10th Samacheer Kalvi History Study Material in Tamil – 5

ஜெர்மனியில் நாசிசம் (கி.பி.1933 – கி.பி.1945)

  • அடால்ஃப் ஹிட்லர் 1889-ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்தார்.
  • ஹிட்லர் 1919-ஆம் ஆண்டு நாசிசக் கட்சியினை தோற்றுவித்தார்.
  • ஹிட்லரின் ஆதரவாளர்கள் பழுப்பு நிறச் சட்டை அணிந்ததால் பழுப்புச் சட்டையினர் என அழைக்கப்பட்டனர்.
  • இவர்கள் ஹிட்லரை ஃபரர் தலைவர் என்று அழைத்தனர்.
  • நாசிசக் கட்சியின் சின்னம் சுவஸ்திகா ஆகும்.
  • ஹிட்லரது ரகசியப் படை கெஸ்டபோ ஆகும்.
  • ஹிட்லர் சிறையில் இருந்தபோது எழுதிய மெயின்காம்ப் என்ற நூல் நாசிசத்தின் வேதநூலாக விளங்கியது.
  • ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே தலைவர் என்ற கொள்கையை ஹிட்லர் அறிவித்தார்.
  • ஹிட்லர் நார்டிக் ஜெர்மானிய இனத்தவர் உயர்ந்தவர்கள் என்றும், செமிடிக் யுதர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்றும் கருதினார்.
  • ஹிட்லர் தொழிற்சங்கங்களுக்கு பதிலாக முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரநிதிகளை கொண்ட தொழில் முன்னேற்ற அமைப்பை உருவாக்கினார்.
  • ஹிட்லர் 1936-ஆம் ஆண்டு இராணுவ விலக்கு பெறப்பட்ட ரைன்லாந்தைக் கைப்பற்றினார்.
  • 34 1937-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலி மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து ரோம் – பெர்லின் – டோக்கியோ உடன்படிக்கை ஏற்படுத்தினார்.
  • 1938-ஆம் ஆண்டு ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைத்தார்.
  • 1939-ஆம் ஆண்டு மியுனிச் உடன்படிக்கையை மீறி செக்கோஸ்லாவாக்கியா முழுவதையும் ஜெர்மனியுடன் இணைத்தார்.
  • 1939-ஆம் ஆண்டு செப்டம்பா 1-ஆம் நாள் போலந்து நாட்டின் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி போலந்தைக் கைப்பற்றினார். இதுவே இரண்டாம் உலகப்போர் ஏற்படக் காரணமாயிற்று.
  • 1941-ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஆக்கிரமிப்பு தடை ஒப்பந்தத்தை மீறி ரஷ்யாவிற்கு எதிராக படை எடுத்தார். ஆனால் இப்படையெடுப்பு பெரும் தோல்வியை தழுவியது.
  • தேசிய அவை ஒரு ஜனாநாயக சட்ட அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்தக்கூடிய இடம் – வெய்மார்.
  • கூட்டுப்படை வளம்மிக்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததுரெயின் லாந்து.
  • ஹிட்லரின் செமிடிக் எதிர்ப்புக் கொள்கை யாரைக் கொல்லும் அளவிற்கு சென்றது – யுதர்கள்.
  • ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது. – பெயின்டர்.
  • 1941-ஆம் ஆண்டு ஹிட்லர் படையெடுத்த நாடு – ரஷ்யா.
  • கூட்டு நாடுகள் இந்நாட்டின் வருகையால் வலிமை பெற்றனர் – அமெரிக்கா.

Leave a Reply