12 ஆம் வகுப்பு புத்தக சாலை

12 ஆம் வகுப்பு புத்தக சாலை

12 ஆம் வகுப்பு புத்தக சாலை
12 ஆம் வகுப்பு புத்தக சாலை

12 ஆம் வகுப்பு புத்தக சாலை

  • புத்தகசாலை என்பது நூல்நிலையம் என்று வழக்கில் வழங்கப்படுகிறது.
  • கல்வியோடும் கற்பாரோடும் தொடர்புடைய புத்தக சாலையின் அருமைபெருமைகளையும் தேவையினையும் உணர்த்தும் வகையில் பாரதிதாசன் பாடியுள்ளார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு

  • “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?” என்று பாடியவர் = பாவேந்தர் பாரதிதாசன்.
  • “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என்று பாடியவர் = பாவேந்தர் பாரதிதாசன்.
  • “உறுதி! உறுதி! ஒன்றே சமுகம் என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி!” என்று பாடியவர் = பாரதிதாசன்.
  • பாரதிதாசன் பிறந்த தினம் = 29.04.1891.
  • பாரதிதாசன் பிறந்த இடம் = புதுவை.
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமி அம்மாள்.
  • பாரதிதாசனின் இயற்பெயர் = கனக சுப்புரத்தினம்.
  • பாரதியார் புதுவையில் வாழ்ந்தபொழுது அவருடன் நட்புக் கொண்டு, அவர்மீது கொண்ட அன்பு காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் எனப் புனைந்து கொண்டார்.

கல்வி பற்றி பாரதிதாசன்

  • “எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்” என்று பாடியவர் = பாரதிதாசன்.
  • “எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்” என்று முழங்கியவர் = பாரதிதாசன்.

பாரதிதாசன் நூல்கள்

  • குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, இசையமுது, அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பிசிராந்தையார் (நாடகநூல்) முதலான தொண்ணூறுக்கும் மேலான நூல்களை இயற்றியுள்ளார்.

இன்பக்களஞ்சியங்கள்

  • நாடு, மொழி, இனம், சமுதாயச் சீர்திருத்தம், இயற்கை முதலானவற்றைப் பாடு பொருளாகக் கொண்டு இவரியற்றிய நூல்கள் இறவா இன்பக்களஞ்சியங்கள்.
  • செந்தமிழைச் செழுந் தமிழாகக் காண அவாமிகக் கொண்ட இவர், என்னருந்தமிழ் நாட்டின்கண் எல்லாருங் கல்வி கற்க வேண்டும் என விழைந்தார்.

சொற்பொருள்

  • மனோபாவம் = உளப்பாங்கு
  • தனிமனித தத்துவம் = தன்னலம் பேணுதல்
  • சகமக்கள்= உடன் வாழும் மக்கள்
  • ஒன்று = ஓரினம்
  • இலகுவது = விளங்குவது
  • சுவடி = நூல்
  • சுவடிச்சாலை = நூலகம்
  • சர்வகலா சாலை = பல்கலைக்கழகம்

இலக்கணக்குறிப்பு

  • எலாம் = எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்
  • அன்புநெறி = இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • இனிதினிது = அடுக்குத்தொடர்
  • உயர் எண்ணம் = வினைத்தொகை
  • சுவடிச்சாலை = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • தமிழிலிலாப் பிறமொழி நூல் = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • செந்தமிழ் = பண்புத்தொகை
  • தருதல், வைத்தல் = தொழிற்பெயர்கள்
  • சுமைசுமையாய், துறை துறையாய் – அடுக்குத் தொடர்கள்

நூல் என பொருள் தரும் பல சொற்கள்

  • நூல் = ஏடு, ஓலை, சுவடி, தூக்கு, பனுவல், புத்தகம்

புத்தக சாலை என பொருள் தரும் பல சொற்கள்

  • புத்தக சாலை = பண்டாரம், சரசுவதி பண்டாரம், புத்தக பண்டாரம், ஏடகம், சுவடிச்சாலை, சுவடியகம், நூலகம், நூல் நிலையம்.

 

Leave a Reply