12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா

12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா

12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா
12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா

12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா

  • உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடுதலின் இப்பெயர் பெற்றது.
  • உலா என்பதற்குப் பவனிவரல் என்பது பொருள்.
  • தலைவன் வீதியில் உலாவர, அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியம் ஆகும்.
  • உலா கலிவெண்பாவால் இயற்றப்படும்.
  • இவ்விலக்கியம் உலாப்புறம் எனவும் வழங்கப்படும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

உலாவின் முன்னிலை

  • பாட்டுடைத்தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடை சூழத் தன் ஊர்தியில் ஏறி உலா வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.

உலாவின் பின்னிலை

  • உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாகக் கூறுவன உலாவின் பின்னிலை என்று கூறுவர்.

உலாவில் பெண்களின் ஏழு பருவங்கள்

  • ஏழு பருவப் பெண்களின் வயது முறையைப் பின் வருமாறு கூறுவர். பேதை 5 – 7, பெதும்பை 8 – 11, மங்கை 12 – 13, மடந்தை 14 – 19, அரிவை 20 -25, தெரிவை 26 – 32, பேரிளம் பெண் 33-40.

ஒட்டக்கூத்தர் ஆசிரியர் குறிப்பு

  • இராசராச சோழனுலாவைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்.
  • கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுகிறார்.
  • ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
  • அம்மூவரைப் பற்றியும் அவர் பாடிய மூன்று உலாக்களும் மூவருலா எனப்படுகிறது.
  • தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் முதலியன இவர் இயற்றிய வேறு நூல்கள் ஆகும்.
  • கூத்தர் என்பதே இவர் இயற்பெயர்.
  • ஒட்டம் (பந்தயம்) வைத்துப்பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்கூத்தர் எனப்பட்டார்.
  • இவரது காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஆகும்.

அருஞ்சொற்பொருள்

  • சூளிகை = நிலாமுற்றம் (மாளிகையின் மேலேயுள்ள வெளி)
  • தோரணம் = மாவிலை முதலியவற்றால் கட்டி அழகுறுத்துவது
  • சாளரம் = பலகணி
  • தெற்றி = திண்ணை
  • ஆடல் அரங்கம் = கூத்துப் பயிலுமிடம்
  • தோன்றாமே = அவ்விடங்களில் தோன்றாதபடி
  • பிணங்கி = நெருங்கி
  • உயங்கி = மனம் வருந்தி
  • மறுகு = தெரு
  • தற்கோடி ஓரிரண்டு = தன்னுடைய வில் முனைகள் இரண்டையும்
  • கோடி = வளைத்து
  • சதகோடி = நூறுகோடி
  • கற்கோடி = கோடியான கற்கள்
  • முன்கோலி = முன்னே வளைத்து
  • மகோததி = கடல்
  • ஏவ = செலுத்த
  • வாளிவிட்டது = அம்பு எய்தது
  • வெட்டி = மலையை வெட்டி
  • சுழியிட்டகாவிரி = சுழித்து வெள்ளப்பெருக்குடன் வந்த காவிரி
  • சோணாடு = சோழநாடு
  • மதியெறிந்து = சந்திரனை வீசி
  • வல்லேற்ற வான் = வலிய இடியை உடைய மேகம்
  • தூங்கும்பதி = வானத்தில் நிலைகொண்டலைந்த ஊர்கள்.
  • உதியர் = சேரர்
  • இடப்புண்ட = பெயர்க்கப்பட்ட
  • பேரிஞ்சி வஞ்சியில் = பெரிய மதிலையுடைய வஞ்சி என்னும் தம் ஊரில்
  • கடப்ப முது முரசம் = கடம்ப மரத்தால் செய்யப்பட்ட பழைய முரசம்
  • கொடுப்ப = இவன் கொடுத்தலால்
  • தம் சென்னி = தம் தலையால்
  • சரதம் = வாய்மை
  • பவித்திரம் = தூய்மை
  • சரத பவித்ர விசயப் படை = உண்மையும் தூய்மையும் உடைய வெற்றியைத் தரும் மழுவாகிய ஆயுதப்படை
  • கவித்த அபிடேகம் = சூட்டிய கீரிடத்தை
  • மூவெழுகால் = இருபத்தோரு தலைமுறை
  • எக்கோக்களையும் = எவ்வளவு பெரிய அரசர்களையும், அவனி = நாடுகள்
  • வரப்பு மலை = எல்லையாகிய மேருமலை
  • தாவிச் சூழ்வர = தாவிச் சுற்றி வருதற்கு
  • நின்று புரக்க = நிலைபெற்றுக் காக்க
  • ஊடு அம்பரம் அடங்க = இடையே உள்ள ஆகாயம் அடங்கும்படியாக
  • அளாவ (ஆகாயம் வரை) செல்ல அண்டகூடம் = அண்டங்கள்
  • பொருவும்= ஒத்திருக்கும்
  • கூடல் = காவிரிப்பூம்பட்டினம்
  • பெருமாள் = அரசர்
  • இருங்கடல் = பெரிய கடல்

இலக்கணக்குறிப்பு

  • வாயிலும் மாளிகையும் = எண்ணும்மை
  • எம்மருங்கும் = முற்றும்மை
  • மாடமும் ஆடரங்கும் = எண்ணும்மை
  • செய்குன்று, ஆடரங்கு = வினைத்தொகைகள்
  • சுற்றிய பாங்கர் = பெயரெச்சம்
  • மயங்கி, பிணங்கி, வணங்கி, உயங்கி = வினையெச்சங்கள்
  • செற்ற சிலை = பெயரெச்சம்
  • காணீர் = ஏவல் வினைமுற்று
  • சோணாடு = சோழநாடு என்பதன் மரூஉ மொழி, விட்டவாள் = பெயரெச்சம்
  • மதியெறிந்து, வானெறிந்து = இரண்டாம் வேற்றுமைத் தொகைகள்
  • தூங்கும் பதி = செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
  • பேரிஞ்சி, முது முரசம் = பண்புத்தொகைகள்
  • போர் முரசம் = ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • தரை = ஆகுபெயர் (ஆளப்பெறும் நாட்டிற்கு ஆகிவந்தது)
  • படைப் பரசுராமன் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • பொருவுங் குடை, வரும் பெருமாள் = செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சங்கள்
  • ஓங்கியுயர் = ஒருபொருட் பன்மொழி
  • உயரண்டம் = வினைத் தொகை
  • 12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா
  • 12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா

Leave a Reply