12 ஆம் வகுப்பு திருவேங்கடத்தந்தாதி

12 ஆம் வகுப்பு திருவேங்கடத்தந்தாதி

12 ஆம் வகுப்பு திருவேங்கடத்தந்தாதி
12 ஆம் வகுப்பு திருவேங்கடத்தந்தாதி

12 ஆம் வகுப்பு திருவேங்கடத்தந்தாதி

  • சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அந்தாதியாகும்.
  • அந்தம் என்ற சொல்லுக்கு இறுதி என்றும்
  • ஆதி என்ற சொல்லுக்கு முதல் என்றும் பொருள்.
  • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
  • அந்தாதியை சொற்றொடர்நிலை என்று வழங்குவதும் உண்டு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

திருவேங்கடத்தந்தாதி நூல் குறிப்பு

  • திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டிப் பாடப்பெற்ற அந்தாதி நூல்.
  • ஆதலால் இதனைத் திருவேங்கடத்து அந்தாதி என்று கூறுவர்.

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஆசிரியர் குறிப்பு

  • திருவேங்கடத்து அந்தாதி நூலின் ஆசிரியர் = பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
  • 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இவர் அழகிய மணவாளதாசர் எனவும் அழைக்கப்பட்டார்.
  • தெய்வக்கவிஞர் என்று பொருள்படும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர்.
  • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர்.
  • “அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூல்களின் உயர்வைப் புலப்படுத்தும்.
  • இவர்தம் பாடல்கள் சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடை நோக்கும் நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன.
  • கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

அருஞ்சொற்பொருள்

  • கடத்தும்பி = (கஜேந்திரன் என்னும்) மதயானை
  • உற்று = (முதலையால்) துன்பமடைந்து
  • சிற்றன்னை = கைகேயி
  • தருவேம் கடத்து = மரங்கள் வேகின்ற காட்டில்
  • உருவேங்கள் = உருவத்தையுடைய எங்கள்
  • தத்துக்கு = ஆபத்தை ஒழிப்பதற்கு
  • கழல் = திருவடி
  • பதி = ஊர் (திருமால் உறையும் திருத்தலம்)
  • மாலைமதி = மாலை நேரத்தில் தோன்றும் பிறைமதியைத் தரித்த
  • குஞ்சி = தலைமயிர்
  • போதன் = பிரமன்
  • வாசவன் = இந்திரன்
  • நூலை மதிக்கும் = சாத்திரங்களை ஆராயும்
  • அந்தி = மாலை
  • மதிக்குள் = அறிவில்
  • ஏத்தும் = துதிக்கும்
  • கைம்மலையால் = கைகளாகிய மலைகளால்
  • வேலை = கடல் (இங்கு; பாற்கடல்)
  • மதிக்கும் = கடையும்
  • அங்கம் ஆம் கடம் = உடலாகிய காடு
  • அவியா = அணையாத
  • மதி விளக்கு = ஞான விளக்கு
  • தீங்கு அட = பிறவித் துயரை அழிக்க
  • கடமால் = மதநீரினால் மயக்கமுடைய
  • ஐராவதம் = இந்திரனது யானை
  • இதின் சீரியதே = இதை விடச் சிறந்ததோ?
  • இருக்கு ஆரணம் = இருக்கு வேதம்
  • எப்பொருள் = எல்லாப் பொருள்களின்
  • கருக்காரணம் = உற்பத்திக் காரணம்
  • கஞ்சம் = தாமரை மலர்; ஆர் பொருந்திய
  • அணங்கு = திருமகள்
  • மருக்கார் அணவும் பொழில் = மணமும் மேகமும் பொருந்தும் சோலை
  • மாயவன் = திருமால்.

இலக்கணக்குறிப்பு

  • சிற்றன்னை = பண்புத்தொகை
  • தாழ்பிறப்பு = வினைத்தொகை
  • மால் கழல் = வேற்றுமைத்தொகை
  • கழல் = (திருவடிக்கு ஆகி வந்தது) தானியாகுபெயர்
  • மலைமதி = ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மதிக்குஞ்சி = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • ஈசனும் போதனும் = எண்ணும்மை
  • அந்தி காலை = உம்மைத் தொகை
  • கைம்மலை = உருவகம்
  • மதிக்கும் = மத்திக்கும் என்பதன் இடைக்குறை
  • உறைவேங்கடம் = வினைத்தொகை
  • மதிவிளக்கு = உருவகம்
  • அவியா மதிவிளக்கு = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • சேவடி = பண்புத்தொகை
  • புனைந்தோம் = தன்மைப் பன்மை வினைமுற்று
  • கவி புனைந்தோம் = இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • இருக்கு ஆரணம் = இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • நற்றாய் = பண்புத்தொகை
  • வேங்கட மாயவன் = ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • பெருந்தெய்வம் = பண்புத்தொகை

 

 

Leave a Reply