இவர் செயலால் காந்தியடிகளையும், பாட்டால் பாரதியையும் தம் குருவாக ஏற்றுக்கொண்டவர்
முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்
இவர் மூன்று மாதம் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார்
சிறு வயது முதல் ஒரு முஸ்லிம் தாயால்(பதுலா பீவி) வளர்க்கப்பட்டவர்
இவர் சிறந்த ஓவியர்
இவர் முதன் முதலாக வரைந்த படம் இராமகிருஷ்ண பரமஹம்சர்
அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுக்குப் பாரத மாத முடிசூட்டுவது போல் படம் வரைந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
இவரின் பாடல்களைக் தொகுத்து வெளியிட்டவர் = தணிகை உலகநாதன்
நாமக்கல் கவிஞர் சிறப்பு
இவர் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் ஆவார்
இராசாசி = திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது; காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது
இராசாசி = இந்தச் சமயத்தில் பாரதி இல்லையே என்று ஏங்கினேன் அந்தக் குறையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்
பாரதி = பலே பாண்டியா, நீர் ஒரு புலவர், ஐயமில்லை
“நாட்டுக்கும்மி” என்ற தலைப்பில் நூறு தேச பக்திப் பாடல்களை எழுதி, சேலம் எஸ்.விஜயராகவ ஆச்சாரியார் முன்பு பாடி அரங்கேற்றம் செய்தார். ஆச்சாரியார் அவருக்கு “புலவர்” என்ற பட்டம் வழங்கினார்
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழக சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்ய பெற்றார்
இவர் “பத்மபூஷன்” விருது பெற்றுள்ளார்
நாமக்கல் கவிஞர் பாடல் வரிகள்
கத்தி இன்றி ரத்தமன்றி யுத்தமொன்று வருகுது
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
இந்திய நாடு என்னுடைய நாடு என்று தினம்தினம் நீயதைப் பாடு
பாட்டாளி மக்கள் பசிதீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
’கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்’