10th Samacheer Kalvi History Study Material in Tamil – முதல் இந்திய சுதந்திர போர்

1857ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி அல்லது முதல் இந்திய சுதந்திர போர்

  • 1857ஆம் ஆண்டை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் ‚படை வீரர்கள் கிளர்ச்சி‛ என்றும், இந்திய வரலாற்று அறிஞர்கள் ‚முதல் இந்திய சுதந்திர போர்‛ என்றும் அழைக்கின்றனர்.
  • முதல் இந்திய சுதந்திர போரின் போது கானிங் பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தார்.
  • நாடு இழக்கும் கொள்கை – டல்ஹௌசி பிரபு துணைப்படைத்திட்டம் – வெல்லெஸ்லி பிரபு முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா.
  • நிலப்பிரபுக்களும், குடியானவர்களும் நிலவரி முறையினால் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
  • பெண்டிங் பிரபு காலத்தில் கொண்டு வரப்பட்ட வங்காள நில குத்தகை சட்டத்தின்படி குத்தகை சுதந்திரம் கொண்ட நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதால் நிலச் சொந்தகாரர்கள் பலர் வறுமைக்குத்தள்ளப்பட்டனர்.
  • இராணுவத்தில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பதவி சுபேதார் என்பதாகும். அந்த உயர் பதவிக்கு அளிக்கப்பட்ட ஊதியம் ஆங்கிலேய புதிய சிப்பாய்களின் ஊதியத்தை விட குறைவு.
  • 1856 ஆம் ஆண்டு கானிங் பிரபு பொதுப்பணிச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இச்சட்டம், தேவைப்பட்டால் இந்திய படை வீரர்கள் கடல்கடந்தும் போரில் ஈடுபட வேண்டும் என்று கூறியது.
  • 1857-ஆம் ஆண்டு மார்ச் – 29ம் நாள் கல்கத்தாவிற்கு அருகிலுள்ள பாரக்புரில் வங்காளப் படைபிரிவை சேர்ந்த மங்கள் பாண்டே என்ற இளம் இந்திய பிராமணப் படைவீரர் கொழுப்புத் தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்தார்.
  • இவர் கட்டாயப்படுத்தப்படவே, வேறு வழியின்றி தனது மேலதிகாரியை சுட்டுக்கொன்று, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
  • 1857-ல் வங்காளத்தில் பாரக்புரில்தான் முதலில் புரட்சி வெடித்தது.
  • 1857-ம் ஆண்டு மே மாதம் மீரட்டிலிருந்த படைபிரிவினர் வெளிப்படையாகப் புரட்சியில் ஈடுபட்டனர்.
  • இப்புரட்சியில் ஈடுபட்ட முக்கியத்தலைவர்கள் ஜான்சிராணி லட்சுமி பாய், நானாசாகிப், தாந்தியாதோப் பேகம் ஹஸ்ரத் மஹால், கன்வர் சிங் ஆகியோர்.
  • இப்புரட்சி நடைபெற்ற முக்கிய நகரங்கள் டெல்லி, கான்புர் மற்றும் லக்னோ.
  • இராணி லக்குமி பாய் 1858ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டார்.
  • 1858ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநரும் முதல் வைசிராயுமான கானிங் பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை வெளியிட்டார்.
  • இது இந்திய மக்களின் மகாசாசனம் (உரிமை சாசனம்) என்று கருதப்பட்டது.

Leave a Reply