11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி

11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி

11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி
11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி

11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி

  • குறவஞ்சி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • தொல்காப்பியர் கூறும் வனப்பு என்பதுள் குறவஞ்சி அடங்கும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

குறவஞ்சி இலக்கியம்

  • உலாப் போந்த மன்னனையோ தெய்வத்தையோ கண்டு தலைவி மையல்கொள்வதும், அதனால் மனம் நலிவதும், வீதியிலே குறத்தி வருகையும், தலைவி அவளை அழைத்துக் குறிகேட்க முற்படுவதும், குறத்தி தனது சதுரப்பாடுகளையெல்லாம் விரித்தும் தனது மலைவளம் நாட்டுவளம் பற்றிப் புனைந்தும் தலைவியின் கையைப் புகழ்ந்தும் கைக்குறி, முகக்குறி, பல்லிசொல் முதலியவற்றான் மனக்கருத்தைக் கண்டுணர்ந்து உரைத்தலும், தலைவி மகிழ்ந்து வரிசையளித்தலும், குறவனாகிய சிங்கன் வருகையும் குறவன் குறத்தி ஆகிய இருவர் உரையாடலும் கடவுளை வாழ்த்தி விடை பெறுதலும்ஆகிய காட்சிகள் நாடக வடிவிலே வடிவமைக்கப்பட்டிருப்பது குறவஞ்சி நாடகம் ஆகும்.

பெத்தலேகம் குறவஞ்சி நூல் குறிப்பு

  • இஃது பெத்தலகேம் குறவஞ்சி.
  • உலாவரும் மன்னர் இயேசுவாகவும் தேவமோகினியாகிய தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும், சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படுத்தப்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவகிக்கப்பட்டுள்ளன.
  • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பாகும்.

தஞ்சை வேதநாயக சாத்திரியார்  ஆசிரியர் குறிப்பு

  • இதன் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார் ஆவார்.
  • திருநெல்வேலியில் தேவசகாயம் ஞானப்பூ அம்மையார் ஆகியோர்க்கு மகனாகப்பிறந்தார். தஞ்சையில் அப்போது மதபோதகராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரைத்தமது மாணாக்கரில் ஒருவராக ஏற்றார்.
  • இவர் இறையியல், வானியல், உடலியல், சமூகவியல் என்ற பல்வேறு அறிவுத்துறைகளில் கற்றுத்துறைபோகிய அறிஞராகத் திகழ்ந்தார்.
  • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னருக்கு உற்ற நண்பராக விளங்கினார்.
  • தமது மிக்க இளம்பருவத்திலேயே 25 ஆம் ஆண்டில் குற்றாலக் குறவஞ்சிக்கு நிகராகப் பெத்தலகேம் குறவஞ்சியை இயற்றி அழியாப் புகழ் பெற்றார்.
  • மேலும் அழியாத பல நூல்களையும் இசைநெறி போற்றும் கீர்த்தனங்களையும் இயற்றியுள்ளார். காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு.
  • இவர் எழுதிய பிற நூல்கள் ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம், பல்வேறு கீர்த்தனங்கள் ஆகியவையாகும்.

சொற்பொருள்

  • தோத்திரங்கள் = துதிப்பாடல்கள்
  • ஏகன் = இறைவன்
  • அண்டாது = நெருங்கவிடாது
  • ஆதிமலை = முதன்முதலாக விளங்கிய மலை
  • ஏதன் மலை = ஏதேன் தோட்டத்தில் விளங்கும் ஏதேன் மலை
  • தற்பரன் = இறைவன்

இலக்கணக்குறிப்பு

  • அருந்தவம் = பண்புத்தொகை
  • தானதர்மம் = உம்மைத் தொகை
  • பேய்க்கணங்கள் = ஆறாம் வேற்றுமைத்தொகை
  • அமைத்த, கொடுத்த, நின்ற, சபித்த = பெயரெச்சங்கள்

Leave a Reply