11 ஆம் வகுப்பு புறநானூறு

11 ஆம் வகுப்பு புறநானூறு

11 ஆம் வகுப்பு புறநானூறு
11 ஆம் வகுப்பு புறநானூறு

11 ஆம் வகுப்பு புறநானூறு

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
  • இதனை புறப்பாட்டு, புறம் எனவும் வழங்குவர்.
  • இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.
  • புறநானூற்றின் பாவகை = அகவற்பா.
  • இந்நூலில் உள்ள பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதியில் வாழ்ந்த புலவர் பலரால் பாடப்பட்டவையாகும்.
  • புறநானூற்றில் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

6.3x

புறத்திணைகள் 12

  • புறநானூற்றுப் பாடல்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என வழங்கப்பெறும் புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள் கொண்டு அமைந்தவையாகும்.
  • புறநானூற்றில் கூறப்பட்டுள்ள மொத்த துறைகள் = பனிரெண்டு.

புறநானூறு நூல் சிறப்புகள்

  • முடியுடை மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், வீரர்கள், கடையெழு வள்ளல்கள், கடைச்சங்கப் புலவர்கள் எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகளும், அக்காலத்துள்ளாருடைய நடை முதலியனவும் இந்நூலால் நன்கு புலப்படும்.
  • இந்நூலின் சில பாடல்களை அறிஞர் ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

பரணர் ஆசரியர் குறிப்பு

  • வரலாற்றுக் குறிப்புகளைக் பாடல்களுள் பொதிந்து வைத்துப் பாடுவதில் வல்லவர் = பரணர்.
  • கபிலர் போல மிக்க புகழுடன் வாழ்ந்தவர்.
  • கபிலபரணர் என்னும் தொடரால் இது விளங்கும்.
  • இவர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றவர்.
  • பதிற்றுப்பத்தில் பரணர் பாடிய பத்து = ஐந்தாம் பத்து.

வள்ளல் பேகன்

  • வையாவிக்கோபெரும்பேகன் குறுநில மன்னன் ஆவான்.
  • பேகன் கடையெழு வள்ளல்குளுள் ஒருவன்.
  • காண மஞ்னஞக்குக் கலிங்கம் நல்கியவன்.
  • பேகனின் நாடு = மலைநாடு.
  • பேகனின் ஊர் = நல்லூர்.
  • பேகனது குடி = ஆவியர் குடி.

பாடாண் திணை என்றால் என்ன

  • ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவது பாடாண் திணையாகும்.

பாடாண் திணையின் நோக்கம் என்ன

  • பாடப்படுகின்ற ஆண்மகனது ஒழுக்கலாற்றைக் கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.

இயன்மொழி துறை என்றால் என்ன

  • ஒரு வேந்தன் எதிர்ச் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும்.
  • ஒருவனின் இயல்பைப் புகழ்ந்து கூறி வாழ்த்துவது இத்துரையின் உயிர்ப்பாகும்.

கொடைமடம் என்றால் என்ன

  • கொடைமடம் = வரையறை இன்றிக் கொடுத்தலாகிய இயல்பு
  • கொடைமடம் என்பது இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தவர்க்கும், இரவாதவர்க்கும் பாகுபாடு இன்றி வரையாது கொடுத்தல்.

படைமடம் என்றால் என்ன

  • படைமடம் = போர் நெறிக்கு மாறுபட்டுப் போர் புரிதலாகிய இயல்பு.
  • படைமடம் என்பது வீரர் அல்லாதார் மேலும், முதுகிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தோர் இளையோர் மேலும் செல்லுதல்.

சொற்பொருள்

  • அறுகுளம் = நீர் வற்றிய குளம்.
  • உகுத்தும் = பெய்தும்
  • உறுமிடத்து உதவாது = குளம், வயல் ஆகிய பொருத்தமான இடத்துப் பெய்யாது
  • உவர்நிலம் = களர்நிலம்
  • ஊட்டியும் = சாலப் பெய்தும்
  • வரையாமரபு = எல்லையிடாத முறைமை
  • கடாஅயானை = மதக்களிறு
  • கழற்கால் = வீரக்கழல் அணிந்த கால்கள்
  • படான் = (போர்) செய்யான்
  • மாரி = மழை

இலக்கணக்குறிப்பு

  • அறுகுளம், அகல்வயல் = வினைத்தொகை
  • வரையா மரபு = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • கடாஅ = இசைநிறை அளபெடை
  • கழற்கால் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

Leave a Reply