12 ஆம் வகுப்பு பாண்டியன் பரிசு

12 ஆம் வகுப்பு பாண்டியன் பரிசு

12 ஆம் வகுப்பு பாண்டியன் பரிசு
12 ஆம் வகுப்பு பாண்டியன் பரிசு

12 ஆம் வகுப்பு பாண்டியன் பரிசு

  • கதிர் நாட்டு மன்னன் கதிரைவேலன்.
  • கதிர் நாட்டு அரசி கண்ணுக்கிணியாள்.
  • கதிர் நாட்டின் இளவரசி = அன்னம்.
  • கண்ணுக்கிணியாள் அண்ணனும் படைத்தளபதியும் ஆன நரிக்கண்ணன் சூழ்ச்சியால் நிகழ்ந்த வேழ நாட்டு படையெடுப்பில் அரசனும் அரசியும் இறந்தனர்.
  • பாண்டிய மன்னன் பரிசாக வழங்கிய உடைவாளும் மணிமுடியும் கொள்ளை அடிக்க விரும்பினான் நரிக்கண்ணன்.
  • பேழையை தவறுதலாக வீரப்பனிடம் கொடுத்துவிடுகிறான் நரிக்கண்ணன்.
  • பேழையை கொண்டு வந்து தருபவர்களுக்கு அன்னம் மாலையிடுவாள் என் அறிவிக்கப்பட்டது.
  • அரசியின் தோழி ஆத்தாக்கிழவி. இவள் அன்னத்தின் செவிலித்தாய்.
  • ஆத்தாக்கிழவியின் மகன் வேலன்.
  • ஆத்தாக்கிழவியின் கணவன் வீரப்பன்.
  • அன்னத்தின் தோழி நீலி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு

  • பாண்டியன் பரிசு காப்பியத்தின் ஆசிரியர் = பாவேந்தர் பாரதிதாசன்.
  • பாரதிதாசன் 29-4-1891 இல் புதுச்சேரியில் பிறந்தார்.
  • இவர் பெற்றோர் கனகசபை, இலக்குமியம்மாள் என்பவராவர்.
  • பெற்றோர் இவருக்கிட்ட பெயர் சுப்புரத்தினம் என்பதாம்.
  • இவர் தமிழ்மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் சிறந்த புலமை பெற்றவர்.
  • தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • பாரதியார் புதுச்சேரியில் இருந்தபொழுது அவருடன் கொண்ட தொடர்பு இவரை எளிய நடையில் எழுதவும் பாரதிதாசன் என்றுபெயர் கொள்ளவும் தூண்டுவதாயிற்று.
  • ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சார்ந்த சுப்புரத்தினம்’ – என்று பாரதியார் இவரை ஏற்றதும் இவர் தம்மைப் பாரதிதாசன் என்று அழைத்துக் கொண்டதும் இவரை பின்தொடர்ந்த கவிஞர்கள் பாரதிதாசன் பரம்பரையென்று பெயர் பெற்றதும், அவர்களும் தம்மை வாணிதாசன், கம்பதாசன் சுப்புரத்தினதாசன் (சுரதா) என்று இவ்வகையாகப் புனை பெயர்கள் கொண்டதும் தமிழ் வரலாற்றிற் குறிப்பிடத் தகும் நிகழ்வுகளாம்.
  • இவர் வெளியிட்ட ‘குயில்’ என்ற இலக்கிய இதழ் பல்வேறு கவிஞர்கள் தோன்றி வளரக் காரணமாயிருந்தது.

புரட்சிக் கவிஞர்

  • தமிழ் மொழியும் தமிழரும் தமிழ் நாடும் சீர்பெற்றுச் சிறக்கவே இவர் தமது பாடற்றிறம் முழுவதையும் பயன்படுத்தினார்.
  • மறுமலர்ச்சிக் கருத்துகளை இவர் பாடல்களிற் பரக்கக் காணலாம்.
  • அதனால் இவர் ‘புரட்சிக் கவிஞர்’ எனப் போற்றப்பட்டார்.

தமிழ்நாட்டு இரசூல் கம்சதோவ்

  • “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாதமரம்; கூடில்லாத பறவை’.. என்று பாடிய உருசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ் போலவே பாவேந்தர் பாரதிதாசனும் விளங்குகிறார்.

பாரதிதாசன் எழுதிய நூல்கள்

  • குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித்திட்டு, அழகின் சிரிப்பு, இளைஞர் இலக்கியம், தமிழியக்கம், திருக்குறள் உரை முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.

பாரதிதாசன் குறிக்கோள்

  • “எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்” என்ற பாடலை பாண்டியன் பரிசு வாயிலாகச் சொல்லப்படும் கருத்து இக்கவிஞர் பெருமானின் வாழ்க்கைக் குறிக்கோள் என்றே கொள்ளலாம்.

பாரதிதாசன் சிறப்புகள்

  • இவர் எழுதிய பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்றது.
  • ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்னும் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ் வாழ்த்துப் பாடலாக ஏற்றுக் கொண்டுள்ளது.
  • தமிழக அரசு இவர் பெயரால் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியும், இவர்தம் நூல்களை நாட்டுடைமை ஆக்கியும் இவருக்குச் சிறப்புச் செய்துள்ளது.

பாரதிதாசன் முக்கிய பாடல் அடிகள்

  • எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்
  • தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே
  • தமிழுக்கும் அமுதென்று பேர்
  • சங்கே முழங்கு
  • உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே
  • தமிழின் விந்தையை எழுதத்தரமோ
  • தமிழே நீயோர் பூக்காடு; நானோர் தும்பி
  • உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும் தெள்ளுதமிழ்

சொற்பொருள்

  • தீத்தாவும் கண் = தீப்பொறி பறக்கும் கண்
  • மறித்து = இடைமறித்து
  • மின் = மின்னல்
  • கூடு = உடம்பாகிய வெறுங்கூடு
  • குமிழி = நீர்க்குமிழி போன்ற நிலையற்ற வாழ்வு
  • முரசுக்கு வாய் ஓயாக் குறடு = ஓயாமல் முரசு ஒலிக்கும் முற்றம்
  • குறடு = அரண்மனை முற்றம்
  • தினையளவு = மிகச்சிறிதளவு
  • பதடி = பதர்
  • பேழை = பெட்டி

இலக்கணக்குறிப்பு

  • என்மகள் = நான்காம் வேற்றுமைத்தொகை
  • தாவும் கண் = செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
  • காத்தார், தருவார் = வினையாலணையும் பெயர்கள்
  • விலகாத = எதிர்மறைப் பெயரெச்சம்
  • ஈன்ற தந்தை = பெயரெச்சம்
  • இழந்த (பாண்டியன்) பரிசு = பெயரெச்சம்
  • முழங்கிய (ஓர்) சேதி = பெயரெச்சம்
  • அறியீர் = முன்னிலை எதிர்மறை வினைமுற்று
  • கொழுத்த புகழ் = பெயரெச்சம்

 

 

Leave a Reply