11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து
11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக்

கையி னாலுரை கால மிரிந்திடப்

பைய நாவைய சைத்த பழந்தமிழ்

ஐயை தாடலை கொண்டு பணிகுவாம்

–    பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர் ஆசிரியர் குறிப்பு

  • பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர் தஞ்சை மாவட்டம் பள்ளியகரத்தில் பிறந்தவர்.
  • பிறந்த தேதி = 09-06-1898.
  • பெற்றோர் = நீலமேகம் பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்.
  • இவர் ஒரு பன்மொழிப் புலவர்.
  • பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்ற அவர், தன் சொந்த முயற்சியாலும், பல்வேறு அறிஞர் பெருமக்கள் தொடர்பாலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து பெரும்புலவராக விளங்கினார்.
  • மேலும் அவர் தாமே முயன்று ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், வடமொழி ஆகிய மொழிகளைக் கற்று அம்மொழிகளிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
  • கரந்தைத் தமிழ் சங்கத்தில் பல ஆண்டுகள் அமைச்சராகத் விளங்கினார்.
  • ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நுால்களைப் படைத்துள்ளார்
  • தாமஸ்கிரே என்பார் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தமிழில் செய்யுள் வடிவில் “இரங்கற்பா” என்னும் தலைப்பில் மொழி பெயர்த்தார்.
  • தமிழறிஞர்களின் பெருமதிப்பிற்குரியவராய்த் திகழ்ந்த நீ. கந்தசாமிப்புலவர் அவர்கள் 18.06.1977 இல் மறைந்தார்.

சொற்பொருள்

  • வையம் = உலகம்
  • தொன்மக்கள் = பழங்காலத்து வாழ்ந்த மக்கள்
  • உளத்தினை = தம் மனக்கருத்தை
  • இரிந்திட = விலகிட
  • பைய = மெல்ல
  • தாள் = திருவடி
  • ஐயை = தாய்

இலக்கணக்குறிப்பு

  • தொன்மக்கள் = பண்புத்தொகை
  • உள்ளம் = ஆகுபெயர்
  • உரைகாலம் = வினைத்தொகை
  • பழந்தமிழ் = பண்புத்தொகை
  • ஐயைதாள் = ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தாள் தலை = இரண்டாம் வேற்றுமைத்தொகை

 

Leave a Reply