12 ஆம் வகுப்பு அகநானூறு

12 ஆம் வகுப்பு அகநானூறு

12 ஆம் வகுப்பு அகநானூறு
12 ஆம் வகுப்பு அகநானூறு

12 ஆம் வகுப்பு அகநானூறு

  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • பா வகை = அகவற்பா
  • அடி எல்லை = 13 முதல் 31
  • நானூறு பாடல்கள் உள்ளன.
  • தொகுத்தவர் = மதுரை உப்பூரி குடிகிழார் மகன் உருதிரசன்மனார்
  • தொகுபித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அகநானூறு நூல் குறிப்பு

  • அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் ‘அகம்’ என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் இது மட்டுமேயாகும்
  • வேறுபெயர்கள் = அகம், நெடுந்தொகை
  • இந்நூலில் மூன்று பகுதிகள் உள்ளன.
  • முதல் 120 பாட்டுகள், “களிற்றியானை நிறை” எனப்படும்.
  • அடுத்த 180 பாட்டுகள், “மணிமிடை பவளம்” எனப்படும்.
  • கடைசி 100 பாட்டுகள் “நித்திலக்கோவை” எனப்படும்.
  • 1,3,5 என ஒற்றைப்படை எண்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
  • 2,8 என வரும் பாடல்கள் = குறிஞ்சித்திணை பாடல்கள்
  • 4,14 என வரும் பாடல்கள் = முல்லைதினைப் பாடல்கள்
  • 6,16 என வரும் பாடல்கள் = மருதத்திணை பாடல்கள்
  • 10,20 என வரும் பாடல்கள் = நெய்தல் திணை பாடல்கள்.

சொற்பொருள்

  • பசை = ஒட்டும் பசை (ஈரம்)
  • பச்சை = தோல்
  • நெய் தோய்த்தன்ன = எண்ணெயில் நனைத்து எடுத்தது போன்ற
  • மாச்சிறைப் பறவை = கரிய சிறகுகளையுடைய வௌவால்
  • சேய்உயர் = மிக உயர்ந்த
  • சினைய = கிளைகளையுடைய
  • முதுமரம் = பழையமரம்
  • புலம்ப = தனித்திட
  • முகை = மொட்டு
  • முகைவாய் திறந்த = மொட்டவிழ்ந்த
  • நகைவாய் முல்லை = ஒளிபொருந்திய முல்லை மலர்கள்
  • கடிமகள் = மணமகள்
  • கதுப்பு = கூந்தல்
  • தண்பதம் = குளிர்பதம்
  • மழைக்கண் = குளிர்ந்த கண்
  • நல்லகம் = நல்ல உட்புறம்
  • புல்லார் = புல்லை நிரம்பத்தின்ற
  • புரவி = குதிரை
  • வலவ = தேர்ப்பாகனே
  • முன்னிய = கருதி வந்த
  • வினை = செயல்
  • ஊர்மதி = செலுத்துவாயாக

இலக்கணக்குறிப்பு

  • உயர்சினை – வினைத்தொகை
  • சிறைப்பறவை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • பகலுறை – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • முதுமரம் – பண்புத்தொகை
  • கடிமகள் – உரிச்சொற்றொடர்
  • புல்லார் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • வல்விரைந்து – ஒருபொருட்பன்மொழி

 

 

Leave a Reply