10TH இரண்டாம் உலகப்போர்
10TH இரண்டாம் உலகப்போர்
- முதல் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு = 1914 முதல் 1918 வரை.
- இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற ஆண்டு = 1939 முதல் 1945 வரை.
- முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் “நட்பு நாடுகள்” (நேச நாடுகள்) கூட்டுப் படைகள் = பிரிட்டன், பிரான்ஸ், அமேரிக்கா, ரஷ்யா.
- இரண்டாம் உலகப் போரின் மைய நாடுகள் (ஆச்சு நாடுகள்) கூட்டுப் படைகள் = ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்.
இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள்
- முதல் உலகப் போரின் பாதிப்புகளில் இருந்து எழுச்சி பெற்ற ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஜப்பானின் விரைவான வளர்ச்சியே இரண்டாம் உலகப் போர் ஏற்படுவதற்கான உடனடி மற்றும் அடிப்படைக் காரணங்கள் ஆகும்.
- எந்த உடன்படிக்கை மூலம் முதல் உலகப் போர் முடிவிற்கு வந்தது = வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை.
- வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு = 1919.
- எந்த உடன்படிக்கை, ஜெர்மனிக்கு மிகுந்த அவமானத்தை தந்தது = வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை.
- பன்னாட்டு சங்கம் உருவாக காரணமாக இருந்த நாடு = அமேரிக்கா (அதிபர் = உட்ரோ வில்சன்).
- பன்னாட்டு சங்கத்தில் உறுப்பினராக சேராத நாடு = அமேரிக்கா.
- பன்னாட்டு சங்கத்தின் தோல்வி.
ஜெர்மனி
- ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த ஆண்டு = 1933.
- எந்த ஆண்டு வரை ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சியில் இருந்தார் = 1945.
- இத்தாலியின் முசோலினி எந்த நாடு மீது எடுத்த படையெடுப்பின் காரணமாக தங்கள் உறவை இங்கிலாந்தும், பிரான்சும் முறித்துக் கொண்டன = எத்தோப்பியா.
- முதலாம் உலகப் போரின் முடிவில் எந்த பகுதி படைநீக்கம் செய்யப்பட பகுதியாக அறிவிக்கப்பட்டது = ரைன்லாந்து.
- ரைன்லாந்து பகுதி மீது ஹிட்லர் படையெடுத்த ஆண்டு = 1936.
- இத்தாலியும், ஜெர்மனியும் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை = ரோம் – பெர்லின் உடன்படிக்கை.
- ஹிட்லர் ஆஸ்திரியா நாட்டை கைப்பற்றிய ஆண்டு = 1938.
- ஹிட்லர் செகோச்லேவேகியா நாட்டை கைப்பற்றிய ஆண்டு = 1938.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நேச நாடுகளின் தலையீடாக் கொள்கை
- இத்தாலி அல்பேனியா மீது படையெடுத்த ஆண்டு = 1939.
- ஜப்பான் சீனாவை தாக்கிய ஆண்டு = 1937.
- பிரிட்டன், அமேரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பிற நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளில் தலையிடவில்லை.
- 10TH இரண்டாம் உலகப்போர்
மியூனிச் உடன்படிக்கை
- பிரிட்டன் எந்த நாட்டுடன் மியூனிச் உடன்படிக்கையை செய்துக் கொண்டது = ஜெர்மனி.
- ஜெர்மனியுடன் மியூனிச் உடன்படிக்கையை செய்துக் கொண்ட இங்கிலாந்து பிரதமர் = சேம்பர்லின்.
- உடன்படிக்கையை மீறி ஜெர்மனியின் ஹிட்லர் செகோச்லேவேகியா, போலந்து படையெடுப்பு செய்தார்.
- இதுவே இரண்டாம் உலகப் போர் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்தது.
- பிரிட்டன் பிரதமர் சேம்பர்லின் பதவி விலகியதை அடுத்து இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்றவர் = வின்ஸ்டன் சர்ச்சில்.
இரண்டாம் உலகப்போர்
- இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒரு அணியாக இருந்தது.
- எந்த ஆண்டு பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தன = செப்டம்பர் 1939.
- ஜெர்மனியின் தாக்குதல் முறை = “பிளிட்ஸ்கிரிக்” (Blitzkrieg) எனப்படும் மின்னல் வேகத்தாக்குதல்.
- ஜெர்மனி லண்டன் நகரை தாக்கிய ஆண்டு = செப்டம்பர் 1940.
- ஜெர்மனி லண்டன் நகரை தாக்கிய நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது = மின்னல் (Blitz).
- ஜெர்மனியில் லண்டன் நகர விமானத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
கடன் குத்தகைத் திட்டம்
- இரண்டாம் உலகப் போரின் பொழுது “கடன் குத்தகைத் திட்டத்தை” கொண்டு வந்த நாடு = அமெரிக்கா.
- அமெரிக்காவின் கடன் குத்தகைத் திட்டம் செயல்பாட்டில் இருந்த ஆண்டு = 1941 – 1945.
- இத்திட்டத்தின் படை, அமேரிக்கா, பிரிட்டனுக்கு பெரும் அளவிலான ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை கடனாக வழங்கியது.
ரஷ்யப் படையெடுப்பு
- ஜெர்மனி ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்திய ஆண்டு = 1941.
- ஜெர்மனி ரஷ்ய தாக்குதலில் முதல் வெற்றி பெற்றாலும், இறுதியில் ரஷ்யாவில் ஏற்பட்ட கடும் குளிர் மற்றும் ரஷ்யப் படைகளின் தாக்குதல் காரணமாக ஜெர்மனியின் ரஷ்யப் படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.
ஆபரேசன் புளூ
- எந்த ஆண்டு ஜெர்மனி ரஷ்யாவின் “ஸ்டாலின்கிராட்” நகரை தாக்கியது = ஜூலை 1942.
- ரஷ்யாவின் ஸ்டாலின்கிராட் நகரை கைப்பற்ற ஜெர்மனி மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை = ஆபரேசன் புளூ (Fall Blau (“Operation Blue”)).
- “ஸ்டாலின்கிராட் போரில்” சுமார் 15 மில்லியன் மக்கள் இறந்தனர்.
எல் அலாமெய்ன் போர் (1942)
- ஆப்ரிக்காவை கைப்பற்ற சென்ற ஜெர்மன் படைக்கு தலைமை தாங்கியவர் = ஜெனரல் ரோம்மெல்.
- இங்கிலாந்தின் ஜெனரல் மாண்ட்கோமரி என்பவரின் தலைமையிலான படைகள் “எல் அலாமெய்ன்” என்னுமிடத்தில் ஜெர்மனி மற்றும் இத்தாலியின் படைகளை தோற்கடித்தார்.
- எல் அலாமெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு = 1942.
இத்தாலி சரணடைதல்
- இத்தாலியில் மக்கள் போராட்டம் காரணமாக முசோலினியின் ஆட்சி தூக்கி வீசப்பட்டது.
- புதிதாக பொறுப்பேற்ற இத்தாலி அரசு இரண்டாம் உலகப் போரில் சரணடைந்தது.
- இரண்டாம் உலகப் போரில் இத்தாலி சரணடைந்த ஆண்டு = 1943.
- எப்பொழுது முசோலினி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார் = ஏப்ரல் 1945.
- 10TH இரண்டாம் உலகப்போர்
ஹிட்லரின் முடிவு
- நார்மண்டி போர் நேச நாடுகளுக்கும், ஜெர்மனிக்கும் ஓராண்டுக்கு மேலாக நீடித்தது.
- போரில் முடிவில் ஜெர்மனி தோல்வியை தழுவியது.
- எப்பொழுது ஹிட்லர் தற்கொலை செய்துக் கொண்டார் = ஏப்ரல் 1945.
- நார்மண்டி போர் எப்பொழுது முடிந்தது = மே 1945.
ஜப்பானின் போர் நடவடிக்கை
- ஜப்பான் மஞ்சூரியாவை கைப்பற்றிய ஆண்டு = 1931.
- எந்த ஆண்டு ஜப்பான் சீனாவின் பீஜிங் நகரை முற்றுகையிட்டது = 1937.
- சீனாவில், ஜப்பான் பல்வேறு மனித படுகொலைகளை நடத்தியது.
முத்துத் துறைமுகம் தாக்கப்படல்
- அமெரிக்காவின் “முத்துத் துறைமுகத்தை” ஜப்பான் எப்பொழுது தாக்கியது = டிசம்பர் 1941.
- அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் கலந்துக் கொள்ள காரணமாக அமைந்த நிகழ்வு = ஜப்பானின் முத்துத் துறைமுகம் தாக்குதல் நிகழ்வு.
- அமெரிக்கா ஜப்பான் மீது போர் பிரகடனம் அறிவித்தது.
- அமெரிக்காவுடன் சீனா மற்றும் பிரிட்டன் சேர்ந்து ஜப்பானை தாக்கின.
- மிட்வே போரில் அமெரிக்க கடற்படை ஜப்பானின் கடற்படையை தோற்கடித்தன.
- மிட்வே போர் நடைபெற்ற ஆண்டு = 1942.
- சாலமன் தீவுகள் அருகே நடைபெற்ற போர் = க்வாடல்கெனால் போர் (1942).
- இவ்விரு போர்களிலுமே ஜப்பான் தோல்வியை தழுவியது.
ஹிரோஷிமா, நாகசாகி மீது தாக்குதல்
- அமேரிக்கா முதலில் ஹிரோஷிமா நகர் மீது ஒரு அணுகுண்டை வீசியது.
- பின்னர் நாகசாகி நகர் மீது மற்றொரு அணுகுண்டை வீசியது.
- இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைவதாக அறிவித்த தினம் = 15 ஆகஸ்ட் 1945.
- இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைவதாக முறையாக கையெழுத்து இட்ட தினம் = 2 செப்டம்பர் 1945.
- 10TH இரண்டாம் உலகப்போர்
இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்ட விளைவுகள்
- அமேரிக்கா தலைமையில் ஒரு பிரிவு நாடுகளும், ரஷ்யா தலைமையில் கம்யூனிச நாடுகளும் என இரு பிரிவுகள் உருவாகின.
- ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற சர்வதேச பன்னாட்டு முகமைகள் உருவாகின.
- காலனி ஆதிக்க நாடுகள் தங்கள் கட்டுபாட்டில் இருந்த நாடுகளுக்கு சுதந்திரம் வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
- இரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதலில் சுதந்திரம் பெற்ற நாடு = இந்தியா.
பேரழிவும் பின்விளைவும்
- யூத இன மக்கள் “கெட்டோக்கள்” (ghettos) என அழைக்கப்பட்டனர்.
- ஜெர்மானியர்கள் யூதர்களை கொன்று குவிக்க வைத்த கருத்து = இறுதித்தீர்வு (Final Solution).
- பேரழிவுப்படுகொலை (Holocaust) என்பது = இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்களால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்டதை விளக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது.
- சேக்ஸ்பியரின் எந்த நாடகம் ஐரோப்பிய மக்களின் யூத மக்கள் வெறுப்பை படம் பிடித்துக் காட்டியது = வெனிஸ் நகர வணிகர் (Merchant of Venice).
மனித உரிமைப் பிரகடனம்
- ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கிய ஆணையம் = மனித உரிமைகள் ஆணையம்.
- மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அடிப்படை மனித உரிமைகள் மொத்தம் எத்தனை கட்டுரைகளில் வெளியிடப்பட்டது = 30 கட்டுரைகள்.
- மனித உரிமைகள் ஆணையத்தின் அடிப்படை உரிமைகளை, ஐ.நா சபை ஏற்றுக் கொண்ட தினம் = 10 டிசம்பர் 1948.
- உலக மனித உரிமைகள் தினம் = டிசம்பர் 10.
இஸ்ரேல் நாடு பிறப்பு
- இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட மிக முக்கிய விளைவு = யூத இன மக்களுக்கு என்ற தனி நாடாக இஸ்ரேல் உருவாக்கம்.
- வரலாற்று ரீதியாக, தற்போதைய இஸ்ரேல் பகுதியே, யூத இன மக்களின் இடமாகும்.
- 10TH இரண்டாம் உலகப்போர்
ஐக்கிய நாடுகள் சபை
- ஐக்கிய நாடுகள் சபை உருவாக காரணமாக இருந்த சாசனம் = அட்லாண்டிக் சாசனம்.
- ஐக்கிய நாடுகளின் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = 1 ஜனவரி 1942.
- ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் எத்தனை நாடுகள் 26 ஜூன் 1945ல் கையெழுத்திட்டன? = 51 நாடுகள்.
- பாதுகாபு சபையில் எத்தனை நிரந்தர நாடுகள் உள்ளன = ஐந்து (அமேரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா).
- ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது = செயலகம்.
- பன்னாட்டு நீதிமன்றம் உள்ள இடம் = நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் அமைந்துள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய துணை அமைப்புகள் = உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக சுகாதார நிறுவனம், ஐ.நா கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு, ஐ.நா குழந்தைகள் நிதி நிறுவனம்.
உலக வங்கி
- “பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள்” என அழைக்கப்படும் அமைப்புகள் = உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு.
- பிரெட்டன் உட்ஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1944.
- உலக வங்கி உருவாக்கப்பட்ட ஆண்டு = 1945.
- பன்னாட்டு நிதியம் உருவாக்கப்பட்ட ஆண்டு = 1945.
- உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகிய இரு அமைப்புகளும் உள்ள இடம் = அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம்.
- உலக வங்கியின் இரண்டு முக்கிய அங்கங்கள் = புனரமைப்பு மற்றும் வளர்சிக்கானப் பன்னாட்டு வங்கி, பன்னாட்டு வளர்ச்சி முகமை.
பன்னாட்டு நிதியமைப்பு
- யாருடைய யோசனையில் உதித்த திட்டமே பன்னாட்டு நிதியமைப்பு ஆகும் = புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களான ஹேரி டேக்ஸ்டர் ஒயிட் மற்றும் மேனார்டு கெய்ன்ஸ்.
- பன்னாட்டு நிதியமைப்பு துவங்கப்பட்ட பொழுது எத்தனை உறுப்பினர்களை கொண்டு துவங்கியது = 29.
புத்தக வினாக்கள்
- ஜப்பான் சரணடைவதாக எப்பொழுது முறைப்படி கையெழுத்திட்டது? = செப்டம்பர் 2, 1945.
- பன்னாட்டு சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்? = உட்ரோ வில்சன்.
- ஜப்பானிய கப்பற்படை, அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது? = க்வாடல்கெனால் போர்.
- அமேரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது? = ஹிரோஷிமா.
- ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்? = யூதர்கள்.
- ஜெர்மனியோடு “மியூனிச் உடன்படிக்கையில்” கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்? = சேம்பர்லின்.
- எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது? = ஜூன் 26, 1945.
- படை நீக்கம் செய்யப்பட ______________ பகுதியை ஹிட்லர் தாக்கினார்? = ரைன்லாந்து.
- இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் ______________ என அழைக்கப்படுகிறது? = ரோம்-பெர்லின்-டோக்கியோ ஆச்சு உடன்படிக்கை.
- 1940ல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ____________ ஆவார்? = சேம்பர்லின்.
- ______________ என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களை கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி ஆகும்? = ரேடார்.
- 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
- பண்டைய இந்தியாவின் வரலாற்று மூலங்கள்
- முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
- 10TH இரண்டாம் உலகப்போர்
- 10TH இரண்டாம் உலகப்போர்