பொருந்தப் பாடுதல் = பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எண் வகையான முறைமையறிந்து பாடுதல்.
  • கருங்கொடி = கரிய ஒழுங்கு
  • மிடறு = கழுத்து
  • கொடி = ஒழுங்கு
  • கடி = விளக்கம்
  • எயிறு = பல்
  • விம்மாது = புடைக்காது
  • வீணை நாவு = சரீரத்தை வீணையாகக்கூறுவது இசை நூல் மரபு (உடம்போடு வைத்து யாழ் மீட்டினாள்)
  • கோதை = காந்தருவதத்தை
  • முரல்வது = ஆரவாரித்தல்
  • தேனினம் =வண்டுகளின் கூட்டம்
  • எழால் வகை = யாழின் கூறுபாடு
  • வீரர் = (தோல்வியடைந்தவரை வீரர் என்றது) இகழ்ச்சிக் குறிப்பு
  • வீரர் = போட்டிக்கு வந்த அந்தணர்
  • எரிமலர் = முருக்கமலர்
  • இன்னரம்பு = யாழின் இனிய நரம்பு
  • செவ்வாய் = காந்தருவதத்தை
  • உளர = தடவ
  • உடைந்தனர் = தோற்றனர்
  • பாடல் = மிடற்றுப்பாடல்
  • பொன் அன்னாள் = திருமகள் போல்வாள் (தத்தை)
  • விடுகணை = வில்லினின்று விட்ட அம்பு
  • விசையின் = வேகம் போல
  • வெய்ய = விரும்பத்தக்க
  • இவுளி = குதிரை
  • கால் = காற்று
  • காலியற்புரவி = கடுங்காற்றுப்போல விரைந்த நடையினையுடைய குதிரைகள்
  • அணிநகர் = அழகிய மண்டபம்
  • நுனை = கூர்மை
  • கழித்த வேல் = உறையினின்று எடுத்த வேல்
  • கடம் = காடு
  • பிணை = பெண்மான்;
  • மாழ்கி = மயங்கி
  • வெய்துயிர்த்து = பெருமூச்செறிந்து
  • இழுக்கி = தப்பி
  • தோழி = வீணாபதி
  • இரிய = விலகி ஓட
  • கொடுமோ = கொடுப்பாய்
  • தடங்கண்ணாள் = அகன்ற கண்களையுடைய காந்தருவதத்தை
  • எழினி = உறை
  • மொய்ம்பு = வலிமை
  • மடங்கல் = சிங்கம்
  • நெடுங்கண்ணாள் = வீணாபதி
  • கிளக்கலுற்று = அறிவிக்க எண்ணி.
  • மெய்நொந்து ஈன்ற துளி = மேகம் உடல்வருந்திப் பொழிந்த மழைத்துளி
  • சுரந்து = நிறைந்து
  • துளி = (இங்கு) பெருமழை
  • தேனார்த்தென = வண்டுமுரன்றது போல
  • தீண்டி = நரம்பைத் தெறித்து
  • பொல்லாமை = குற்றமுடைமை
  • கொடி = வீணாபதியைக் குறிக்கும்
  • இளகிற்று = மெலிந்தது
  • நீரின் வந்தது = நீரில் கிடந்து அழுகியது
  • கணிகை = பொதுமகள், வேசை
  • வாட் புண் உற்றது = வாளால் வெட்டுப் பட்டது
  • கொல்லை = முல்லைநிலம்
  • குரங்கி = வளைந்து
  • புல்ல = தழுவ
  • தூமம் = அகிற்புகை
  • நங்கை நலத்தது – தத்தை போலவே குல முதலியவற்றாற் சிறப்புடையது
  • நிலமடந்தை = பெற்ற தாய்
  • இருவிசும்பு = செவிலித்தாய்
  • கைத்தாய் = செவிலித்தாய்
  • மின்னுப் பொன்நாண் = மின்னல் ஆகிய பொன்னரை ஞாண்
  • முகில் மாரி = மேகந்தரும் மழை (மழையாகிய தீம்பால்)
  • கவினி = அழகு பொருந்தி
  • நோய்நான்கு = மிக்கவெயில், அதிகநீர், கடுங்காற்று, தண்ணென்ற நிழல்
  • சிறிதலாப்பொழுது நெடுநேரம்
  • ஓதி = சொல்லி
  • புரி = முறுக்கு
  • பூந்தொடை = பூக்களாலாகிய மாலை
  • நெகிழ்த்தி = தளர்த்தி, உடைத்து
  • வார்புரி நரம்பு = நீண்ட முறுக்கமமைந்த நரம்பு
  • அரிவை = நங்கை
  • மைந்தன் = சீவகன்
  • நபுலன் = சீவகன் தம்பி
  • ஓதி = கூந்தல் (கூந்தலையுடையவள்)
  • பத்தர் = யாழின் ஓர் உறுப்பு
  • வாள் ஆர் = ஒளிபொருந்திய
  • கணிபுகழ்காளை = நிமித்திகர்களால் புகழப்பட்ட சீவகன்
  • பல்வினை = பலவாகிய வேலைப்பாடு உள்ள
  • கடலகம் = கடலால் சூழப்பட்ட உலகம்
  • மாடகம் = யாழ் நரம்பை இழுத்துக் கட்டுங் கருவி
  • பாட்டு = வாயால் பாடும் பாட்டு
  • எழால் = யாழால் உண்டாகும் இசை
  • மாதர் = காந்தருவதத்தை

இலக்கணக்குறிப்பு

  • எழீஇ = சொல்லிசையளபெடை
  • சிறுநுதல் = அன்மொழித்தொகை
  • பாவை = உவமையாகுபெயர்
  • இலைபொழில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • சிலைத் தொழில் = ஆறாம் வேற்றுமைத் தொகை
  • கருங்கொடி = பண்புத்தொகை
  • இருங்கடல் = பண்புத்தொகை
  • கடிமிடறு = உரிச்சொற்றொடர்
  • கயனெடுங்கண், பவளச்செவ்வாய் = உவமத்தொகைகள்
  • விரிமலர் = வினைத்தொகை
  • கோதை = உவமையாகுபெயர்
  • எரிமலர் = உவமத்தொகை
  • செவ்வாய் = அன்மொழித்தொகை
  • ஒப்ப = உவமவுருபு
  • இன்னரம்பு = பண்புத்தொகை
  • புரிநரம்ப = வினைத்தொகை
  • கொள்பாடல் = வினைத்தொகை
  • விடுகணை = வினைத்தொகை
  • திண்டேர் = பண்புத்தொகை
  • வடிநுனை, விளங்கொளி = வினைத்தொகைகள்
  • வாட்படை = இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • அடுதிரை = வினைத்தொகை
  • கழித்தவேல் = பெயரெச்சம்
  • கொடுமோ = ‘மோ’ முன்னிலையசை
  • இன்யாழ் = பண்புத்தொகை.
  • அன்ன = உவமஉருபு
  • நீக்கி, உய்த்து = வினையெச்சங்கள்
  • நெடுங்கண் = பண்புத்தொகை
  • கிடந்த ஞானம் = பெயரெச்சம்
  • தடங்கண் – உரிச்சொல் தொடர்.
  • சுரந்து, முதிர்ந்து, நொந்து = வினையெச்சங்கள்
  • என = உவமஉருபு
  • பொல்லாமை = எதிர்மறைத் தொழிற்பெயர்
  • நின்றாள் = வினையாலணையும் பெயர்
  • எழிலாள் = குறிப்பு வினைமுற்று.
  • போக, நடக்க, ஒழிக = வியங்கோள் வினைமுற்றுகள்
  • அம்ம = முன்னிலையசை
  • ஒண்பொன் = பண்புத் தொகை
  • ஒரும் – அசை
  • கணிகை சிறுவன் = நான்காம் வேற்றுமைத் தொகை முறைப் பொருளில் வந்தது
  • நல்யாழ் = பண்புத் தொகை
  • நலத்தது = குறிப்பு வினைமுற்று
  • கைத்தாய் = ஏழன் தொகை.
  • வாங்குபு = செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; கமழ் ஓதி = அன்மொழித்தொகை
  • காளை = உவம ஆகுபெயர்
  • திருந்துதார் = வினைத்தொகை
  • வேற் கண்ணாள் – உவமத் தொகை
  • நடவா = செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
  • நடுநடுங்கி = இரட்டைக்கிளவி
  • மிடறும் = இறந்தது தழீஇய எச்சவும்மை.
  • 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
  • 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
  • 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
  • 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

 

 

Leave a Reply