பனிரெண்டாம் வகுப்பு சிலப்பதிகாரம்

பனிரெண்டாம் வகுப்பு சிலப்பதிகாரம்

பனிரெண்டாம் வகுப்பு சிலப்பதிகாரம்
பனிரெண்டாம் வகுப்பு சிலப்பதிகாரம்

பனிரெண்டாம் வகுப்பு சிலப்பதிகாரம்

  • சிலப் பதிகாரம் தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது.
  • சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் = மூன்று.
  • சிலப்பதிகார காண்டங்கள் = புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்.
  • சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்த காதைகள் = 30.
  • சிலப்பதிகாரத்தில் உள்ள முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்.
  • சிலப்பதிகாரத்தின் இறுதி காதை = வரந்தருகாதை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சிலப்பதிகாரம் சிறப்புப் பெயர்கள்

  • முத்தமிழ்க் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
  • நாடகக் காப்பியம்
  • தமிழின் முதல் காப்பியம்
  • பைந்தமிழ் காப்பியம்

சிலப்பதிகார பெயர்க் காரணம்

  • கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக வளர்ந்த கதையாதலினால் (சிலம்பு + அதிகாரம்) சிலப்பதிகாரம் என்று பெயர் சூட்டப்பட்டது.

தமிழின் முதல் காப்பியம்

  • தமிழின் முதல் காப்பியம் என்று அழைக்கப்படுவது = சிலப் பதிகாரம்.

சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்

இளங்கோவடிகள் ஆசிரியர் குறிப்பு

  • சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் சேர இளவரசர் இளங்கோவடிகள் ஆவார்.
  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் நற்சோணைக்கும் மகனாகத் தோன்றியவர்.
  • சேரன் செங்குட்டுவன் என்ற சேர அரசன் இவர்க்குத் தமையன் முறை என்றும் அவனுக்கு அரசுரிமையைத் தருதற்கே இவர் துறவு பூண்டார் என்றும் வழிவழிச் செய்திகள் கூறுகின்றன.
  • காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

சிலப்பதிகார உரையாசிரியர்கள்

  • சிலப்பதிகார நூலுக்கு உரையெழுதிய பழைய உரையாசிரியர்கள் இருவர்.
  • ஒருவர் அரும்பதங்களுக்கு மட்டும் உரைவழங்கிய அரும்பத உரைகாரர். (நூல் முழுமைக்கும் அரும்பத உரை உண்டு).
  • மற்றொருவர் விளக்கமாக உரை எழுதிய அடியார்க்கு நல்லார். (இவர் உரை, நூல் முழுமைக்கும் கிடைக்கவில்லை)
  • இக்காலத்தே வாழ்ந்த ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை நூல்முழுமைக்கும் உள்ளது.

இரட்டைக் காப்பியங்கள்

  • இரட்டைக் காப்பியங்கள் எனப்படும் நூல்கள் = சிலப் பதிகாரம், மணிமேகலை.
  • “மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்” என்று இந்நூல் நிறைவு பெறுவதனால் மணிமேகலையையும் சிலப்பதிகாரத்தையும் இரட்டைக் காப்பியங்கள் என்பர்.
  • மணிமேகலையை இயற்றிய மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், இளங்கோவடிகளை ‘முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக’ என்று வேண்டிக் கொள்ள, அடிகளும் “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று முன்வந்து இக்காப்பியத்தை ஆக்கியளித்தார் என்பது பதிகத்தின் வாயிலாக அறியவருகிறது.
பனிரெண்டாம் வகுப்பு சிலப்பதிகாரம்
பனிரெண்டாம் வகுப்பு சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சிறப்புகள்

  • பாரதியார் இந்நூலின் அருமை பெருமைகளை உணர்ந்து, “நெஞ்சையள்ளும் சிலம்பு”, எனப் புகழ்ந்துள்ளார்.
  • கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதி காரம், எனப் பாராட்டியுள்ளார்.
  • பலராலும் மனமாரப் பாராட்டப் பெறும் பைந்தமிழ்க்காப்பியமாகச் சிலப்பதி காரம் திகழ்கிறது.

ஊர்சூழ்வரி என்றால் என்ன

  • ஊர்மக்கள் சூழ இருக்க, கண்ணகி உரைத்தனவற்றைக் கூறுவது ஊர்சூழ்வரி.
  • வரி என்பது இசைப்பாடல் வகையது.
  • புகார் நகர வணிகர் மாசாத்துவான் மகன் = கோவலன்,
  • புகார் நகர வணிகர் மாநாய்கன் மகள் = கண்ணகி.
  • “தலைக்கோலரிவை” என்ற பட்டம் பெற்றவள் = மாதவி.
  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் = மணிமேகலை.
  • இந்திரவிழா நிகழ்வின்போது மாதவி பாடிய கானல் வரிப்பாடல்களால் பிணக்குற்று அவள்மீது கோவலன் ஐயமுற்றுப்பிரிந்து கண்ணகியின்பால் திரும்பினான்.
  • கண்ணகியின் காற்சிலம்பை முதலாகக் கொண்டு மதுரை நகரிலே பொருளீட்டக் கருதிக் கோவலன் கண்ணகியோடு புகார் நகரை விட்டு நீங்கினான்.
  • சமணத்துறவி = கவுந்தியடிகள்.
  • கோவலனும், கண்ணகியும் மதுரை வந்து அடைந்த இடம் = புறஞ்சேரி.
  • கோவலனும் கண்ணகியும் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டனர் = ஆயர்குலப் பெண்ணாகிய மாரியிடம் அடைக்கலப்படுத்தப்பட்டனர்.
  • “சீறடிச்சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய் மாறிவருவன்; மயங்காது ஒழிக” என்று கூறியவன் = கோவலன்.
  • “அவனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு” என்று கூறியவன் = பாண்டிய மன்னன்.
  • ஆயர்முதுமகள் = மாதரி.
  • முடுகு என்னும் சொல்லின் பொருள் = நெடில்.

அருஞ்சொற்பொருள்

  • வெய்யோன் = கதிரவன்
  • ஈர்வளை = அறுத்துச் செய்யப் பெற்ற வளையல்
  • இலங்கு = ஒளிருகின்ற
  • தோளி = தோளையுடைய கண்ணகி
  • முறை = நீதி
  • நிறை = கற்பு
  • ஈதொன்று = இஃது அச்சிலம்பின் மற்றொன்று
  • படுகாலை = மாலைக்காலம்
  • உறாதது = பிறர் அடையாத துன்பம்
  • உற்றேன் = யான் அடைந்தேன்
  • ஈதொன்று = இஃது என்வினைப் பயனால் யான்உற்ற ஒருதுன்பம்
  • விலைப்பொருட்டு = உரிய விலை கொடாது தாம் கவர்ந்து கொள்ளும் பொருட்டு; (விலைப்பொருள் கொடுப்பதற்கு ஈடாக)
  • ஈதொன்று = இதுவோர் புதுமை
  • மாதர் = காதல்
  • மாதர்த் தகைய மடவார் = கணவர் காதலிக்கும் பண்புடைய மகளிர்
  • தீதறு நல்லுரை = குற்றமற்ற இனிய மொழி
  • ஈதொன்று = இஃது என் சூளுரை
  • நோதக்க செய்தாள் = வருந்தத்தக்கன செய்தாள்
  • எள்ளல் = இகழ்க
  • இதுவொன்று = இது நுமக்கு ஒரு வாய்ப்பு
  • அல்லலுற்று = வருத்தமுற்று
  • ஆற்றாது = தாங்கமாட்டாது
  • மல்லல் = வளம்
  • என்கொல் = என்ன காரணத்தால் நிகழ்ந்ததோ
  • கொற்றம் = அரசியல்
  • நம்பொருட்டால் = நம்மைக்கெடுத்தற் பொருட்டாக
  • வம்பப் பெருந்தெய்வம் = புதியதாக வந்த பெரிய தெய்வம்
  • ஐஅரி உண்கண் = அழகிய செவ்வரிபடர்ந்த, மையுண்டகண்கள்
  • தெய்வமுற்றாள் போலுந்தகையள் = தெய்வம் ஏறியவள் போல் ஆயினாள்
  • இனைந்து = வருந்தி
  • கம்பலைமாக்கள் = ஆரவாரித்துத்திரியும் மக்கள்
  • புல்லென்மருள்மாலை = ஒளிமழுங்கித் தோன்றும் மாலை
  • பூசலிட = அழுதுபுலம்பி அரற்ற
  • கொழுநர் = கணவர்
  • வைவாள் = கூரியவாள் (இங்கே நடுவு நிலைமை)
  • தப்பிய = தவறிய
  • வாண்முகம் = ஒளிபொருந்திய முகம்
  • கன்றியது = கன்றிப்போயிற்று
  • மாற்ற = துடைக்க
  • பழுது = உடல்

இலக்கணக்குறிப்பு

  • ஈர்வளை = வினைத்தொகை
  • கையேந்தி = ஏழாம் வேற்றுமைத் தொகை
  • காற்சிலம்பு = ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  • நல்லுரை = பண்புத்தொகை
  • எள்ளல் = அல்லீற்று வியங்கோள் வினைமுற்று
  • நெடுந்தகை, தண்குடை, செங்கோல் = பண்புத்தொகைகள்
  • பொற்சிலம்பு = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • உண்கண் = வினைத்தொகை
  • கொல் = இடைச்சொல் ஐயப்பொருளில் வந்தது
  • தூற்றும் குடி = செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
  • மாமதுரை, மல்லல் மதுரை = உரிச்சொற்றொடர்கள்
  • காணான் = எதிர்மறை ஆண்பால் வினைமுற்று
  • மாஞாலம், மாமலை = உரிச்சொற்றொடர்கள்
  • ஒளிப்ப = செயவென் வாய்பாட்டு வினையெச்சம்
  • ஈன்ற குழவி = இறந்தகாலப் பெயரெச்சம்
  • தாங்குறூஉம், வளர்க்குறூஉம் = இன்னிசையளபெடைகள்;
  • வைவாள் = உரிச்சொற்றொடர்
  • தழீஇ = சொல்லிசையளபெடை
  • நிறைமதி = வினைத்தொகை
  • வளைக்கை = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

Leave a Reply