10th Samacheer Kalvi History Study Material in Tamil – 10

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு

  • புலித்தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுதம்பி, போன்ற மாபெரும் தலைவர்கள் முக்கியப் பங்காற்றினர்.
  • ஜி. சுப்பிரமணிய அய்யர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சி. இராசகோபாலாசாரி, பெரியார் இ.வே. இராமசாமி, திருப்புர் குமரன், கே. காமராஜ் மற்றும் பலர் சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றி இந்திய விடுதலைக்குப் பாடுபட்டனர்.
  • 1806 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் நாள் வேலூர் கோட்டையில் திப்புவின் மகள் திருமணம் நடைபெற்றது.
  • இத்திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வீரர்கள் வேலூர் கோட்டையில் கூடினர். நள்ளிரவில் இங்கு குடியிருந்து வீரரர்கள் கிளர்;ச்சியில் ஈடுபட்டு, ஆங்கிலேயர்களைத் தாக்கி கோட்டையைக் கைப்பற்றினர். திப்புவின் கொடி, வேலூர் கோட்டையில் ஏற்றப்பட்டது.
  • திப்புவின் இரண்டாவது மகன் பதேக் ஹைதர் அரசராக அறிவிக்கப்பட்டார்.

சென்னை மகாஜன சபை

  • முதல் அமைப்பு சென்னை சுதேசி சங்கம் இதனை 1852 ஆம் ஆண்டு ஹார்லி, இலட்சுமி நரசுச் கெட்டி மற்றும் சீனிவாசப்பிள்ளை ஆகியோர் நிறுவினர்.
  • 1884 ஆம் ஆண்டு சென்னை சுதேசி சங்கம் சென்னை மகாஜன சபையுடன் இணைக்கப்பட்டது. எஸ். இராமசாமி முதலியார், பி. அனந்த சாருலு, மற்றும் இரங்கய்யா நாயுடு ஆகியோர் இதனை ஏற்படுத்தினர்.
  • சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பி.
  • இரங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பி. இரங்கையா நாயுடு, 1930 ஆம் ஆண்டு உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை சென்னையில் ஜார்ஜ் டவுன், யானைக்கவுனி, உயர்நீதிமன்றம் மற்றும் கடற்கரைப்பகுதியில் தலைமையேற்று நடத்தியது.
  • 1896 அக்டோபர் 24 ம் நாள் தேசதந்தை மகாத்மா காந்தி சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார்.
  • இச்சபையின் பொன்விழா கொண்டாட்டத்தில் ஜவஹர்லால்நேரு கலந்து கொண்டார்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை

  • செக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டிய தமிழன் என்றும் அழைக்கப்பட்ட சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் 5, 1872 ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் பிறந்நார்.
  • சிதம்பரம் பிள்ளை, ஷத்துக்குடி – கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.
  • சிதம்பரம் பிள்ளை, ஷத்துக்குடி அருகில் உள்ள பவள ஆலை வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக தொழிலாளர்கள் வேலை நேரம் குறைக்கப்பட்டு, ஊதியம் உயர்த்தப்பட்டது.
  • வ.உ.சி., பாலகங்காதர திலகரைப் பின்பற்றி தீவிரவாததை ஆதரித்தார்.

சுப்பிரமணிய சிவா

  • சுப்பிரமணிய சிவா, திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு கிராமத்தில் பிறந்தார். 1908-1921 இடைப்பட்ட காலத்தில் பலமுறை கைசெய்யப்பட்டார்.
  • ஜூலை 23, 1925 ல் காலமானார்.

சுப்ரமணிய பாரதியார்

  • சுப்பிரமணிய பாரதியார் திருநெல்வேலி மாவட்டதிலுள்ள எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • சுப்பிரமணிய பாரதியார், சுதேசிமித்ரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • பாரதியார், 1907 ஆம் ஆண்டு தமிழ் வாரப்பத்திரிக்கையான ‚ இந்தியா‛ பத்திரிக்கையின் ஆசிரியரானார். அதே சமயத்தில் ‚ பாலபாரதம்‛ என்ற ஆங்கிலப் பத்திரிக்கையை வெளியிட்டார்.
  • சுப்பிரமணிய பாரதியார், 1908 ஆம் ஆண்டு சென்னையில் மாபெரும் கூட்டத்தை நடத்தி, சுயராஜிய நாளை கொண்டாடினார். அவரது பாடல்களான வந்தே மாதரம், அச்சமில்லை-அச்சமில்லை, எந்தையும் தாயும், ஜெயபாரதம் போன்றவை அச்சிடப்பட்டு தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
  • 1909 ஆம் ஆண்டு பாரதியின் படைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

வாஞ்சிநாதன்

  • வாஞ்சிநாதன் , இரகசியமாக மணியாச்சி, புகைவண்டி நிலையத்திற்கு சென்று 1911, ஜூன் 17 ஆம் நாள் மாவட்ட ஆட்சியர் ஆஷ் அவர்களை சுட்டுக் கொன்று விட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டார். ஆட்சியர் ஆஷின் கொலை சென்னை வரும் அரசர் ஐந்தாம் ஜார்ஜை கொலை செய்வதற்கான ஒத்திகையே ஆகும்.

 

திருப்புர் குமரன்

  • ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில், திருப்புர் குமரன் 1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தமிழக வரலாற்றில் கொடி காத்த குமரன் என்று போற்றப்பட்டார்.

 

சத்தியமூர்த்தி

  • காமராசரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி ஒரு சிறந்த அரசியல் வாதி 1939 அம் ஆண்டு சென்னை மேயராக இருந்த போது பொதுக் கல்வி, தரமான குடிநீர் வழங்கல் மற்றும் வளமான வாழ்வு போன்றவைகளை மக்களுக்கு வழங்க பாடுபட்டார்.
  • சத்தியமூர்த்தி 1887 ஆம் ஆண்டு ஆகஸ்டு 19 ஆம் நாள் சென்னை மஹானாத்தில் உள்ள திருமயம் என்னும் ஊரில் பிறந்தார்.
  • சத்தியமூர்த்தி, 1919 ஆம் ஆண்டு மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம் மற்றும் ரௌலட் சட்டத்தை எதிர்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கூட்டுக் குழுவில் ஒரு உறுப்பினராக காங்கிரசால் நியமிக்கப்பட்டார்.
  • தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி தலைமையகத்திற்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிடப்பட்டது.

சி. இராசகோபாலாசாரி (இராஜாஜி)

  • 1930- ஆம் ஆண்டு வேதாரண்யம் சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தினார்.
  • 41 சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார்.
  • சுதந்திர கட்சியை தோற்றுவித்து இளம் இந்தியா என்ற பத்திரிக்கை நடத்தினார்.
  • சக்கரவர்த்தி திருமகள் (இராமாயணம்), வியாசர் விருந்து, (மகாபாரதம்) போன்றவை இவர் எழுதிய உரைநடை நூல்களாகும்.
  • 1955 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் டிசம்பர் 25, 1972 ஆம் ஆண்டு காலமானார்.
  • இவருடைய தந்திரமான அரசியல் செயல்களால் ‚சாணக்கியர் ‚ என அறியப்படுகிறார்.

காமராஜர்

  • கர்ம வீரர் என்று போற்றப்பட்ட காமராசர், விருது நகருக்கு அருகில் உள்ள விருதுப்பட்டி கிராமத்தில் ஜூலை 15, 1903 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • தமிழகத்தில் இராஜாஜிவுடன் சேர்ந்து வேதாரண்ய உப்புச் சத்தியகிரகத்தை மேற்கொண்டார்.
  • காமாராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார்.
  • லால்பகஷர் சாஸ்திரியை 1964 ஆம் ஆண்டு இந்திய பிரதமாராகவும் அவர் மறைவிற்கு பிறகு இந்திரா காந்தியை 1966 ஆம் ஆண்டில் இந்திய பிரதமராகவும் உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் அரசரை உருவாக்குபவர் என போற்றப்பட்டார்.
  • அக்டோபர் 2, 1975 ல் காலமானார். இவரை மக்கள் அன்போடு பெருந்தலைவர் என்றும் கர்ம வீரரர் என்றும் அழைத்தனர்.
  • நீதிகட்சி, தமிழில் ‘திராவிடன்‛, தெலுங்கில், ஆந்திர பிரகாசிகா மற்றும் ஆங்கிலத்தில்‛ ‚ ஜஸ்டிஸ் என்ற பத்திரிக்கையையும் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
  • 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி திரு. சுப்பராயலு தலைமையில் ஆட்சி அமைத்தது.
  • 1923 ஆம் ஆண்டு தேர்தலில் சுயராஜ்ஜியம் கட்சி வெற்றி பெற்றது.
  • 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ப.முனிசாமி நாயுடு தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால் 1932 ஆம் ஆண்டு இவரை பதவி நீக்கிவிட்டு, பொப்பிலி இராஜா பதவியேற்றார்.
  • நீதிகட்சி, சமூக அரசாணை 1921 மற்றும் 1922 மூலம் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கியது.

நீதிகட்சியின் சாதனைகள்

  • நீதிகட்சி, 1924 ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியத்தை ஏற்படுத்தியது. இது 1929 ஆம் ஆண்டு பொதுப் பணி தேர்வணையமாக மாறியது.
  • 1925 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகம் மற்றும் 1929 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன.
  • 1926 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • 1921 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தியாகராயச் செட்டியாரால் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

 

பெரியார்

  • ஈ.வே இராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் ஈரோட்டில் செல்வ வளம்மிக்க இந்து குடும்பத்தில் பிறந்தார்.
  • தமது 13 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார், தனது 19 வது வயதில் இல்லற வாழ்வைத் துறந்தார்.
  • 1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
  • 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி ‘திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சி.என். அண்ணாத்துரை

  • 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
  • 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் – மணியம்மை திருமணம் திராவிடக் கட்சிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
  • 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்.
  • 42 இவர் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அண்ணா தமிழக முதலமைசராக பொறுப்பேற்றார்.
  • 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ம் நாள் சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் என பெயர் மாற்றம் செய்தார்.
  • புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள செக்ரடேரியட் என்பதை தலைமைச் செயலகம் எனப் பெயர் மாற்றம் செய்தார்.
  • அதே தேதியில் சத்யமேவ ஜெயதே என்ற அரசுக் குறிக்கோளை வாய்மையே வெல்லும் என்று மாற்றி அறிவித்தார்.
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1968 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து அண்ணாவைப் பாராட்டியது.
  • பிப்ரவரி 3, 1969 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

டாக்டர் முத்துலெட்சுமி

  • டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஜூலை 30, 1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆவர். 1949 ஆம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண மருத்துவ மனையை தொடங்கினார்.
  • இவரது சீறிய முயற்சியால் சென்னை அடையார் புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
  • 1929 ஆம் ஆண்டு தமிழக சட்ட மன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
  • 1929ஆம் இவரது சீரிய முயற்சியின் காரணமாக தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • 1930 ஆம் ஆண்டு புனாவில் அனைத்திந்திய பெண்கள் மாநாட்டை நடத்தினார். 1933 முதல் 1947 வரை இடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்கத் தலைவியாக இருந்தார்.
  • அவ்வை இல்லம் என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார்.
  • டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி 1968 ஆம் ஆண்டு தனது 82வது வயதில் இந்த உலக வாழ்வைத் துறந்தார்.

டாக்டர் எஸ். தருமாம்பாள்

  • 1940 ஆம் ஆண்டு வரை சமுதாயத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு இல்லை ஊதியம் உயர்த்தப்படவில்லை.
  • கல்வி அமைச்சராக இருந்த திரு. ஆவிநாசி லிங்கம் செட்டியர் பிற ஆசிரியர்களுக்கு இனையான ஊதியத்தைத் தமிழ் ஆசிரியர்களுக்கும் வழங்க உத்தரவிட்டார்.
  • வீரத்தமிழன்னை‛ என்ற பட்டம் தருமாம்பாள் ஈ.வே.
  • ராமசாமி நாயக்கருக்கு பெரியார் என்ற பட்டத்தையும், எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு ஏழிசை மன்னர் என்ற பட்டத்தையும் வழங்கினார்.
  • தருமாம்பாள் தனது 69 வயதில் 1959 ஆம் ஆண்டு காலமானார்.

மூவலூர் இராமமிர்தம் அம்மையார்

  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1883 ஆம் ஆண்டு திருவாவூரில் பிறந்தார்.
  • காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு 1925ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநாட்டைக் கூட்டி, தேவதாசி முறைக்கு எதிராக குரல் எழுப்பினார். இதன் விளைவா டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர ஆணிவேராக அமைந்தது.
  • தமிழக அரசு ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு சமூகத்திட்டத்தை ஏற்படுத்;தி அதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம் என்று பெயரிட்டு இவரைக் கௌரவித்தது.
  • 1962 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.

 

Leave a Reply