12 ஆம் வகுப்பு சிக்கனம்

12 ஆம் வகுப்பு சிக்கனம்

12 ஆம் வகுப்பு சிக்கனம்
12 ஆம் வகுப்பு சிக்கனம்

12 ஆம் வகுப்பு சிக்கனம்

  • உவமை கவிஞர் எனப்போற்றப்படுபவர் கவிஞர் சுரதா.
  • பாவேந்தர் பாரதிதாசைன் தலை மாணாக்கர் இவர்.
  • இவர் திருவாரூர் மாவட்டம் பழையனூரில் பிறந்தவர்.
  • இயற்பெயர் = இராசகோபாலன்
  • படைப்புகள் = தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும்.
  • இவர் தமிழக இயலிசை நாடகமன்றம் வழங்கிய கலைமாமணி பட்டம் பெற்றவர்.
  • பாவேந்தரின் மீது கொண்ட அன்பால் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டு அதனையும் சுருக்கி, ‘சுரதா’ எனப் புனைந்து கொண்டார்.
  • இவருடைய “தேன்மழை” நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்றுள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாவேந்தர் நினைவு பரிசினை பெற்ற முதல் கவிஞர்

  • பாவேந்தர் நினைவு பரிசினை பெற்ற முதல் கவிஞர் இவரே.

சுரதா சிறப்புகள்

  • “தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய்ப் பாடல் செய்தவர் – திருவள்ளுவர் தேன் போலே தித்திக்கும் தமிழிலே…..’ என்று தொடங்கும் இசைப் பாமாலையைத் திருவள்ளுவருக்குச் சூட்டியவர்.
  • “வினைச் சொற்கள் வேற்றுமையை ஏற்பதில்லை வெறும் பாட்டைத் தமிழ்ச் சங்கம் சேர்ப்பதில்லை” எனவும் திருமணமக்களை வாழ்த்தும்பொழுது பாடியுள்ளார்.
  • “இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை…’ எனவும் பாடி, உவமை மரபில் புதுமைகளைச் சேர்த்தவர்.

சொற்பொருள்

  • பகட்டு வாழ்க்கை = ஆடம்பரமான வாழ்க்கை
  • செட்டு = சிக்கனம்

இலக்கணக்குறிப்பு

  • சட்டதிட்டம் = உம்மைத்தொகை
  • நீதிநூல் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீரூற்று = ஆறாம் வேற்றுமைத்தொகை
  • விக்கி விக்கி = அடுக்குத்தொடர்
  • தீராத = எதிர்மறைப் பெயரெச்சம்

Leave a Reply