12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு

12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு

12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு
12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு

12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • பா வகை = அகவற்பா
  • அடி எல்லை = 3 முதல் 6
  • ஐநூறு பாடல்கள் உள்ளன.
  • ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் உள்ளன.
  • தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  • தொகுப்பித்தவர் = சேரமான் யானைக் கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை
  • 11TH TAMIL ஐங்குறு நூறு

ஐங்குறுநூறு பாடியோர் விவரம்

மருதமோ ரம்போகி நெய்த லம்மூவன்

கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய

பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே

நூலையோ தைங்குறு நூறு

  • குருஞ்சித் திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
  • முல்லைத் திணை பாடல்கள் பாடியவர் = பேயன்
  • மருதத் திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
  • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
  • பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பராய்க்கடன் உரைத்தல் என்றால் என்ன

ஆந்தையார் ஆசிரியர் குறிப்பு

  • ஆந்தையார் என்பது இயற்பெயர்.
  • ஓதலூர் என்னும் ஊர்.
  • ஓதலூர் மேலைக் கடற்கரைக் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது.
  • ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதன் மரூஉ.
  • ஆந்தையார் பாடிய பாடல்கள் பெரும்பாலும் “பாலைத்திணை” பாடல்கள் ஆகும்.

சொற்பொருள்

  • மறு = குற்றம்
  • தூவி = இறகு
  • மரபு = முறைமை
  • அஞ்சிலோதி = (அம்+சில+ஓதி) அழகிதாய சிலவாகிய கூந்தல் (உடைய தலைவி
  • ஓதி = கூந்தல்
  • கிளை = சுற்றம்
  • பச்சூன் = (பசுமை + ஊன்) பசிய ஊன்
  • ஊன் – தசை
  • பைந்நிணம் = (பசுமை + நிணம்) பசிய கொழுப்பு
  • நிணம் = கொழுப்பு
  • வல்சி = உணவு
  • பொலம் = பொன்
  • கலம் = பாத்திரம்
  • விறல் = வலிமை
  • காளை = தலைவன்

பிரித்து எழுதுக

  • அஞ்சிலோதி = அம்+சில+ஓதி
  • பச்சூன் = பசுமை + ஊன்
  • பைந்நிணம் = பசுமை + நிணம்

இலக்கணக்குறிப்பு

  • கருங்காக்கை = பண்புத்தொகை
  • பச்சூன் = பண்புத்தொகை
  • பைந்நிணம் = பண்புத்தொகை
  • வெஞ்சினம் = பண்புத்தொகை
  • பொலம்புனை – மூன்றாம் வேற்றுமைத் தொகை
  • புனைகலம் – வினைத்தொகை
  • தருகுவென் – தன்மை ஒருமை வினைமுற்று
  • வேற்காளை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • காளை – உவமையாகுபெயர்
  • அஞ்சிலோதியை வர = பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை

Leave a Reply