பாரதிதாசன் பல்வேறு புனைப் பெயர்களில் தனது கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவன,
கண்டழுதுவோன்
கிறுக்கன்
கிண்டல்காரன்
பாரதிதாசன்
பாரதிதாசன் இயற்றிய நூல்கள்
இசை அமுது
பாண்டியன் பரிசு
எதிர்பாராத முத்தம்
சேரதாண்டவம்
அழகின் சிரிப்பு
புரட்சிக்கவி
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
குறிஞ்சித்திட்டு
கண்ணகி புரட்சிக்காப்பியம்
மணிமேகலை வெண்பா
காதல் நினைவுகள்
கழைக்கூத்தியின் காதல்
தமிழச்சியின் கத்தி
இளைஞர் இலக்கியம்
சுப்பிரமணியர் துதியமுது
சுதந்திரம்
தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது)
உரைநடை நூல்கள்
திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
பாரதிதாசன் நாடகங்கள்
சௌமியன்
நல்ல தீர்ப்பு
பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
சக்திமுற்றப் புலவர்
அமைதி ஊமை (தங்கக் கிளி பரிசு)
இரணியன் அல்லது இணையற்ற வீரன்
சௌமியன்
படித்த பெண்கள்
இன்பக்கடல்
நல்லதீர்ப்பு
அம்மைச்சி
ரஸ்புடின்
அமைதி
பாரதிதாசன் நடத்திய இதழ்கள்
குயில்
முல்லை (முதலில் தொடங்கிய இதழ்)
பாரதிதாசன் பற்றிய தகவல்
பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்
பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை தாசன் ஆக ஆக்கிக்கொண்டார்
அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்
பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் பாடிய “எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத் தாமே, “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது” எனச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்
பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞரான இவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்
தந்தை பெரியாரின் விரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்
தொடக்க கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம்
இவர் தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம்
இவரின் கவித்திறன் கண்டு “நாவலர் சோமசுந்தர பாரதியார்” தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும் 25000 ரூபாய் நன்கொடையும் அளித்தார்
வ.ரா.வின் அழைப்பின் பேரில் “இராமனுஜர்” என்னும் படத்திற்கு திரைப்படப்பாடல் எழுதினார்
நகைச்சுவை உணர்வு மிக்கவர். நன்கு பாடுவார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். சிலம்பம், குத்துச்சண்டை, குஸ்தி பயின்றார். வீடு என்று இருந்தால் கோழி, புறா, பசு மூன்றும் இருக்க வேண்டும் என்பார். அவற்றை தானும் வளர்த்துவந்தார்.
பாரதிதாசன் சிறப்பு
புதுமைபித்தன் = அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்
கு.ப.இராசகோபாலன் = பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி
சிதம்பரநாத செட்டியார் = அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகி விடுவான்
வி.ஆர்.எம்.செட்டியார் = புரட்சிக்கவி அவர், புதிய கவிதையை சிருஷ்டி செய்கிறார்; இயற்கையாகவே செய்கிறார்; தமிழ் மொழியில் புதியவளைவும், நெளிவும் மெருகும் ஏற்றுகிறார்; அவர் இசை வெறியில் கவிதைக் கனலுடன் பாடும்போது நாம் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் சலிப்பின்றிக் கேட்டு இன்புறலாம். இது உண்மை! மறுக்க முடியாத உண்மை
Very use ful my self