10th Samacheer Kalvi History Study Material in Tamil – 9

இந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை

 காந்திய சகாப்தம் கி.பி.1920 – கி.பி. 1947

 • பாலகாங்தர திலகர் 1920 ஆம் ஆண்டு மறைந்தைத் தொடர்ந்து காந்தியடிகள் காங்கிரஸின் தலைவரானார்.
 • காங்கிரஸ் கட்சி 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியது.
 • முதற்கட்டமாக ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதிவிகளையும், பட்டங்களையும், விருதுகளையும் துறந்தனர்.
 • இரண்டாவது கட்டமாக வேலை நிறுத்தம் உப்பட பெரும் போரடங்களை நடத்தினர்.
 • மூன்றாவது முக்கிய மற்றும் கடைசிக்கு கட்டமாக வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்டது.
 • 1921 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அரசு தங்களது தேவைகளைப் புர்த்தி செய்யும் வரை மக்கள் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது.
 • 1922 ஆம் ஆண்டு ஜனவரி 5 ம் நாள் உத்திரபிரதேசத்தில் சௌரி – சௌரா ( கோரக்புர்) என்னும் இடத்தில் ஆயிரம் விவசாயிகள் பங்கேற்ற பேரரணி நடைபெற்றது. இதில் 22 காவலர்கள் உயிர் இழந்தனர்.
 • 1923 ஆம் ஆண்டு தேசீய இயக்கத்தை வழிநடத்த தேசத் தலைவர்களான சி. ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஒன்று சேர்ந்து சுயராஜ்ஜியக் கட்சியைத் தோற்றுவித்தனர்.
 • சி. ஆர். தாஸ் மரணம் அடைந்ததால் 1925 ஆம் ஆண்டு சுயராஜ்ஜிய கட்சியும் கலைக்கப்பட்டது.
 • ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை 1927 ஆம் ஆண்டு ஆங்கில அரசு நியமித்தது. இதற்கு சைமன் குழு என்ற பெயர்.
 • 1928 ஆம் ஆண்டு சைமன் குழு இந்தியா வந்த பொழுது கடும் எதிரிப்பு தெரிவிக்கப்பட்டது.
 • பஞ்சாபின் சிங்கம் என்றழைக்கப்பட்ட லாலாலஜபதி, சைமன் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காவலர்கள் நடத்திய தடியடியால் தாக்கப்பட்டு உயிர்துறந்தார். பகத்சிங் மற்றும் ஏராளமான கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர்.
 • 1929-ம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு லாகூரில் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்றது.
 • இம்மாநாட்டில் புரண சுதந்திரம் பெறுவதே இந்தியாவின் நோக்கம் என அறிவிக்கப்பட்டது.
 • டிசம்பர் 31, 1930 ஆம் ஆண்டு நல்லிரவில் – ‚ வந்தே மாதரம்‛ என்ற பாடலுக்கு இடையே ராவி நதிக்கரையில் இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.
 • ஜனவரி 26, 1930 ஆம் ஆண்டு நாடு முழுவதும் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டது.
 • 1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
 • காந்தியடிகள் மார்ச் 12 1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு போராட்டத்தை மேற்கொண்டார்.
 • சரோஜினி நாயுடு உட்பட 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து பாதயாத்திரை தொடங்கி, சுமார் 400 கி.மீ பயணம் மேற்கொண்டு குஜராத் கடற்கரை பகுதியில் உள்ள தண்டி வந்து அடைந்தார். இது தண்டி யாத்திரை அல்லது உப்புச் சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்டது.
 • காந்தியடிகள், தண்டியில் கடல் நீரிலிருந்து உப்பு காய்ச்சி ஏப்ரல் 6 ஆம் நாள் உப்புச் சட்டங்களை மீறினார்.
 • தமிழ்நாட்டில் சி.இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் திருச்சியிலிருந்து தொண்டர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு தஞ்சாவூர் கடற்கரைப்பகுதியில் வேதாரண்யத்தில் உப்புச் சட்டங்களை மீறி, உப்புக் காய்ச்சினார்.
 • முதல் வட்ட மேசை மாநாடு1930 ஆம் ஆண்டு லண்டன் நகரில் முதல் வட்ட மேசை மாநாட்டைக்கு கூட்டியது. காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இதுநாள் இம்மாநாடு தோல்வியில் முடிந்தது.
 • 1931 ஆம் ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
 • இவ்வொப்பந்தத்தின் படி சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்றும் 2வது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வது என்றும் காங்கிரஸ் ஒப்புக் கொண்டது.
 • 2ஆம் வட்ட மேசை மாநாடு இலண்டனில் 1931 ல் நடைபெற்றது. ஆனால் முழுச் சுதந்திரம், வகுப்புப் பிரச்சனை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் இம்மாநாட்டில் எட்டப்படவில்லை.
 • 1932-ல் காந்திஜி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது இங்கிலாந்து பிரதமர் இராம்சே – மெக்டொன்ல்டு வகுப்பு வாத அறிக்கையை வெளியிட்டார்.
 • 1932 ஆம் ஆண்டு அம்பேத்காருடன் ஏற்பட்ட புனா உடன்படிக்கைக்குப் பின் தனது உண்ணாவிரத்தை கைவிட்டார்.
 • 1932 ஆம் ஆண்டு மூன்றாவது வட்ட மேசை மாநாடு இலண்டனில் நடைபெற்றது.
 • ந்திய அரசு சட்டம் 1935 ஆம் ஆண்டு இயற்பட்டது.
 • 1937 ஆம் ஆண்டு மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 மாநிலங்களில் வெற்றி பெற்று, மந்திரி சபை அமைத்தது.
 • காங்கிரஸை கலந்தாலோசிக்கமால் இங்கிலாந்து, இந்தியர்களை இரண்டாவது உலகப்போரில் ஈடுபடுத்தியது.
 • இந்தியாவை போரில் ஈடுபடுத்தியதைக் காங்கிரஸ் விரும்பவில்லை.
 • ஆங்கில அரசப் பிரதிநிதி லின்லித்கோ இந்தியர்களை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தினார்.
 • 1939-ல் காங்கிரஸ் 8 மாநிலங்களில் அமைச்சரவைகளை ராஜினாமா செய்தன.
 • 1939 செப்டம்பர், 22 ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாடினார்.
 • முகமது அலி ஜின்னா 1940 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லிக் மாநாட்டில் தனது தனிநாடு கோரிக்கையை வெளியிட்டார்.
 • 39 இந்தியாவிற்கு நிர்ணயசபை அமைக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்றும், அரசப் பிரதிநிதியின் நிர்வாகக் குழுவில் இந்தியருக்கு இடம் அளிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இது ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்பட்டது.
 • 1942 ஆம் ஆண்டு சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழுவை கிரிப்ஸ் தூதுக்குகு என்று அழைக்கப்பட்டது.
 • காந்தியடிகள் கிரிப்ஸ் தூதுக்குழு உறுதி மொழிகளை திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை எனக் குறிப்பிட்டார்.
 • 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 ஆம் நாள் காங்கிரஸின் செயற்குழு, ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது.
 • இங்கிலாத்தில் தொழிற்கட்சி வெற்றிபெற்று கிளமண்ட் அட்லி தலைமையில் ஆட்சி அமைத்தது.
 • சுபாஷ் சந்திரபோஸ் 1927 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1939 ல் சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியை தொடங்கினார்.
 • ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் என்று அழைக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் தளைபதியாக சுபாஷ் சந்திரபோஸ் பொறுப்பேற்றார்.
 • இவர் ‘நேதாஜி’ என்றழைக்கப்பட்டார். நேதாஜி என்றால் தலைவர் என்று பொருள். பெண்கள் பிரிவு தமிழ்நாட்டைச் சேர்ந்த லஷ்மி என்ற பெண்ணின் தலைமையில் ஜான்சி ராணி பெயரில் அமைக்கப்பட்டது.
 • ‘டெல்லியை நோக்கிச் செல்‛ என்ற மற்றொரு புகழ் பெற்ற முழக்கமும் போசினுடையதாகும் 1946 ஆம் ஆண்டு பெத்திக் லாhரண்ஸ், எ.வி.
 • அலெக்ஸாண்டர் மற்றும் சர் ஸ்டார்போர்டு கிரிப்ஸ் ஆகிய மூவர் அடங்கிய குழு இந்தியாவிற்கு வந்தது. இக்குழு காபினெட் அல்லது அமைச்சரவை ஷத்துக்குழு என்ற அழைக்ககப்பட்டது.
 • ஜவஹர்லால் நேருவைப் பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசு 1946ல் நிறுவபப்பட்டது.
 • 1947 ஆண்டு மவுண்ட் பேட்டன் ஆங்கில அரசுப் பிரதிநதியாக பதிவியேற்றார் இவரே ஆங்கில அரசின் கடைசித் தலைமை ஆளுநர் ஆவார்.
 • 1947 ஜூன் 3 ல் மவுண்ட் பேட்டன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அது மவுண்ட் பேட்டன், திட்டம் அல்லது ஜூன் 3 ஆம் நாள் என்று அழைக்கப்பட்டது.
 • இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15 ஆம் நாள் விடுதலைப் பெற்றது.
 • டெல்லியில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற செங்கோட்டையில் ஆங்கில கொடி (பூனியன் – ஜார்க் ) இரக்கப்பட்டு, இந்திய மூவரணக்கொடி ஏற்றப்பட்டது.
 • மவுண்ட் பேட்டன் பிரபு சுதந்திரவின் முதல் தலைமை ஆளுனராகவும், பண்டித ஜவஹர்லால் நேரு முதல் பிரதமராகவும் பொறுப்பேற்றனர்.
 • பின்னர் சி. இராசகோபாலாச்சாரியார் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை ஆளுனராகப் பதிவியேற்றார்.
 • 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ம் நாள் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
 • இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது நாட்டில் ஏராள 565 சுதேசி அரசுகள் இருந்தன்.
 • காஷ்மீர், ஐதராபாத் மற்றும் ஜூனாகாத் ஆகியவை இந்தியாவுடன் இணைய தயங்கினர்.
 • வல்லபாய் பட்டேல் ‚இந்தியாவின் பிஸ்மார்க்‛ என்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் போற்றப்பட்டார்.
 • பிரென்ஞ்சு அரசின் அனுமதியுடன் பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் மற்றும் சந்திரன் நாகூர் ஆகிய பகுதிகள் 1954 ஆம் ஆண்டு இந்திய பூனியனுடன் இணைக்கப்பட்டன.
 • கோவா, டபூ மற்றும் டாமன் ஆகிய பகுதிகள் பார்ச்சுக்கிஸியரின் பகுதிகளாகும் அப்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். இந்திய அரசு இராணுவ நடவடிக்கைகளின் மூலம் 1961 ஆம் ஆண்டு அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தன.
 • இவை இந்திய பூனியன் பகுதிகளாக மாறின இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபைக்கு டாக்டர் இராசேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். இந்திய அரசியல் அமைப்பை எழுத சட்டவரைவுக்குழு டாக்டர் அம்பேத்காரை தலைவராக கொண்டு அமைக்க்பட்டது. இக்குழு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதி வழங்கியது. இதன்படி 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
 • டாக்டர் இராசசேந்திர பிரசாத் சுதந்திர இந்தியாவில் முதல் குடியரசுத் தலைவர் ஆனார்.

 

Leave a Comment

Your email address will not be published.