10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
- “இந்திய மறுமலர்ச்சி” (Indian renaissance) ஏற்பட்ட காலம் = பத்தொன்பதாம் நூற்றாண்டு.
- மறுமலர்ச்சி என்பது = ஒரு கருத்தியல் பண்பாட்டு நிகழ்வு ஆகும்.
தமிழ் மறுமலர்ச்சி
- இந்தியாவில் அச்சில் ஏறிய முதல் இந்திய மொழி = தமிழ்.
- தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் = தம்பிரான் வணக்கம்.
- எந்த ஆண்டு தமிழில் முதன் முதலில் தம்பிரான் வணக்கம் எனும் நூல் அச்சிடப்பட்டது = 1578.
- தம்பிரான் வணக்கம் எனும் நூல் எங்கு அச்சிடப்பட்டது = கோவா.
- தமிழகத்தில் முழுமையான முதல் அச்சுக்கூடம் எங்கு முதன் முதலில் நிறுவப்பட்டது = தரங்கம்பாடி.
- எந்த ஆண்டு தமிழகத்தில் முதன் முதலில் அச்சகம் நிறுவப்பட்டது = 1709.
- தமிழகத்தில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை நிறுவியவர் = சீகன்பால்கு.
- திருக்குறள் முதன் முதலில் எந்த ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது = 1812.
- தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்த தமிழ் அறிஞர்கள் = சி.வை.தாமோதரனார், உ.வே.சா.
- பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரனார்.
- தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் = உ.வே.சாமிநாதர்.
- உ.வே.சா பதிப்பித்த முதல் நூல் = சீவக சிந்தாமணி.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
திராவிட மொழி
- புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவியவர் = F.W.எல்லிஸ்.
- W.எல்லிஸ் என்பார் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவிய ஆண்டு = 1816.
- தென்னிந்திய மொழிகள் (திராவிட மொழிகள்) தனிப்பட்ட மொழிக் குடும்பத்தை சார்ந்தவை என்று நிறுவியவர் = F.W.எல்லிஸ்.
- தென்னிந்திய மொழிகள், இந்தோ-ஆரிய குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை என்ற கோட்பாட்டை நிறுவியவர் = F.W.எல்லிஸ்.
- “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்” (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) என்ற நூலின் ஆடிரியர் = ராபர்ட் கால்டுவெல்.
- எந்த ஆண்டு “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்” என்ற நூலை ராபர்ட் கால்டுவெல் எழுதி வெளியிட்டார் = 1856.
- தமிழ் மொழியின் தொன்மையை நிலைநாட்டியவர் = ராபர்ட் கால்டுவெல்.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
தமிழ் அறிஞர்கள்
- “மனோன்மணியம்” என்னும் நாடக நூலின் ஆசிரியர் = பி.சுந்தரனார்.
- நடைமுறையில் இருந்த இந்து பழமைவாதத்தை கேள்விக்குள்ளாக்கியவர் = ராமலிங்க அடிகள்.
- தமிழ் இசை வரலாறு குறித்த நூல்களை எழுதியவர் = ஆபிரகாம் பண்டிதர்.
- பௌத்த மதத்திற்கு புத்தியிர் அளித்த தொடக்ககால முன்னோடி = சிங்காரவேலர்.
பரிதிமாற் கலைஞர்
- பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் = வி.கே. சூரியநாராயண சாஸ்திரி.
- தமிழின் மீது சமஸ்கிருதம் கொண்டிருந்த செல்வாக்கை அடையாளம் கண்ட தொடக்க காலத் தமிழ் அறிஞர்களில் ஒருவர் = பரிதிமாற் கலைஞர்.
- தமிழ் மொழி ஒரு செம்மொழி என முதன் முதலில் கூறியவர் = பரிதிமாற் கலைஞர்.
- சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழியை ஒரு வட்டார மொழி என்று கூறக்கூடாது என முதன் முதலில் வாதிட்டவர் = பரிதிமாற் கலைஞர்.
- தமிழில் முதன் முதலில் “14 வரிச்செய்யுள் வடிவத்தை” (Sonnet) அறிமுகம் செய்தவர் = பரிதிமாற் கலைஞர்.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
மறைமலை அடிகள்
- “தமிழ் மொழியியல் தூயமைவாதத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் = மறைமலை அடிகள்.
- ”தனித்தமிழ் இயக்கத்தை” உருவாக்கியவர் = மறைமலை அடிகள்.
- “தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை” என போற்றப்படுபவர் = மறைமலை அடிகள்.
- “தூய தமிழ் இயக்கம்” என்னும் இயக்கத்தை நிறுவியவர் = மறைமலையடிகள்.
- எந்த சங்க இலக்கிய நூல்களுக்கு மறைமலையடிகள் விளக்கவுரை எழுதியுள்ளார் = பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு.
- மறைமலையடிகள், இளைஞராக இருந்த பொழுது எந்தப் பத்திரிக்கையில் பனி புரிந்தார்? = சித்தாந்த தீபிகை.
- மறைமலையடிகளின் ஆசிரியர்கள் = பி.சுந்தரனார், சோமசுந்தர நாயகர்.
மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம்
- மறைமலையடிகளின் இயற்பெயர் = வேதாச்சலம்.
- மறைமலை அடிகளின் மகள் = நீலாம்பிகை அம்மையார்.
- மறைமலையடிகள் நடத்திய பத்திரிக்கை = ஞானசாகரம்.
- ஞானசாகரம் என்ற தனது பத்திரிக்கையின் பெயரை தமிழில் என்னவாறு பெயர் மாற்றினார் = அறிவுக்கடல்.
- “சமரச சன்மார்க்க சங்கத்தை” நிறுவியவர் = மறைமலை அடிகள்.
- சமரச சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பின் பெயரை, தமிழில் என்னவாறு பெயர் மாற்றம் செய்தார் மறைமலை அடிகள் = பொது நிலைக் கழகம்.
- “பொது நிலைக் கழகம்” என்ற அமைப்பை நடத்தியவர் = மறைமலை அடிகள்.
- தமிழில் இருந்த சம்ஸ்கிருத சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை தொகுத்து அகராதியாக வெளியிட்டவர் = நீலாம்பிகை அம்மையார்.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
திராவிட இயக்கத்தின் எழுச்சி
- “மதராஸ் பிராமணர் அல்லாதோர் சங்கம்” உருவாக்கப்பட்ட ஆண்டு = 1909.
- “மதராஸ் ஐக்கிய கழகம்” என்ற அமைப்பை உருவாக்கியவர் = மருத்துவர் சி.நடேசனார்.
- எந்த ஆண்டு “மதராஸ் ஐக்கிய கழகம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது = 1912.
- மதராஸ் ஐக்கிய கழகம், பின்னாளில் என்னவாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது = மதராஸ் திராவிடர் சங்கம்.
- “திராவிடர் இல்லம்” என்னும் தங்கும் விடுதியை அமைத்தவர் = மருத்துவர் சி.நடேசனார்.
- “திராவிடர் இல்லம்” என்னும் தங்கும் விடுதி எந்த ஆண்டு துவக்கப்பட்டது = 1916.
- திராவிடர் இல்லம் என்னும் தங்கும் விடுதி எங்கு துவங்கப்பட்டது = திருவல்லிக்கேணி.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி)
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் துவங்கப்பட்ட தினம் = 20 நவம்பர் 1916.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை துவக்கிய நபர்கள் = 30 பேர்.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை துவக்கிய முக்கிய நபர்கள் = டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், அலமேலுமங்கை தாயாரம்மாள்.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் துவக்கிய செய்தித்தாள்கள் = தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர்
- 1919 மாண்டோகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில் எந்த ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடைபெற்றது = 1920.
- சென்னை மாகாணத்தில் நடைபெற்ற முதல் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி = நீதிக்கட்சி.
- இந்தியாவில் முதல் அமைச்சரவை அமைத்த கட்சி (the first-ever Indian cabinet) எது = நீதிக்கட்சி.
- இந்தியாவில் முதல் அமைச்சரவை அமைக்கப்பட்ட இடம் எது = மதராஸ் (சென்னை).
- சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் யார் = ஏ.சுப்பராயுலு.
- எந்த ஆண்டு வரை நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்தது = 1937.
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்
- எந்த ஆண்டு சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தாங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன = 1923.
- முதன் முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கு பெற நடவடிக்கை எடுத்த கட்சி = நீதிக்கட்சி.
- எந்த ஆண்டு சென்னை மாகாணத்தில் தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை நீதிக்கட்சி உறுதி செய்தது = 1921.
- இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார் (the first woman legislator in India) = முத்துலட்சுமி அம்மையார்.
- எந்த ஆண்டு முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பின்னர் என்ற சிறப்பை பெற்றார் = 1926.
- சென்னை மாகாணத்தில் “பணியாளர் தேர்வு வாரியம்” அமைக்கப்பட்ட ஆண்டு = 1924.
- ஆங்கிலேய அரசு எந்த ஆண்டு இந்தியாவில் “பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை” உருவாக்கியது = 1929.
- சென்னை மாகாணத்தில் எந்த ஆண்டு இந்துசமய அறநிலையச் சட்டம் இயற்றப்பட்டது = 1926.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
சுயமரியாதை இயக்கம்
- சுயமரியாதை இயக்கத்தை துவக்கியவர் = பெரியார்.
- ஈ.வெ.ராமசாமியின் பெற்றோர் = வெங்கட்டப்பர், சின்னத்தாயம்மாள்.
- ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி வகித்துள்ளார்.
- வைக்கம் எதிர்ப்புப் போராட்டங்களில் தொடக்கக் காலத்தில் பெரும் பங்காற்றியவர் = ரோசாப்பூ துரை என்று அழைக்கப்படும் ஜார்ஜ் ஜோசப்.
- பின்னர் வைக்கம் போராட்டத்திற்கு பெரியார் தலைமை ஏற்று நடத்தியதால், இவர் “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டார்.
- பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவக்கிய ஆண்டு = 1925.
- பெரியார் நடத்திய செய்தித்தாள்கள் = குடியரசு (1925), ரிவோல்ட் (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935).
- சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழ் = குடியரசு.
- தந்தை பெரியார் முதன் முதலில் துவக்கிய இதழ் = குடியரசு.
- பெரியார் தனது கட்டுரைகளை எந்த “புனைப்பெயரில்” எழுதினார் = சித்திரபுத்திரன்.
- பெரியார் யாருடன் மிக நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார் = சிங்காரவேலர்.
- “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste) என்னும் நூலின் ஆசிரியர்= அம்பேத்கர்.
- எந்த ஆண்டு அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” என்னும் நூல் வெளிவந்தது =
- அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” என்னும் நூலை தமிழில் பதிப்பிதவர் யார் = பெரியார்.
- எந்த ஆண்டு அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” என்னும் நூலை பெரியார் பதிப்பித்து வெளியிட்டார் = 1936.
- எந்த ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது = 1937.
- தமிழுக்கு மேலாக ஹிந்தியை அறிமுகம் செய்வது திராவிடர்களுக்கான வேலை வாய்ப்பை மறுப்பதாக அமையும் என்று கூறியவர் யார் = பெரியார்.
- எந்த ஆண்டு நீதிக்கட்சி, “திராவிடர் கழகம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது = 1944.
- தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தவர் = இராஜாஜி.
- குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக பதவி விலகியவர் = இராஜாஜி.
- பெரியார் தன்னுடைய எந்த வயதில் காலமானார் = 94 வயதில்.
- எந்த ஆண்டு பெரியார் இயற்கை எய்தினார் = 1973.
- எந்த ஆண்டு முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது = 1929.
- பெண்களை “திருமணம் செய்து கொடுப்பது” என்ற வார்த்தைக்கு பதிலாக பெரியார் பயன்படுத்திய வார்த்தை = வாழ்க்கைத் துணை.
- பெரியார் எந்த நூலில் இருந்து “வாழ்க்கைத் துணை” என்ற வார்த்தையை எடுத்து பயன்படுத்தினார் = திருக்குறள்.
- “பெண் ஏன் அடிமையானாள்?” என்னும் நூலின் ஆசிரியர் யார் = பெரியார்.
- எந்த ஆண்டு தமிழ்நாடு இந்து வாரிசுரிமை சீர்திருத்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது = 1989.
- எந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பெண்களுக்கு முன்னோர் சொத்தில் சம உரிமை உண்டு என்ற உரிமை நிலை நாட்டப்பட்டது = தமிழ்நாடு இந்து வாரிசுரிமை சீர்திருத்தச் சட்டம் 1989.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
இரட்டைமலை சீனிவாசன்
- எந்த ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் பிறந்தார் = 1859.
- இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த ஊர் = காஞ்சிபுரம்.
- எந்த ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு ராவ்சாகிப் என்ற பட்டம் வழங்கப்பட்டது =
- எந்த ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு ராவ் பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்டது =
- எந்த ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு திவான் பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்டது =
- “ராவ்சாகிப்” என்று அழைக்கப்பட்டவர் யார் = இரட்டைமலை சீனிவாசன்.
- “ராவ் பகதூர்” என்று அழைக்கப்பட்டவர் யார் = இரட்டைமலை சீனிவாசன்.
- “திவான் பகதூர்” என்று அழைக்கப்பட்டவர் யார் = இரட்டைமலை சீனிவாசன்.
- இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதை நூல் யாது = ஜீவிய சரித்திர சுருக்கம்.
- “ஜீவிய சரித்திர சுருக்கம்” என்பது யாருடைய சுயசரிதை நூல் ஆகும் = இரட்டைமலை சீனிவாசன்.
- எந்த ஆண்டு இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதை நூலான “ஜீவிய சரித்திர சுருக்கம்” என்னும் நூல் வெளியிடப்பட்டது = 1939.
- முதன் முதலாக எழுதப்பட்ட சுயசரிதை நூல்களில் ஒன்று = இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதை நூல் “ஜீவிய சரித்திர சுருக்கம்”.
- ஆதி திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை உருவாக்கியவர் = இரட்டைமலை சீனிவாசன்.
- எந்த ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் “ஆதி திராவிட மகாஜன சபை” என்ற அமைப்பை நிறுவினார்= 1893.
- இரட்டைமலை சீனிவாசன் எந்த அமைப்பின் தலைவராக பணியாற்றினார் = ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் கூட்டமைப்பு.
- அம்பேத்காருக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட தமிழர் யார் = இரட்டைமலை சீனிவாசன்.
- லண்டனில் நடைபெற்ற எந்த வட்ட மேஜை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் கலந்து கொண்டார் = முதல் மற்றும் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார்.
- லண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் யார் = இரட்டைமலை சீனிவாசன்.
- பூனா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது = 1932.
- பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தமிழர் யார் = இரட்டைமலை சீனிவாசன்.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
ம சிங்காரவேலர்
- பெளத்த சமய முன்னோடி என அழைக்கப்படுபவர் = சிங்காரவேலர்.
- பௌத்த மதத்திற்கு புத்தியிர் அளித்த தொடக்ககால முன்னோடி = சிங்காரவேலர்.
- தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதி என அழைக்கப்படுபவர் யார் = சிங்காரவேலர்.
- தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என அழைக்கப்படுபவர் யார் = சிங்காரவேலர்.
- தமிழ்நாட்டின் முதல் பொதுவுடைமைவாதி என அழைக்கப்படுபவர் யார் = சிங்காரவேலர்.
- தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் என அழைக்கப்படுபவர் யார் = சிங்காரவேலர்.
- பெரியார் யாருடன் மிக நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார் = சிங்காரவேலர்.
- சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளின் முன்னோடி (pioneer in the labour movement activities in the Madras presidency) என்று அழைக்கப்படுபவர் யார் = சிங்காரவேலர்.
- ம.சிங்காரவேலர் தனது இளமை காலத்தில் எந்த மதத்தை பரிந்துரை செய்தார் = பௌத்தம்.
- காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரின் கருத்துக்களை தமிழில் வடித்தவர் யார் = சிங்காரவேலர்.
- எந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதன் முதலாக மே தினம் கொண்டாடப்பட்டது = 1923.
- தமிழ்நாட்டில் முதன் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவர் யார் = சிங்காரவேலர்.
- தொழிலாளன் (Worker) என்ற பத்திரிக்கையை வெளியிட்டவர் யார் = ம.சிங்காரவேலர்.
- ம.சிங்காரவேலர் வெளியிட்ட பத்திரிக்கை எது = தொழிலாளன் (Worker).
- தொழிலாளன் (Worker) என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் யார் = ம.சிங்காரவேலர்.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
மயிலை சின்னத்தம்பி ராஜா
- எம்.சி.ராஜா என்று அழைக்கப்படுபவர் = மயிலை சின்னத்தம்பி ராஜா.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் = மயிலை சின்னத்தம்பி ராஜா.
- சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து சட்ட மேலவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் (the first elected Legislative Council Member from the depressed classes in Madras province) யார் = மயிலை சின்ன தம்பி ராஜா.
- அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் (All India Depressed Classes Association) என்ற அமைப்பை உருவாக்கியவர் யார் = மயிலை சின்னத்தம்பி ராஜா.
- எந்த ஆண்டு அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் (All India Depressed Classes Association) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது = 1928.
- சென்னை மாகாண சட்டசபையில் நீதிக்கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டவர் = மயிலை சின்னத்தம்பி ராஜா.
தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள்
- சென்னை மாகாணத்தில் தொழிலாளர் சங்கங்கள் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டவர்களில் முக்கியமாணவர்கள் = பி. பி. வாடியா, சிங்காரவேலர் மற்றும் திரு.வி.கல்யாண சுந்தரனார்.
- இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்ட இடம் = சென்னை மாகாணம்.
- எந்த ஆண்டு இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது = 1918.
- இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் தொழில் சங்கம் எது = சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union).
- எந்த ஆண்டு சென்னை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது = 1918.
- இந்தியாவில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் = சென்னை தொழிலாளர் சங்கம்.
- அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது = பம்பாய்.
- அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு எப்பொழுது நடைபெற்றது = 31 அக்டோபர் 1920.
- சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளின் முன்னோடி (pioneer in the labour movement activities in the Madras presidency) என்று அழைக்கப்படுபவர் யார் = சிங்காரவேலர்.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
ஆபிரகாம் பண்டிதர்
- பழந்தமிழர் இசை முறையை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றவர் யார் = ஆபிரகாம் பண்டிதர்.
- தமிழ் இசை வரலாற்றை முறையாக கற்று ஆய்ந்தவர் யார் = ஆபிரகாம் பண்டிதர்.
- “தஞ்சாவூர் சங்கீத வித்யா மகாஜன சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார் = ஆபிரகாம் பண்டிதர்.
- எந்த ஆண்டு தஞ்சாவூர் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது = 1912.
- ஆபிரகாம் பண்டிதரால் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பு எங்கு நிறுவப்பட்டது = தஞ்சாவூர்.
- தமிழிசை இயக்கத்தின் கருமூலம் (Kernel of the Tamil Isai Movement / Kernel of the Tamil Music Movement) என அழைக்கப்படுவது எது = ஆபிரகாம் பண்டிதரால் துவக்கப்பட்ட தஞ்சாவூர் சங்கீத வித்யா மகாஜன சங்கம்.
- எந்த ஆண்டு முதல் தமிழிசை மாநாடு நடைபெற்றது = 1943. (குறிப்பு = இணையத்தில் முதல் தமிழிசை மாநாடு 1941 என குறிப்பிடப்பட்டுள்ளது).
- முதல் தமிழிசை மாநாடு எங்கு நடைபெற்றது = சிதம்பரம்.
இந்திய பெண்கள் சங்கம்
- எந்த ஆண்டு இந்திய பெண்கள் சங்கம் (Women’s India Association) உருவாக்கப்பட்டது = 1917.
- இந்திய பெண்கள் சங்கம் எங்கு உருவாக்கப்பட்டது = சென்னை அடையாறு.
- சென்னை அடையாரில் இந்திய பெண்கள் சங்கத்தை உருவாக்கியவர்கள் யார் = அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரேட் கசின்ஸ்.
- எந்த ஆண்டு அகில இந்திய பெண்கள் மாநாடு நடைபெற்றது = 1927.
- அகில இந்திய பெண்கள் மாநாட்டை நடத்திய அமைப்பு = இந்திய பெண்கள் சங்கம்.
- பெண் கல்வி குறித்த பிரச்சனைகளை கையாள 1927இல் நடத்தப்பட்ட மாநாடு எது = அகில இந்திய பெண்கள் மாநாடு.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்
- தேவதாசி ஒழிப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் = டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.
- இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார் (the first woman legislator in India) = முத்துலட்சுமி அம்மையார்.
- எந்த ஆண்டு முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பின்னர் என்ற சிறப்பை பெற்றார் = 1926.
- எந்த ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது = 1947.
- மதராஸ் தேவதாசி (அர்ப்பணிப்பை தடுத்தல்) சட்டம் (Madras Devadasis (Prevention of Dedication) Act) நிறைவேற்றப்பட்ட ஆண்டு = 1947.
- எந்த ஆண்டு “சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்கு பெண்கள் அர்பணிக்கப்படுவதை தடுப்பது” என்ற மசோதா அறிமுகம் செய்யப்பட்டது = 1930.
- 1930 இல் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்கு பெண்கள் அர்பணிக்கப்படுவதை தடுப்பது என்று மசோதாவை அறிமுகம் செய்தவர் = முத்துலட்சுமி அம்மையார்.
- எந்த ஆண்டு தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டுவரப்பட்டது = 1930.
- எந்த ஆண்டு தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது = 1947.
- 1930 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேவதாசி ஒழிப்பு மசோதா சட்டமாக நிறைவேற 17 ஆண்டுகள் ஆனது.
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
புத்தக வினாக்கள்
- 1709இல் தரங்கம்பாடியில் __________ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்? = சீகன்பால்கு.
- 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை _____________ நிறுவினார்? = இரட்டைமலை சீனிவாசன்.
- இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் _________ இல் உருவாக்கப்பட்டது? = 1918.
- அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய _____________ நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது? = பணியாளர் தேர்வு வாரியம்.
- சென்னை மாகாணத்தில். ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து முதன் முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்? = எம்.சி.ராஜா.
- முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி _______ ஆகும்? = தமிழ்.
- புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ______ ஆவார்? = F.W.எல்லிஸ்.
- _____________ தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்? = மறைமலை அடிகள்.
- தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ___________ ஆகும்? = நீதிக்கட்சி.
- சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் ____________ என மாற்றம் பெற்றது? = பரிதிமாற் கலைஞர்.
- இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ______________ ஆவார்? = டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.
- இந்தியாவில் முதன்மையானவர்கள்
- List of First in India
- 2024 அக்டோபர் மாத முக்கிய நாட்கள்
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
- 10TH தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
- IMPORTANT DAYS IN OCTOBER 2024
- செப்டம்பர் மாத முக்கிய நாட்கள்
- IMPORTANT DAYS IN SEPTEMBER 2024
- 10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
- 10TH தேசியம் காந்திய காலகட்டம்