10th Samacheer Kalvi History Study Material in Tamil – 8

 இந்திய விடுதலை இயக்கம் – முதல் நிலை

காந்திக்கு முந்தைய சகாப்தம் கி.பி. 1885 – கி.பி. 1919

  • தேதிய இயக்கம் தோன்றுவதற்காக காரணங்கள் ஆங்கில ஏகாத்திபத்தியம், ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு, நவீன தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து, இந்திய தலைவர்கள், அச்சகமும் செய்தித்தாள்களும்
  • இந்தியன் மிரர் என்ற பத்திரிக்கையும், பம்பாய் ( மும்பை) சமாட்சர், அமிர்த பஜார் பத்திரிகா, இந்து, கேசரி மராத்தா போன்ற பத்திரிக்கைகள் பொது மக்களின் கருத்துக்களைப் பிரதிபலித்ததுடன், மக்களிடையே தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
  • 1878 ல் கொண்டுவரப்பட்ட தாய்மொழிப் பத்திரிக்கைத் தடைச் சட்டம் பத்திரிக்கை சுதந்திரத்தைப் பரித்தது.
  • இந்தியர்களுக்கு பல்வேறு உயர்பதிவிகள் அளிக்கும் பொருட்டு சாசனச் சட்டம் 1833 மற்றும் 1858 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டன.
  • 1878ல் கொண்டுவரப்பட்ட ஆயுதச் சட்டமும் மற்றும் பிராந்திய மொழிச் சட்டங்களும் இந்தியர்களின் தேசிய உணர்வுகளை மேலும் அதிகப்படுத்தின.
  • 1885 ம் ஆண்டு ஒய்வு பெற்ற ஆங்கில அதிகாரியான ஆலன் ஆக்டேவியன் ஹியு+ம் என்பவரின் ஆலோசனை பேரில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
  • காங்கிரஸின் முதல் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
  • அக்கூட்டத்திற்கு டபிள்பூ. சி. பானர்ஜி.  தலைமை வகித்தார்.
  • தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, மதன் மோகன் மாளவியா, எம்.ஜி. ரானடே, கோபால கிருஷ்ண கோகலே, பெரோஷாமேத்தர், ஜி. சுப்ரமணிய அய்யர் போன்ற தாராள எண்ணம் கொண்ட பல தலைவர்கள் இம்மாநாட்டில் பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர்.
  • காங்கிரஸின் தலைவர்களாக சுரேந்திரநாத் பானர்ஜி, தாதா பாய் நௌரோஜி, பெரோஷாமேத்தர், கோபால கிருஷ்ண கோகலே எம்.ஜி. ராணடே போன்றோர் விலங்கினர்.
  • மிதவாதிகளின் கோரிகைகள் அரசியல் பிச்சைபோhல் உள்ளது எனக் காங்கிரஸில் இருந்த இளைய தலைமுறையினர் வர்னித்தனர்.
  • மிதவாதிகளின் அணுகுமுறையில் நம்பிக்கை இழந்தனர்.
  • அவர்களில் முக்கியமானவர்கள் பாலகங்காதர திலகர் (பால்), லாலாலஜபதிராய் ( லால்), பிபியின் சந்திராபால் (பால்), அரவிந்த கோஸ் ஆகியோர் ஆவர்.
  • தீவிரவாதிகள் தங்களது தீவிரக் கொள்கையினால் அவர்கள் தீவிரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
  • லோக்மான்ய திலகர், மராத்தியில் சேகரி என்ற பத்திரிக்கை மூலம் பிரிட்டிஷாரின் கொள்கைகளைச் சாடினார்.
  • ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்’ என்று முழங்கினார். அவர் கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வைத் ஷண்டினார்.
  • 1905-ம் ஆண்டு கர்சன் பிரபு வங்காளப் பிரிவினையை மேற்கொண்டார். கிழக்கு வங்காளம் மற்றும் அசாமை இணைத்து ஒரு மாகாணமாகவும்,மேற்கு வங்காளம் மற்றும் பீகாரை இணைத்து மற்றொரு மாகாணமாகவும் அறிவித்தார்.
  • வங்கப் பிரிவினை இந்துகளையும், முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சி என்று கருதினர்.
  • 1911-ம் ஆண்டு வங்காளம் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது. பக்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் இயற்றப்பட்ட ‘வந்தே மாதரம்’ என்னும் தாய்நாட்டு பற்றுமிக்க முழக்கத்தை காங்கிரசார் எழுப்பினர்.
  • 1857 ஆம் ஆண்டு தோன்றிய பெரும் புரட்சியில் முஸ்லீம்கள் ஈடுபட்டனர்.
  • 1906 ஆம் ஆண்டு டாக்கா நகரைச் சேர்ந்த நவாப் சலிமுல்லாகான் என்பவரது தலைமையில் முஸ்லீம்லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
  • 1907 ஆம் ஆண்டு நடந்த சூரத் மாநாட்டில் மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே காங்கிரஸ் தலைவரைத் தேர்தெடுப்பதில் மோதல் ஏற்பட்டது.
  • பாலகங்காதர திலகர் தீவிவரவாதிகளின் தலைவராகவும்,கோபாலகிருஷ்ண கோகலே மிதவாதிகளின் தலைவராகவும் திகழ்தார்.
  • 1909 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • கி.பி.1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தோன்றியது.
  • இப்போரில் பிரின்டன், பிரான்ஸ், இரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டனர்.
  • பாலகாங்காதர திலகர் 1916ம் ஆண்டு தன்னாட்சி கழகத்தை மும்பையில் நிறுவினார். அன்னிபெசன்ட் அம்மையார் சென்னையில் தன்னாட்சி கழகத்தின் கிளையினைத் தொடங்கினார்.
  • அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய நிபூ இந்தியா பத்திரிக்கையை ஆங்கில அரசு தடை செய்தது.
  • இந்திய தேசீய காங்கிரஸின் ஆண்டு மாநாடு 1916 ம் ஆண்டு லக்னோ நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இரு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றன.
  • மிதவாதிகளும், தீவிரவாதிகளும் ஒன்றுப்பட்டனர்.
  • காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் சுய ஆட்சி பெறுவதில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கிட ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். அந்த மாநாட்டில் தான் ஜவஹர்லால் நோரு, காந்தியை முதன்முதலாகச் சந்தித்தார்.
  • 1917 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆகஸ்ட் அறிக்கை இந்தியாவின் எதிர்கால அரசியல் சீர்திருத்தங்கள் பற்றியும் இந்தியாவில் படிப்படியாக தன்னாட்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தது.
  • 1919ம் ஆண்டு ஆங்கிலப் பாராளுமன்றம், மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டத்தை இயற்றியது.
  • ஆங்கிலோ – இந்தியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஆகியோர்களுக்கு தனித்தனி தொகுதிகள் வழங்கப்பட்டன.
  • 1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தது.
  • இச்சட்டத்தின் படி உத்திரவின்றி எவரையும் கைதி செய்யவும் விசாரணையின்றி சிறையில் அடைக்கவும் ஆங்கில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
  • ரௌலட் சட்டத்தை எதிர்த்து 1919 ஏப்ரல் 6-ம் நாள் நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • 1919ம் ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் பஞ்சாபின் முக்கியத் தலைவர்களான டாக்டர் சத்தியபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
  • இவர்கள் கைதை கண்டித்து சுமார் பத்தாயிரம் பேர் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் புங்காவில் கூடியிருந்த போது ஜெனரல் டயர் ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக் கொன்றார்.
  • இப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரவீந்திரநாத் தாகூர் நைட் வுட்  பட்டத்தை துறந்தார்.
  • துருக்கி பேரரசு துண்டாக்கப்பட்டு பிரிட்டனும், பிரான்சும் தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டன. உலக முஸ்லிம் மக்களின் சமயத் தலைவரான காலிப் அவமதிக்கப்பட்டார்.
  • 38 இந்தியாவில் முகமது அலி, சவுகத் அலி என்ற அலி சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினார்கள்.

Leave a Reply