12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

ஒன்றே யென்னின் ஒன்றேயாம்

   பலவென் றுரைக்கிற் பலவேயாம்

அன்றே யென்னின் அன்றேயாம்

   ஆமே யென்னின் ஆமேயாம்

இன்றே யென்னின் இன்றேயாம்

   உளதென் றுரைக்கின் உளதேயாம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

   நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா

–     கம்பர்

யுத்தகாண்டம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாடலில் பயின்று வரும் பாவகை

  • “ஒன்றே யென்னின் ஒன்றேயாம்“ எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்து பாடலில் பயின்று வரும் பாவகை = அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கம்பர் ஆசிரியர் குறிப்பு

  • கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர்.
  • இவரின் காலம் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு.
  • கம்பரைத் திருவெண்ணெய் நலூர் சடையப்ப வள்ளல் என்பார் ஆதரித்து வந்தார்.
12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து
12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

கம்பரின் சிறப்புப் பெயர்

  • “கவிச்சக்ரவர்த்தி”

கம்பரின் பெருமையை கூறும் தொடர்கள்

  • கல்வியில் பெரியவன் கம்பன்
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்
  • விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்
  • 12TH TAMIL கம்பராமாயணம்

கம்பர் இயற்றிய நூல்கள்

கம்பராமாயணம் நூல் குறிப்பு

  • வடமொழியில் வான்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தை தழுவி, தமிழில் கவிப் பேரரசர் கம்பர் இயற்றியது கம்பராமாயணம்.
  • கம்பரால் இயற்றப்பட்டதால் “கம்பராமாயணம்” என வழங்கப்படுகின்றது.
  • கம்பர் தம்நூலுக்கு இட்ட பெயர் “இராமாவதாரம்”

சொற்பொருள்

  • ஒன்றேயென்னின் = ஒன்றே என்று கூறின்
  • அன்றே யென்னின் = அன்று என்று கூறின்
  • நம்பி = இறைவன்
  • குடிவாழ்க்கை = தங்கி வாழும் வாழ்க்கை
  • நன்று = வியப்பிற்குரியது

இலக்கணக்குறிப்பு

  • வாழ்க்கை – தொழிற்பெயர்
  • அம்மா – வியப்பிடைச்சொல்

 

 

 

Leave a Reply