10th Samacheer Kalvi History Study Material in Tamil – 2

 முதல் உலகப்போர் (கி.பி 1914-கி.பி 1918)

  • சர்வதேச சங்கம் கெய்சர் இரண்டாம் வில்லியம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை மற்றும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது என்று கருதினார். அவரால் ஆங்கிலேயர்களின் கூற்றான ‘ஆங்கிலேயர்களின் பேரரசில் சூரியன் மறைவதேயில்லை’ என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
  • ஜெர்மனியின் பாதுகாப்பிற்கு கெய்சர் இரண்டாம் வில்லியம் படை வலிமையைப் பெருக்கி வடகடலில் உள்ள ஹெலிகோலாண்ட் என்னுமிடத்தில் கப்பற்படையை நிறுத்தினார்.
  • முக்கூட்டு உடன்படிக்கை  1882 ஆம் ஆண்டு இத்தாலி ஜெர்மனி ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே ஏற்பட்டது. 1907 ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரான்சு இரஷ்யா முதலிய நாடுகள் தங்களுக்கிடையே முக்கூட்டு நட்புறவு உடன்படிக்கை செய்து கொண்டன.
  • 1882 மற்றும் 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற தி ஹேக்  மாநாடு சர்வதேச அமைப்பு ஏற்பட எடுத்துக்கொண்ட முயற்சி பயனற்று போனது.
  • ஆப்ரிக்க நாடான மொராக்கோவை பிரான்சு கைபற்றியது.
  • ஜெர்மானியப் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் பெர்லின் பான்தர் என்ற இருபோர்க்கப்பல்களை மொராக்கோவிற்கு அனுப்பினார்.
  • 1912 ஆம் ஆண்டு பால்கன் நாடுகள்-துருக்கிக்கு எதிராகப் போரை அறிவித்தன. இது முதல் பால்கன் போர் எனப்பட்டது.
  • 1913 ஆம் ஆண்டு பால்கன் நாடுகள் பல்கேரியா மீது போரை அறிவித்தது.
  • 1914-ஜூன் 28 ஆம் நாள் பாஸ்னிய தலைநகர் செராஜிவோ நகரில் செர்பிய தீவிரவாத இளைஞன் ஒருவனால் ஆஸ்திரிய நாட்டு பட்டத்து இளவரசர் பிரான்சில் பெர்டினான்டும் அவரது மனைவி இசபெல்லாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • ஆஸ்திரியா 1914 ஆம் ஆண்டு ஜூலை 28ம் தேதி செர்பியா மீது போரை அறிவித்தது.
  • முதல் உலகப் போர் 1914 ஆம் ஆண்டு சூலை மாதம் 28-ம் நாள் தொடங்கி 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் நாள் முடிவுற்றது. ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும் மைய நாடுகள்  எனவும் இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் நேசநாடுகள் எனவும் அழைக்கப்பட்டன.
  • ஜெர்மனி பெல்ஜியம் வழியாக பிரான்சின் மீது படையெடுத்தது.
  • 1914 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி மையநாடுகளுக்கு ஆதரவாக போரில் இறங்கியது.
  • 1915 ஆம் ஆண்டு டார்டனலஸ் போரில் ஆங்கிலப் படைக்கு ஏற்பட்ட தோல்வி பல்கேரியாவை மைய நாடுகள் பக்கம் சேர வைத்தது. 1916 ஆம் ஆண்டு ருமேனியா நேச நாடுகளுடன் சேர்ந்தது.
  • 1917 அம் ஆண்டு அமெரிக்கக் கொடிகளை ஏந்திய லூசிடானியா உட்பட நான்கு வணிகக்கப்பல்களை ஜெர்மனிய நீர் மூழ்கிக்கப்பல் மூழ்கடித்தன.
  • 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி இரஷ்யாவில் தோன்றியது. இரஷ்யாவை ஆட்சி செய்து வந்த சார் மன்னரின் ஆட்சி லெனினால் ஷக்கி எறியப்பட்டது.
  • ஜெர்மனி 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் நாள் அமைதியை நாடியது.
  • 1919 ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற அமைதி மாநாட்டின் மூலம் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
  • அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் முயற்சியால் 1919 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரிசில் அமைதி மாநாடு கூட்டப்பட்டது.
  • 1920 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் சர்வதேச சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நிறுவப்பட்டது.
  • உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர். [/su_list][/su_box]

 

Leave a Reply