10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Table of Contents

10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

  • ஆங்கில காலனி ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்தது.
  • பதினெட்டாம் நூற்றாண்டில் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்தனர்.
  • 1806ல் வேலூர் கோட்டையில் இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சியை நடத்தினர்.
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

சென்னைவாசிகள் சங்கம்

  • தென்னிந்தியாவில் தொடங்கப்பெற்ற காலத்தால் முற்பட்ட அமைப்பு = சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association–MNA).
  • சென்னைவாசிகள் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு = 1852.
  • சென்னைவாசிகள் சங்கத்தை நிறுவியவர்கள் = கஜூலு லட்சுமிநரசு, சீனிவாசனார்.
  • இவ்வமைப்பில் வணிகர்களே அதிகளவு இருந்தனர்.
  • கிறித்துவ சமய பரப்பாளர்களை எதிர்த்தனர் இச்சங்கவாசிகள்.
  • விவசாயிகளுக்கு எதிரான “சித்திரவதை” அடக்குமுறைக்கு எதிராக போராடிய சங்கம் = சென்னைவாசிகள் சங்கம்.
  • எந்த அமைப்பின் போராட்டத்தின் பயனாக “சித்திரவதை ஆணையம்” (Torture Commission) அமைக்கப்பட்டது = சென்னைவாசிகள் சங்கம்.
  • எந்த அமைப்பு மேற்கொண்ட போராட்டத்தின் பயனாக விவசாயிகளுக்கு எதிரான “சித்திரவதைச் சட்டம்” (Torture Act) ஒழிக்கப்பட்டது = சென்னைவாசிகள் சங்கம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் (the first Indian Judge of the Madras High Court) = டி.முத்துசாமி.
  • எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார் = 1877.

தேசியவாதப் பத்திரிக்கைகளின் தொடக்கம்

  • “தி இந்து” செய்திப் பத்திரிக்கையை தொடங்கியவர்கள் = ஜி.சுப்பிரமணியம், எம்.வீரராகவாச்சாரி.
  • எந்த ஆண்டு “தி இந்து” பத்திரிக்கை துவங்கப்பட்டது = 1878.
  • தமிழில் “சுதேசமித்திரன்” என்ற தேசிய பருவ இதழை (Tamil nationalist periodical) துவங்கியவர் = ஜி.சுப்பிரமணியம்.
  • எந்த ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிக்கை துவங்கப்பட்டது = 1891.
  • எந்த ஆண்டு சுதேசமித்திரன் இதழ், நாளிதழாக மாறியது = 1899.
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

சென்னை மகாஜன சபை

  • தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு = சென்னை மகாஜன சனகம்.
  • எந்த ஆண்டு சென்னை மகாஜன சங்கம் துவங்கப்பட்டது = 1884 மே 16ஆம் தேதி.
  • சென்னை மகாஜன சபையை துவக்கியவர்கள் = எம்.வீரராகவாச்சாரி, பி.அனந்தாச்சாரலு, பி.ரங்கையா.
  • சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் = பி.ரங்கையா.
  • சென்னை மகாஜன சபையின் முதல் செயலாளர் = பி.அனந்தாச்சாரலு.
  • குடிமைப் பணிகளுக்காண தேர்வுகளை இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்த அமைப்பு = சென்னை மகாஜன சபை.
  • எந்த அமைப்பின் பல கோரிக்கைகளை பிற்காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், தங்கள் கோரிக்கைகளில் வைத்தன = சென்னை மகாஜன சபை.

மிதவாதக் கூட்டம்

  • தமிழ்நாட்டின் முக்கிய தொடக்கக்கால மிதவாத தலைவர்கள் = வி.எஸ்.சீனிவாசனார், பி.எஸ்.சிவசாமி, வி.கிருஷ்ணசாமி, டி.ஆர்.வெங்கடரமனார், ஜி.ஏ.நடேசன், டி.எம்.மாதவராவ், எஸ்.சுப்பிரமணியார்.
  • எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் நடைபெற்றது = 1885.
  • இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது = பம்பாய்.
  • பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் எத்தனை பேர் கலந்துக் கொண்டனர் = 72 பேர்.
  • பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட 72 பிரதிநிதிகளில் எத்தனை பேர் சென்னையை சேர்த்தவர்கள் = 22 பேர்.
  • எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது = 1886.
  • இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது கூட்டம் எங்கு நடைபெற்றது = கல்கத்தா.
  • இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் = தாதாபாய் நௌரோஜி.
  • இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது கூட்டம் எங்கு நடைபெற்றது = மதராஸ் (சென்னை) ஆயிரம் விளக்கு (மக்கிஸ் தோட்டம்).
  • இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது கூட்டம் எப்பொழுது நடைபெற்றது = 1887.
  • சென்னையில் நடைபெற்ற மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் = பத்ருதீன் தியாப்ஜி.
  • சென்னையில் நடைபெற்ற மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மொத்தம் எத்தனை பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர் = 607 பேர்.
  • சென்னையில் நடைபெற்ற மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் சென்னை மாகாணத்தை சேர்ந்த எத்தனை பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர் = 362 பேர்.
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

சுதேசி இயக்கம்

  • வங்கப் பிரிவினை நடைபெற்ற ஆண்டு = 1905.
  • சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்த நிகழ்வு = வங்கப் பிரிவினை.
  • வ.உ.சிதம்பரனார் துவங்கிய கப்பல் நிறுவனம் = சுதேசி நீராவி கப்பல் நிறுவனம்.
  • வ.உ.சிதம்பரனார் வாங்கிய இரண்டு கப்பல்கள் = காலியா, லாவோ.
  • வ.உ.சிதம்பரனார் எந்த இரு பகுதிகளுக்கு இடையே தனது சுதேசி கப்பலை ஓட்டினார் = தூத்துக்குடி முதல் இலங்கையின் கொழும்பு நகர் வரை.
  • நூற்பாலை தொழிலாளர் போராட்டத்திற்கு சுப்ரமணிய சிவாவிற்கு உறுதுணையாக இருந்தவர் = வ.உ.சிதம்பரனார்.
  • “கோரல் நூற்பாலை” போராட்டம் எங்கு நடைபெற்றது = திருநெல்வேலி.
  • கோரல் நூற்பாலை போராட்டம் நடைபெற்ற ஆண்டு = 1908.
  • கோரல் நூற்பாலை போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் = சுப்ரமணிய சிவா.
  • யாரின் விடுதலை விழாவை கொண்டாடியதற்காக வ.உ.சியும், சுப்ரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர் = பிபின் சந்திரபால்.

தமிழ்நாட்டில் புரட்சிகர தேசியவாதிகளின் செயல்பாடுகள்

  • தமிழ்நாட்டின் புரட்சிகர தேசியவாதிகளின் புகலிடமாக இருந்த பகுதி = பாண்டிச்சேரி.
  • புரட்சிகர நடவடிக்கை தொடர்பான பயிற்சி எங்கு வழங்கப்பட்டது = லண்டனில் இருந்த “இந்தியா ஹவுஸ்” மற்றும் பாரிஸ் நகரில்.
  • புரட்சிகர நூல்களை பாண்டிச்சேரி வழியாக சென்னையில் விநியோகம் செய்தவர்கள் = எம்.பி.டி.ஆச்சார்யா, வி.வி.சுப்ரமணியனார், டி.எஸ்.எஸ்.ராஜன்.

ஆஷ் கொலை

  • “பாரத மாதா சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கியவர் = நீலகண்ட பிரமச்சாரி.
  • எந்த ஆண்டு பாரத மாதா சங்கம் துவங்கப்பட்டது = 1904.
  • பாரத மாதா சங்கத்தின் நோக்கம் = ஆங்கில அதிகாரிகளை கொல்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை தூண்டுவது.
  • எந்தப் பகுதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் = செங்கோட்டை.
  • எந்த நாளில் திருநெல்வேலி ஆட்சியர் ராபர்ட் ஆஷ் கொல்லப்பட்டார் = 17 ஜூன் 1911.
  • திருநெல்வேலி ஆட்சியர் ராபர்ட் ஆஷை கொன்றவர் = வாஞ்சிநாதன்.
  • வாஞ்சிநாதன் திருநெல்வேலி ஆட்சியர் ராபர்ட் ஆஷை எங்கு துப்பாக்கியால் சுட்டு கொன்றார் = மணியாச்சி ரயில் நிலையம்.
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம்

  • “தன்னாட்சி இயக்கத்தை” துவக்கியவர் = அன்னிபெசன்ட் அம்மையார்.
  • அன்னிபெசன்ட் அம்மையார் எந்த நாட்டை சேர்ந்தவர் = அயர்லாந்து.
  • தன்னாட்சி இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு = 1916.
  • தானாட்சி இயக்கத்தை தேசய அளவில் கொண்டு செல்ல அன்னிபெசன்ட் அம்மையாருக்கு உதவியவர்கள் = ஜி.எஸ்.அருண்டேல், பி.பி.வாடியா மற்றும் சி.பி.ராமசாமி.
  • அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய இதழ்கள் = நியூ இந்தியா (New India), காமன் வீல் (Commonweal).
  • “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” (Better bullock carts and freedom than a train deluxe with subjection) என்று கூறியவர் = அன்னிபெசன்ட் அம்மையார்.
  • 1910 ஆம் ஆண்டு பத்திரிக்கைச் சட்டத்தின் படி, பெருமளவு பிணையத் தொகையை கட்ட யாரை ஆங்கில அரசு வலியுறுத்தியது = அன்னிபெசன்ட் அம்மையாரை.
  • அன்னிபெசன்ட் அம்மையார் எழுதிய இரண்டு புத்தகங்கள் = விடுதலை பெற இந்தியா எப்படி துயருற்றது (How India wrought for Freedom), இந்தியா: ஒரு தேசம் (India: A Nation).
  • “சுயாட்சி” பற்றி துண்டுப் பிரசுரங்களை எழுதி வெளியிட்டவர் (pamphlet on self-government) = அன்னிபெசன்ட் அம்மையார்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்

  • தமிழகத்தின் பிராமணர் அல்லாதோர் சேர்ந்து தங்களுக்காக உருவாக்கிய சங்கம் = சென்னை திராவிடர் கழகம் (Madras Dravidian Association).
  • எந்த ஆண்டு “சென்னை திராவிடர் கழகம்” (Madras Dravidian Association) உருவாக்கப்பட்டது = 1912.
  • சென்னை திராவிடர் கழகத்தின் (Madras Dravidian Association) செயலாளராக இருந்தவர் = சி.நடேசனார்.
  • சென்னை மாகாணத்தில் எந்த ஆண்டு “திராவிடர் சங்க தங்கும் விடுதி” நிறுவப்பட்டது = 1916 ஜூன்.
  • திராவிடர் சங்க தங்கும் விடுதியை கட்டியவர் = சி.நடேசனார்.
  • பிராமணர் அல்லாதோரின் நலன்களை மேம்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு = தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian Liberal Federation – SILF).
  • என்ப்போளுது தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian Liberal Federation – SILF) நிறுவப்பட்டது = 1916 நவம்பர்.
  • தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian Liberal Federation – SILF) அமைப்பை நிறுவியவர்கள் = பி.தியாகராயர், டாக்டர் சி.எம்.நாயர், சி.நடேசனார்.

நீதிக்கட்சி அமைச்சரவை

  • 1920ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி எத்தனை இடங்களை வென்றது = 98 இடங்களில் 63 இடங்களை வென்றது.
  • சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் யார்? = ஏ.சுப்பராயலு.
  • 1923ல் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த கட்சி = நீதிக்கட்சி.
  • 1923 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றவர் = பனகல் அரசர்.
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

ரௌலட் சத்தியாக்கிரகம்

  • கொடூரமான குழப்பவாத புரட்சிக் குற்றச் சட்டம் (The Anarchical and Revolutionary Crimes Act of 1919) என அழைக்கப்பட்ட சட்டம் = ரௌலட் சட்டம்.
  • “கருப்புச் சட்டம்” என்று அழைக்கப்பட்ட சட்டம் = ரௌலட் சட்டம்.
  • ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு = 1919.
  • ரௌலட் சட்டத்திற்கு எதிராக காந்தியடிகள் மேற்கொண்ட நடவடிக்கை = சத்தியாக்கிரகம்.
  • ரௌலட் சட்டத்திற்கு எதிராக காந்தியடிகள் சென்னை மெரினா கடற்கரையில் உரையாற்றிய தினம் = 18 மார்ச் 1919.
  • எப்பொழுது “சென்னை சத்தியாகிரக சபை” நிறுவப்பட்டது = 6 ஏப்ரல் 1919.
  • மெரினா கடற்கரையில் தொழிலாளர்களுக்காக கூட்டத்தை நடத்தியவர் = திரு.வி.க, வ.உ.சி.
  • “ரோசாப்பு துரை” என்று மதுரை மக்களால் அழைக்கப்பட்டவர் = ஜார்ஜ் ஜோசப்.
  • தமிழ்நாட்டில் “கிலாபத் நாள்” எப்பொழுது கடைபிடிக்கப்பட்டது = 17 ஏப்ரல் 1920.
  • தமிழ்நாட்டில் கிலாபத் இயக்க பொதுக்கூட்டம் எங்கு நடைபெற்றது = ஈரோடு.
  • தமிழ்நாட்டில் கிலாபத் இயக்க எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத் திகழ்ந்த பகுதி = வாணியம்பாடி.

ஒத்துழையாமை இயக்கத்தில் தமிழ்நாடு

  • தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்கள் = ராஜாஜி, பெரியார்.
  • முல்சிம் லீக் கட்சியின் சென்னை கிளையை நிறுவியவர் = யாகுப் ஹசன்.
  • யாகுப் ஹசன் யாருடன் நெருக்கமாக செயல்பட்டார்= ராஜாஜியுடன்.
  • தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்த போராட்டம் = கள்ளுக்கடை மறியல் போராட்டம்.
  • எந்த நிகழ்வின் காரணமாக ஒத்துழையாமை இயக்க போராட்டம் நிறுத்தப்பட்டது = செளரி சௌரா நிகழ்வு.
  • சுயராஜ்ஜியக் கட்சியை நிறுவியவர்கள் = சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு.
  • தமிழ்நாட்டில் சுயராஜ்ஜியக் கட்சிக்கு தலைமை தாங்கியோர் = சத்தியமூர்த்தி, எஸ்.சீனிவாசனார்.
  • 1926 ஆம் ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி = சுயராஜ்ஜியக் கட்சி.
  • 1926ல் சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைத்தவர் = பி.சுப்பராயன்.
  • 1930 தேர்தலில் சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைத்த கட்சி = நீதிக்கட்சி.
  • நீதிக்கட்சி 1930 முதல் எந்த ஆண்டு வரை ஆட்சி செய்தது = 1937.

சைமன் குழு புறக்கணித்தல்

  • 1919 இந்திய அரசுச் சட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையம் = இந்திய சட்டப்பூர்வ ஆணையம்.
  • இந்திய சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு = 1927.
  • யாருடைய தலைமையில் 1927 ஆம் ஆண்டு இந்திய சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்பட்டது = சர் ஜான் சைமன்.
  • இந்திய சட்டப்பூர்வ ஆணையத்தில் இந்தியர்கள் ஒருவரும் இடம்பெறாததால் இக்குழுவை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்தது.
  • சென்னையில் யாருடைய தலைமையில் “சைமன் குழு எதிர்ப்பு பிரசாரக் குழு” (Simon Boycott Propaganda Committee) அமைக்கப்பட்டது = சத்தியமூர்த்தி.
  • சைமன் குழு சென்னை வந்த தினம் = 19 பிப்ரவரி 1929.

நீல் சிலை அகற்றும் போராட்டம் 1927

  • 1857 பெரும் புரட்சியின் பொழுது நடைபெற்ற “கான்பூர் படுகொலை” நிகழ்வில் பல ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
  • இதனால் சென்னையை சேர்ந்த காலாட்படை வீரரான ஜேம்ஸ் நீல், இந்தியர்கள் இடையே மிகவும் கொடூரமாக நடந்துக் கொண்டார்.
  • ஜேம்ஸ் நீல் நினைவாக அவரின் சிலை வைக்கப்பட்ட இடம் = சென்னை மவுன்ட்ரோடு.
  • நீல் சிலை அகற்றும் போராட்டம் நடைபெற்ற ஆண்டு = 1927.
  • நீல் சிலை அகற்றப்பட்ட ஆண்டு = 1937.
  • நீல் சிலையை அகற்றியவர் = ராஜாஜி.

தமிழகத்தில் சட்ட மறுப்பு இயக்கம்

  • எந்த மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் முழுமையான சுதந்திரமே இலக்கு என அறிவிக்கப்பட்டது = சென்னை மாநாடு (1927).
  • எங்கு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுதந்திரம் (பூரண சுயராஜ்ஜியம்) என்பதே இலக்கு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது = லாகூர் மாநாடு (1929).
  • 1930 ஜனவரி 26 ஆம் நாள் எந்த நதிக்கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் பொருட்டு தேசியக் கோடியை ஜவஹர்லால் நேரு ஏற்றினார் = ராவி நதிக்கரை.
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்

  • யாருடைய தலைமையில் சென்னைக்கு அருகே “உதயவனம்” என்ற இடத்தில் சத்தியாகிரகிகள் முகாமை அமைத்தனர்? = டி.பிரகாசம், கே.நாகேஸ்வர ராவ்.
  • வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் யாரின் தலைமையில் நடைபெற்றது = ராஜாஜி.
  • வேதாரண்யம் உப்பு சத்யாகிரக போராட்டம் துவங்கிய தினம் = 13 ஏப்ரல் 1930.
  • வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்ட பயணத்தின் பொழுது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” என்ற சிறப்புப் பாடலை பாடியவர் = நாமக்கல் கவிஞர்.
  • போராட்டக்காரர்கள் வேதாரண்யத்தை அடைந்த தினம் = 28 ஏப்ரல் 1930.
  • வேதாரண்யத்தில் உப்பு சட்டத்தை மீறி உப்பை எடுத்தவர்கள் மொத்தம் = ராஜாஜியுடன் 12 தொண்டர்கள்.
  • வேதாரண்யத்தில் உப்பு சட்டத்தை மீறிய பெண் சத்தியாகிரகி = ருக்மணி லட்சுமிபதி.
  • உப்பு சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி (the first woman to pay penalty for violation of salt laws) = ருக்மணி லட்சுமிபதி.
  • வேதாரண்ய உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் = ராஜாஜி, டி.எஸ்.எஸ்.ராஜன், திருமதி ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், சி.சாமிநாதர், கே.சந்தானம்.
  • 26 ஜனவரி 1932 ஆம் ஆண்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கோடியை ஏற்றியவர் = ஆரியா எனப்படும் பாஷ்யம்.

கொடிகாத்த குமரன்

  • திருப்பூர் குமரன் என அழைக்கப்பட்டவர் = K.S.R.குமாரசாமி.
  • திருப்பூர் குமரன் எவ்வாறு அழைக்கப்படுகிறார் = கொடி காத்த குமரன்.
  • கொடிகாத்த குமரன் இறந்த தினம் = 11 ஜனவரி 1932.

தமிழகத்தில் முதல் காங்கிரஸ் அமைச்சரவை

  • தமிழகத்தின் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் = இராஜாஜி.
  • எந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் முதன் முறையாக ஆட்சியை பிடித்தது = 1937.
  • தமிழகத்தில் மதுவிலக்கை பரிசோதனை முறையில் அறிமுகம் செய்தவர் = இராஜாஜி.
  • தமிழகத்தில் மது விலக்கு பரிசோதனை முறையில் முதன் முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட்டது = சேலம்.
  • தமிழகத்தில் “விற்பனை வரியை” முதன் முதலில் அறிமுகம் செய்தவர் = ராஜாஜி.
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

  • யாருடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது = ராஜாஜி ஆட்சிக்காலத்தில்.
  • தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பிற்காக மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்டவர் யார்? = பெரியார்.
  • இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கு நடைபெற்றது = சேலம்.
  • இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தியவர் = பெரியார்.
  • இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறையில் மரணம் அடைந்தவர்கள் = தாளமுத்து, நடராசன்.
  • கடும் எதிர்ப்பின் விளைவாக ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகியது.
  • சென்னை மாகாண ஆளுநர் இந்தி கட்டாயப் பாடம் என்பதை நீக்கினார்.

தமிழகத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம்

  • வெள்ளையனே வெளியேறு தீர்மானம் எப்பொழுது நிறைவேற்றப்பட்டது = 8 ஆகஸ்ட் 1932.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு = 1932.
  • எந்த போராட்டத்தின் பொழுது காந்தியடிகள் “செய் அல்லது செத்துமடி” என்று முழங்கினார் = வெள்ளையனே வெளியேறு.

புத்தக வினாக்கள்

  1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? = பி.ரங்கையா.
  2. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது? = சென்னை.
  3. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்? = அன்னிபெசன்ட்.
  4. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்? = எஸ்.சத்தியமூர்த்தி.
  5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்? = டி.பிரகாசம்.
  6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது? = சேலம்.
  7. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி __________ ஆவார்? = டி.முத்துசாமி.
  8. _____________ எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்? = பாரத மாதா சங்கம்.
  9. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ___________ ? = ராஜாஜி.
  10. ________________ முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்? = யாகுப் ஹசன்.
  11. 1932 ஜனவரி 26இல் __________ புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்? = ஆர்யா எனப்படும் பாஷ்யம்.

 

 

Leave a Reply