சீறாப்புராணம்

சீறாப்புராணம்

சீறாப்புராணம்
சீறாப்புராணம்

உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு

  • சீறாப் புராணத்தை உமறுப் புலவர் (கி.பி.1642-1703) என்பவர் இயற்றினார்.
  • உமறுப் புலவர் பிறந்த ஊர் கீழக்கரை என்றும், நாகலாபுரம் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு.
  • தந்தை = செய்குமுகமது அலியார் என்னும் சேகு முதலியார்
  • உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்.
  • உமறுப் புலவர் மார்க்க மேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் காப்பியம் இயற்றக் கருப்பொருள் பெற்றார்.
  • வடநாட்டுப் புலவர் வாலை வாருதியை எட்டையபுரம் அவைக்களத்தில் தன் புலமையால் வென்றார்.
  • செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார்.
  • நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
  • பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது.
  • உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற என்பது பாக்களால் ஆன நூலையும் படைத்துள்ளார்.

சீறாப்புராணம் நூல் பெயர்க் காரணம்

  • சீறாப் புராணம் = சீறாவைக் கூறும் புராணம்.
  • சீறத் என்பது சீறத்துன்னபி என்ற அரபுத் தொடரின் சுருக்கம் ஆகும்.
  • இதற்கு நபிகள் நாயகத்தின் வரலாறு என்று பொருள்.
  • சீறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவம்.
  • புராணம் என்பது பழமையான வரலாறு எனப் பொருள்படும்.
  • திருநபி அவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம் என்பது இதன் பொருள்.

சீறாப்புராணம்

சீறாப்புராணம் நூல் குறிப்பு

  • இந்நூலில் 3 காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன.
  • பாவகை = விருத்தப்பா
  • காண்டங்கள் = 3
    • விலாத்துக் காண்டம் (பிறப்பியல் காண்டம்) = 24 படலங்கள்
    • நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்) = 21 படலங்கள்
    • இசிறத்துக்காண்டம்(ஹிஜிறத்துக் காண்டம்-செலவியல் காண்டம்) = 47 படலங்கள்
  • இந்நூல் 2 பாகங்களாக அமைந்துள்ளது.
    • முதல் பாகத்தில் 2 காண்டங்களும், 45 படலங்கமும் உள்ளன
    • இரண்டாவது பாகத்தில் ஒரு காண்டமும் 47 படலங்களும் அமைந்துள்ளது.
  • இந்நூலில் உள்ள மொத்த பாடல்கள் = 5027 பாடல்கள்
  • நூலின் முதல் படலம் = கடவுள் வாழ்த்துப் படலம்
  • நூலின் இறுதி படலம் = உறனிக் கூட்டத்தார் படலம்

விலாத்துக் காண்டம்

  • சீறாப் புராணத்தின் முதல் காண்டம் விலாதத்துக் காண்டம் ஆகும்.
  • விலாதத் என்ற அரபுச் சொல்லுக்குப் பிறப்பு என்பது பொருள்.
  • இதில் நபிகள் நாயகத்தின் பிறப்பும், இளமையும், தொழில் முயற்சியும் முதலில் கூறப்படுகின்றன.
  • பின்னர், கதீஜா நாயகியாரின் உறவு, அவர்கள் திருமணம், பாத்திமா பிறப்பு ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன.
  • இது இருபத்து நான்கு படலங்களைக் கொண்டு உள்ளது.

நுபுவத்துக் காண்டம்

  • இது இரண்டாவது காண்டம்.
  • நுபுவ்வத் என்ற அரபுச் சொல்லின் பொருள் தீர்க்க தரிசனம் என்பதாகும்.
  • இது நபிகள் நாயகம் நபித்துவம் என்னும் நபிப் பட்டம் பெற்றதைப் பாடுகிறது.
  • மேலும் தீமைகள் செய்து வந்த குறைசிகள் எனும் குலத்தவரின் கொடுமைகளும் இக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளன.
  • முஸ்லீம்களின் பொறுமையைப் பற்றியும், இசுலாம் உறுதி பெற்றது பற்றியும் இக்காண்டம் தெரிவிக்கிறது.
  • இதில் இருபத்தொரு படலங்கள் உள்ளன.

ஹிஜ்ரத்துக் காண்டம்

  • இது மூன்றாவது காண்டம். ஹிஜ்ரத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம் பெயர்தல் என்பது பொருள்.
  • இசுலாமிய அறநெறிகளை வளர்க்க மக்காவை விட்டு மதீனா நகர் சென்றார். அங்கு இசுலாமிய அறநெறி வளர்த்த வரலாறும் இக்காண்டத்தில் விவரிக்கப்படுகிறது.
  • ஆனால் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு முடிவுபெறவில்லை.
  • உறனிக் கூட்டத்தார் படலத்துடன் முடிகிறது.
  • நபிகள் நாயகத்தின் ஐம்பத்தேழாவது வயதுவரை நடந்த நிகழ்ச்சிகளோடு சீறாப் புராணம் நிறைவு அடைகிறது.
  • இது நாற்பத்தேழு படலங்களால் ஆனது.

சீறாப்புராணம்

இஸ்லாமிய இரட்டை காப்பியங்கள்

  • உமறுப் புலவர் அக்காலத்தில் வாழ்ந்த படிக்காசுப் புலவர். நமசிவாயப் புலவர், கந்தசாமிப் புலவர் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.
  • இவரை ஆதரித்த வள்ளல்கள் இருவர். ஒருவர் சீதக்காதி, இன்னொருவர் பரங்கிப் பேட்டை அபுல்காசிம் மரைக்காயர்
  • இஸ்லாமிய இரட்டை காப்பியங்கள் எனப்படுபவை = சீறாப்புராணமும், சின்ன சீறாவும்

சீறாப்புராணம் குறிப்புகள்

  • தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இலக்கியம் சீறாப் புராணம் ஆகும்.
  • இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம்.
  • இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி , அபுல்காசிம் ஆகியோரின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார்.
  • வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் “செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்ற சொற்றொடர் விளக்கும்.
  • இதன் ஆசிரியரான உமறுப்புலவர், இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார்.
  • இசுலாமியக் காப்பியமாக முதலில் தோன்றியது கி.பி. 1648இல் எழுதப்பட்ட கனகாபிசேக மாலை என்னும் நூல் ஆகும்.
  • இந்த நூலை 1842ல் அப்துல் காதிர் நெய்னா லெப்பை ஆலிம் முதலில் பதிப்பித்தது வெளியிட்டார். இந்நூலுக்கு செய்கு தம்பி பாவலர் விரிவான உரை எழுதினார்.

சின்ன சீறா

  • இந்நூல் விருதப்பாவால் ஆனது
  • சீறாப்புராணம், நபிகள் நாயகத்தின் ஐம்பத்தேழு வயதுவரை உள்ள வரலாற்றைத் தெரிவிக்கிறது. சீறாப் புராணம் முடிந்த இடத்திலிருந்து நபிகள் நாயகத்தின் இறப்பு வரையிலான 63 வயது வரையுள்ள வரலாற்றைச் சின்ன சீறா தெரிவிக்கிறது.
  • உமறுப் புலவர் இயற்றிய சீறாப்புராணம் முழுமை பெறவில்லை. இக்குறையை நிறைவு செய்ய ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியதே சின்ன சீறா.
  • இது பனீ அகமது மரைக்காயர் என்பவரால் பாடப்பெற்றது.
  • இதைச் சீறாப் புராணத்தின் தொடர்ச்சியாக 30 படலங்களில் 1823 பாடல்களில் பாடி முடித்துள்ளார். சின்ன சீறாவில் உள்ள பாடல்கள் விருத்தப் பாவில் அமைந்துள்ளன.
  • இந்நூல் நபிகள் நாயகத்தின் கடைசி ஆறு ஆண்டுகள் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பாடுகிறது.
  • நபிகள் நாயகம் ஒன்பது பிற நாட்டு மன்னர்களோடு கொண்ட கடிதத் தொடர்பைப் பற்றியும், அவர்களை இசுலாத்தில் சேர அழைத்ததைப் பற்றியும் சின்ன சீறாவில் காணலாம்.

 

 

 

 

 

 

Leave a Reply