11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து

11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து

11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து
11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து

11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து

  • மகாகவி பாரதியாரின் கவிதைகள், “பாரதியார் கவிதைகள்” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வந்தே மாதரம்

  • “தேசிய கீதங்கள்” என்னும் தலைப்பில் அமைந்த பாடல் “பாரதியார் கவிதைகள்” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
  • வங்கமொழியில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் எழுதிய “வந்தே மாதரம்” என்னும் பாடலின் மொழிப்பெயர்பே இப்பாடல்.

பாரதியார் ஆசிரியர் குறிப்பு

  • தேசியக்கவி எனப் போற்றப்படும் பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
  • பெற்றோர் = சின்னசாமி அய்யர், இலக்குமி அம்மாள்.
  • பாரதியார் இளமையிலேயே கவிபாட்ம் திறமை பெற்றிருந்தார்.
  • பாரதியாரின் பாடல்கள் வெள்ளையர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களின் விடுதலை வேட்கை என்னும் காட்டுத்தீயை மூட்டும் அக்கினிக் குஞ்சுகளாய் அமைந்தன.
  • பாரதியார் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர்ச் சென்னையில் இருந்து வெளிவந்த “சுதேசமித்திரன்” இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • மேலும் “சக்கரவர்த்தினி” என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும், “இந்தியா” என்ற வாரப்பத்திரிகைக்கு ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
  • இவர் கீதையை மொழிபெயர்த்தார்.
  • கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய சிறு காவியங்களையும் படைத்துள்ளார்.
  • 09.1921 அன்று மறைந்தார்.

சொற்பொருள்

  • திரு = செல்வம், வளம்
  • மருவு = பொருந்திய
  • செய் = வயல்
  • மல்குதல் = நிறைதல்
  • குறுநகை = புன்னகை
  • இருநிலம் = பெரிய பூவுலகு
  • பதங்கள் = திருவடிகள்
  • பூண்டனை = அணிந்துள்ளாய்

இலக்கணக்குறிப்பு

  • மருவு செய் = வினைத்தொகை
  • பெருகும் இன்பம் = செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
  • நற்பயன் – பண்புத்தொகை
  • பைந்நிறம் = பண்புத்தொகை
  • நிறைந்தனை = முன்னிலை ஒருமை வினைமுற்று
  • ஒன்றினை = முன்னிலை ஒருமை வினைமுற்று
  • தீர்ந்தனை = முன்னிலை ஒருமை வினைமுற்று

Leave a Reply